என்னைப் பற்றி....

My photo
Salem, Tamil Nadu, India
சொல்கிறேன்..

07 December, 2008

பிச்சை புகினும் கற்கை நன்றே!

ஓராயிரம் ரூபாய் பணத்தை செலுத்தி விட்டு வரிசையில் நின்றனர் அந்த இளம் தம்பதியினர்.

ஆறு மாதத்திற்கு பிறகு நேர் காணலுக்கு அழைப்பு வந்தது, அஞ்சலில். தம்பதியினரின் படிப்பு சான்றிதழ் சோதிக்கப்பட்டு, வருமான வரிக்கான இரசீதையும் சரி பார்த்த பின்னர் கேள்விகள் கேட்கலாயினர்.

நீங்கள் குடியிருக்கும் வீடு ஓனா?
ஆம்.

வீட்டில் ஏர் கண்டிஷன் உள்ளதா?
இருக்கிறது.

சொந்தமாக கார்.....?
இருக்கிறது மம் ..

வீட்டில் கம்ப்யூட்டர். இன்டர்நெட் கனக்சென் எல்லாம் இருக்கிறதா?
இருக்கிறது மம் ..

சரி...... அட்மிசனுக்கான நாளில் பதினைந்தாயிரம் கட்ட வேண்டும். அது மட்டுமல்லாது பள்ளி கூட கட்டட நிதியாக ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை கொடுக்க வேண்டும்.
சம்மதம் மம் ..

அப்புறம் மாதாமாதம் டியூஷன் பீஸ் ஆயிரம். ஆண்டு ஒன்றுக்கு "டூர்" போக வர சிலவு பத்தாயிரம். நோட் புக் எல்லாமும் சேர்த்து எட்டாயிரம்.
நல்லது மம் ..

சரி..... நீங்க இனி மேல் குழந்தையை பெற்றுக் கொள்ளலாம். பீசில் ஐம்பது சதவிகிதம் இன்னும் இரண்டு மாதத்திற்குள் கட்டி விட வேண்டும்...

தேங் யூ வெரி மச் மம் ..


2 comments:

Maximum India said...

நல்ல பதிவு

கல்வி கற்பித்தல் என்பது சேவை என்று இருந்த காலம் போய் வியாபாரம் என்று ஒரு பக்கம்.

கல்வி கற்பது அறிவை வளர்ப்பதற்கே என்ற நிலை போய் கல்வி என்பது பொருளாதாரத்தை வளர்பதற்கே என்று இன்னொரு பக்கம்.

இவையே இன்று நாம் காணும் அவல நிலைக்கு காரணம்.

Advocate Jayarajan said...

Thangal sinthanaikku en nanri Maximum India......

Related Posts Plugin for WordPress, Blogger...