என்னைப் பற்றி....

My photo
Salem, Tamil Nadu, India
சொல்கிறேன்..

13 September, 2009

மாண்பமை நீதியரசர் திரு கே.கண்ணன் தனது வலைப்பதிவுக்கு வைத்த முற்றுப்புள்ளி.

"மேலமை நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் சொத்து விவரங்களை வெளியிட வேண்டும், அதற்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தில் இருந்து எந்த விலக்கும் கிடையாது" என்று தீர்ப்பு வெளி வருவதற்கு முன்பே பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தின் மாண்பமை நீதியரசர் திரு கே. கண்ணன் அவர்கள் தனது சொத்து விவரங்களை வெளியிட்டு ஓர் உதாரண புருஷர் ஆனார். அப்படிப்பட்ட அவர் ஒரு நீதியரசர் என்பதோடு ஓர் சிறந்த வலை பதிவரும் ஆவார் என்ற சங்கதி அச்சமயத்தில் எல்லா செய்திதாள்களிலும் வெளிவந்தது.


அவர் தனது http://mnkkannan.blogspot.com/ என்ற வலைப்பதிவில் எழுதியுள்ள அத்தனை கருத்துகளும் சட்ட ஞான பெட்டகம்; பெரிய ஆய்வுக் களஞ்சியம். அவற்றில் சட்ட நுணுக்கம் அவரது விரல்களில் நர்த்தனம் ஆடும். ஒரு நீதியரசர் எப்படி இவ்வளவு வெளிப்படையாக ஓர் வலைபதிவராகவும் இருக்கிறார் நான் எண்ணிஎண்ணி வியந்திருக்கிறேன். எனவே நான் அவரது வலைப்பதிவை "பின்பற்றுபவனாக" என்னை பதிந்து கொண்டேன். இந்நிலையில் நான் நேற்று இரவு சுமார் 12 மணிக்கு எனது அலுவலக பணிகளை முடித்து விட்டு என் வலைப்பதிவு பக்கத்திற்கு வந்தேன். அப்போது நீதியரசர் ஏதோ ஓர் புதிய பதிவு போட்டிருப்பதை "Blogger - Dashboard"-இல் கண்டேன். உடனே அவரது வலைப்பதிவு பக்கத்திற்கு சென்றேன். அப்புதிய பதிவின் தலைப்பு "To Blog; or not to blog!" என்று இருந்தது. தலைப்பு சற்று பரபரப்பை ஏற்படுத்தியது. உடனே நானும் பரபரவென்று அவர் பதிந்த விவரத்தை வாசிக்க ஆரம்பித்தேன். அதன் முடிவில் "தான் வலைப்பதிவில் இருந்து விடை பெறுவதாக" கூறி அனைவருக்கும் "குட் பை" சொல்லி இருந்தார். நான் உடனே அதற்கு ஒரு பின்னூட்டம் எழுதி அனுப்பினேன். அது அவரது வலைப்பதிவில் அவரது அங்கீகாரத்திற்கு பிறகு பிரசுரம் ஆகியுள்ளது. அப்பின்னூட்டத்தை அப்படியே இங்கு கொடுத்துள்ளேன்.

மாண்பமை அய்யா அவர்களுக்கு,


வணக்கம்.

உங்கள் வலைப்பதிவுகளை தொடர்ந்து வாசித்து நிறைய நுணுக்கமான சட்ட ஞானமும், ஆங்கில இலக்கிய அறிவையும் பெற்று பயன் அடைந்து வருபவன் என்ற வகையில் தங்களின் இந்த 'பிரியா விடை' பதிவு என்னை சற்றே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

'சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவளாக இருக்க வேண்டும்' என்று சொல்லியதோடு மட்டுமல்லாமல், அதை செயலிலும் காட்டும் வண்ணம் உங்கள் சொத்து குறித்த தகவல்களை 'தானே முன்வந்து' வெளியிட்டு பூனைக்கு முதலில் மணியை கட்டி எங்கள் தமிழகத்தின் பெருமையை பார் அறிய செய்து விட்டீர்கள். சீசரின் மனைவி' கதை பற்றி நீங்கள் வலைப்பதிவில் சொன்னது எல்லா பத்திரிக்கைகளுக்கும் பெரிய செய்தியாக போய்விட்டது.

ஆனால் அதுவே தங்களுக்கு ஒரு நெருடலாக இருந்திருக்க வேண்டும் என்றே நான் நம்புகிறேன். வலைப்பதிவாளராக தொடர்ந்து எழுதலாமா, வேண்டாமா என்ற இரு வேறு சிந்தனைகள் உங்களுக்கு எழ எது காரணமாக இருக்கக்கூடும் என்று ஒரு வெளி ஆளாக நின்று பார்த்தால் ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது. அதாவது பத்திரிக்கைகள் உங்களை ஒரு வலைப்பதிவாளராக அடையாளம் காட்டி 'பிரபலம்' செய்தது உங்கள் நீதிப் பணிக்கு குந்தகம் ஆகி விடுமோ என்ற நீங்கள் கொண்டிருக்கும் ஓங்கிய நல்லெண்ணம்தான் (bonafide) என்று என்னால் கணிக்க முடிகிறது.

இப்படி நான் கணிப்பதற்கும் என்னிடம் ஒரு காரணம் உள்ளது. உங்கள் வலைப்பதிவை தொடர்ந்து வாசித்து வருபவன் என்பது எனது சக வழக்குரைஞர்களுக்கும், நண்பர்களுக்கும், நான் ஆசிரியராக உள்ள 'நமது சட்டப்பார்வை' திங்களிதழ் வாசகர்களுக்கும் நன்றாகத் தெரியும். அவர்கள் என்னை பார்க்கும் போது 'ஜஸ்டிஸ் இப்போ பிளாக்லே லேட்டஸ்டா என்ன எழுதி இருக்கார்' என்று கேட்பதுண்டு. இது அண்மை காலங்களில் அதிகமாகிவிட்டது. நான் "நீங்களே அவரோட பிளாக்-க்கு போய் வாசிக்கலாமே" என்று சொல்லி வருகிறேன். இப்படி நாளுக்கு நாள் அய்யா அவர்களின் எழுத்தின் மீதுள்ள மோகம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. 'பிரபலம்' கூடுகிறது.

ஆனால் இதுவே சிக்கல். நீதிபதி பதவி என்பது "நெருப்பாற்றின் குறுக்கே நூற் பாலம் காட்டி நடப்பதற்கு" ஒப்பாகும் என்பது அய்யா அவர்களுக்கும் நன்கு தெரியும். நீதிபதிகளின் சொத்து விவரத்தை கேட்குமளவு மக்கள் நேரடியாக பங்கு பெரும் மக்களாட்சி தற்போது நடந்து கொண்டு இருக்கிறது. 'நாட்டில் இவ்வளவு வழக்குகள் தேங்கி இருக்கும் போது வலையில் பதிக்க ஒரு நீதியரசருக்கு எப்படி நேரம் கிடைக்கிறது?' என்று கூட அடுத்து ஒருவர் கேள்வி கேட்கலாம். வீண் விமர்சனங்கள், வேண்டா விவாதங்கள் என நீண்டு அவை முடிவில் மன உளைச்சலை ஏற்படுத்திவிடக்கூடும். எனவேதான் அய்யா அவர்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளீர்கள் என்று நினைக்கிறன்.

தங்களின் இந்த முடிவை நான் எதிர்நோக்கியதுதான். எனவே எனக்கு வியப்பு ஏற்படவில்லை. சோகம் ஏற்பட்டது. ஆனாலும் அது ஆரம்பத்தில் சொன்னது போல 'சற்றே' தான். இந்த நேரத்திற்கு, சூழலுக்கு என்ன முடிவு எடுக்க வேண்டுமோ அதை மாண்பமை அய்யா அவர்கள் சரியாகவே எடுத்துள்ளீர்கள்.

எனினும் அய்யா அவர்கள் மீண்டும் சட்ட புத்தகம் எழுததொடங்கலாம், (நீதிமன்ற பணிக்கு யாதொரு குந்தகமும் வராமல் நேரம் ஒதுக்கி). ஆந்திர பிரதேச உயர் நீதிமன்றத்தின் மாண்பமை நீதியரசர் திருமிகு பி. எஸ். நாராயணா அவர்கள் இதுகாறும் 100 க்கும் அதிகமான சட்ட நூல்களை இயற்றி உள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

தங்களின் ஆழ்ந்த சட்ட ஞானம், அற்புத மொழி புலமை மேலும் ஓங்க, தாங்கள் தங்கள் இணையர் மற்றும் மக்களுடன் பல்லாண்டு ஆரோக்கியமாக வாழ இறைவனை வேண்டுகிறேன்.

வலைப்பதிவில் இருந்து பிரியா விடை தர மனம் ஒப்பவில்லை என்றாலும், 'மீண்டும் சந்திப்போம்' என்ற நினைவுடன் தலை வணங்கி உரிய பணிவடக்கத்துடன் விடை தருகின்றேன்.

நன்றி.
பி. ஆர். ஜெயராஜன், எம்.எல்., டி.எ.டி.ஆர்.,
வழக்குரைஞர்,
அரசு விருது பெற்ற சட்ட நூலாசிரியர், இசைவுத் தீர்ப்பாளர்,
உறுதி மொழிகளின் ஆணையர், ஆசிரியர் : நமது சட்டப்பார்வை.

27 August, 2009

மருத்துவர்களே கவனியுங்கள் ... இல்லாது போனால் உடன் இருப்பவரலே உங்கள் பெயர் கெட்டு போகக் கூடும்அன்பு நண்பர்களே,

வணக்கம்.

இன்று மருத்துவ உலகில் சேவை செய்யும் தாயுள்ளம் கொண்ட மருத்துவர்கள் நிறைய பேர் உள்ளனர். ஆனால் அவர்கள் பெயரும் புகழும் அவர்கள் அறியாமலேயே கெட்டு போகிறது. யாரால்? அருகில் அமர்த்திக்கொண்டிருக்கும் கம்பௌண்டர் அல்லது அட்டெண்டரால்.


அப்படி அவர்கள் என்ன செய்கிறார்கள்? மருத்துவ ஆலோசனை அதாவது கன்சல்டேசன் என்று மருத்துவரை சென்று பார்க்கச் சென்றால், 5 அல்லது 10 நிமிட ஆலோசனைக்கு பிறகு "டாக்டர் பீஸ் எவ்வளவு?" என்று நாம் கேட்கிறோம். ஆனால் மருத்துவரோ "பீஸ் வெளியில் அட்டெண்டரிடம் கொடுத்து விடுங்கள்" என்று நாசுக்காக சொல்கிறார். நாமும் அவர்கள் சொல்கிற பீஸ் கொடுத்து விட்டு வருகிறோம். இங்கு கவனிக்க வேண்டியது என்னவென்றால், அறையில் அமர்ந்திருக்கும் டாக்டரிடம் அந்த அட்டெண்டர் பீஸ் குறித்து எந்த விவரமும் கேட்பதில்லை. ஏதோ அந்த அட்டேண்டர்தான் டாக்டரின் பீஸ் நிர்ணயம் செய்பவர் போல பீஸ் கேட்கிறார். டாக்டர்கள் ஏன் இவ்வாறு செய்கின்றனர் என்று தெரிய வில்லை? கொஞ்சம் வியப்பாக உள்ளது. லஞ்சம் வாங்குகின்றவன் கூட நேரடியாக வாங்குகின்றான். ஆனால் செய்த சேவைக்கு டாக்டர் ஏன் தன்னுடைய பீஸ்-ஐ நேரடியாக வாங்குவதில்லை? ஆனால் இதுவே அவர்களுடைய பெயர் கெடவும் காரணமாக உள்ளது என்பதை அவர்கள் அறியாமல் உள்ளனர்.

ஒரு எடுத்துக்காட்டுக்கு இதை சொன்னால் சற்று விளங்கும்.....

நேற்று நான் எனது தாயாருக்கு உடல் நலம் சரியில்லை என்று மருத்துவரிடம் அழைத்து சென்றேன். அவரும் பார்த்து விட்டு இரண்டு ஊஸி போடச் சொல்லி மருந்து எழுதிக் கொடுத்தார். மேலும் வெளில் உள்ள சிஸ்டர் போட்டு விடுவர் என்று சொல்லி அனுப்பிவிட்டார். பீஸ் வெளியில் அமர்ந்து இருக்கும் அட்டெண்டரிடம் கொடுத்துவிடுங்கள் என்று சொல்லிவிட்டார். 'சரி' என்று நாமும் வெளியில் வந்தோம். உடனே அட்டெண்டர் பீஸ் "250 ரூபா கொடுங்க" என்று வெடுக்கென்று கேட்டார்.

எனக்கு சற்று வியப்பு. இருப்பினும், "பரவாயில்லை... டாக்டர் இப்போ ரொம்பதான் முன்னேறி விட்டார் போல... முதல்லே இவ்வளவு கேட்க மாட்டார்... ரொம்ப சிம்பிளான ஆளு எப்படி இப்படி ஆனார் என்று தெரியவில்லை" என்று பலவாறு மனதுக்குள் நினைத்துக் கொண்டே என்னிடம் இருந்த 500 ரூபா தாளை எடுத்து நீட்டினேன். அட்டெண்டர் 'சேஞ்' இல்லே. மருந்து கடையில் 'ஊஸி' மருந்து வாங்கி விட்டு வந்து பணம் கொடுங்க என்று இப்போது அவர் தாயுள்ளத்துடன் சொன்னார்.

நான் ஊஸி வாங்கி வந்து போட்டேன். பின் அம்மாவை அழைத்துக்கொண்டு அப்படியே ஏதோ சிந்தனையில் கிளினிக் வாசல் வரை வெளியில் வந்து விட்டேன். பிறகு உடனே நியாபகம் வந்து பீஸ் கொடுக்க சென்றேன். அப்போது என்னிடம் பீஸ் கேட்ட அந்த அட்டெண்டர் இல்லை. எனவே யாரிடம் பீஸ் கொடுப்பது என்று தெரியாமல் டாக்டர் அறையின் கதவை தட்டி "பீஸ் கொடுக்க மறந்து விட்டேன், வெளியில் அட்டெண்டர் காணோம்" என்றேன். அவரும், "ஓ... அப்படியா... என்றவாறு பீஸ் வாங்க தன கையை நீட்டினார். நானும் என்னிடம் தயாராக வைத்திருந்த 250 ரூபாயை எடுத்து கொடுத்தேன். அவர் வாங்க மறுத்து "நான் என் பீஸ்-ஐ ஏற்ற வில்லை. என்னோட பீஸ் அதே 100 ரூபாதான்" என்று சொன்னார்.

நான் நினைத்தது சரியாகத்தான் இருந்தது. 
அட்டெண்டர் வெகு எளிதாக 150 ரூபா வசூல் செய்ய முயற்சி செய்தது தெளிவாக 
இருந்தது. என் அருமையான டாக்டரின் சேவை உள்ளம் இந்த அட்டேண்டரால் 
கெட்டு போனது. அவருடைய மரியாதை உருவம் (Image) முதலில் கலங்கி 
பின் நிலை பெற்றது. இது தேவையா?

இதை டாக்டர் யாராவது படித்தால் அவர்கள் தங்கள் தொழிலை சுற்றி நடக்கும் நிகழ்வுகளை சற்றே கூர்ந்து அறியும்படி கேட்டுக் கொள்கின்றேன்.

முதற்கண் தயவு செய்து நீங்களே நேரடியாக பீஸ் வங்கிக் கொள்ளவும். பீஸ் போன்ற பண விடயத்தில் உங்கள் அட்டேண்டரின் மூக்கு நுழையாமல் இருந்தால் நன்று.

அடுத்து, உங்களை பார்க்க வரும் நோயாளிகளுக்கு நேரம் ஒதுக்கி 'appointment' கொடுங்கள். அந்த நேரத்தில் அவர்களை பரிசோதித்து சிகிட்சை தாருங்கள். இவ்வாறு நேரம் ஒதுக்குவதிலும் அடேண்டர்களை முழுமையாக சார்ந்திருக்க வேண்டாம். நேரம் பெற்று வந்த ஒரு நோயாளியை காக்க வைத்தால் அதைவிட கொடுமை வேறு ஏதும் இல்லை. இதிலும் அட்ட்டேன்டர்கள் காசு pannugirargal.

இன்று டாக்டர்களுக்கு நோயாளிகள் பஞ்சமில்லை. அதேபோல் நோயாளிகளுக்கு டாக்டர்கள் பஞ்சமில்லை. ஆனால் மனிதாபிமானத்திற்கு பஞ்சம் வந்து விடக்கூடாது.

தவிர மேலே இருக்கும் படத்திற்கும் இந்த பதிவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அடுத்த பதிவில் ஒரு சம்பந்தம் உள்ளது. அதை நாளை சொல்கின்றேன்.

உங்கள் அன்புக்கு என் நெஞ்சு நிறை நன்றி, வணக்கம்.


பி.ஆர்.ஜெயராஜன்.

10 August, 2009

அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியாக ஹிஸ்பானிக் இன பெண்மணி நியமனம்அமெரிக்காவின் முதலாவது ஹிஸ்பானிக் இன உச்ச நீதிமன்ற நீதிபதியாக சோனியா சோடோமேயர் நேற்று முன்தினம் (08/08/09) பதவியேற்றுள்ளார். மேலும் அவர் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் அமரும் வாய்ப்பைப் பெற்ற மூன்றாவது பெண்ணாகவும் திகழ்கிறார். அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் 220 ஆண்டு கால வரலாற்றில் ஒரு ஹிஸ்பானிக் இனத்தவர் நீதிபதியாவது இதுவே முதன்முறை. அதுபோல பராக் ஒபாமா பதவி ஏற்ற பிறகு அவர் நியமனம் செய்யும் முதல் உச்ச நீதிமன்ற நீதிபதியும் இவர்தான்.

இவர் இம்மாதம் 6-ஆம் தேதியில் செனட் சபையில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் 68 31 வாக்குகள் வித்தியாசத்தில் தெரிவானார். அவரது தெரிவுக்கு 59 ஜனநாயக கட்சி உறுப்பினர்களும் 9 குடியரசு கட்சி உறுப்பினர்களும் ஆதரவளித்திருந்தனர்.

அமெரிக்காவின் அதி உயர் அதிகாரத்துவம் பொருந்திய உச்ச நீதிமன்றமானது அரசியலமைப்புக்கு முரணான சட்டங்களை தடுத்து நிறுத்தும் வல்லமை பொருந்தியது. இந்நீதிமன்றத்தின் நீதிபதியாக ஒருவர் தெரிவு செய்யப்படும் பட்சத்தில், அவர் தனது ஆயுள் முழுவதும் அப்பதவியை தொடர்ந்து வகிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சோனியா சோடோமேயர் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் முன்னிலையில் பதவியேற்றார்.

அவரருகே அவரது தாயாரும் சகோதரரும் நின்றிருந்தனர். இதன்போது நேர்மையுடனும் பாரபட்சமின்றியும் தனது கடமைகளை நிறைவேற்றுவதாக சோடோமேயர் உறுதியளித்தார்.

புயர்டோ றிக்காவைச் சேர்ந்த ஏழைப் பெற்றோருக்கு மகளாகப் பிறந்த சோடோமேயர், நியூயார்க்கிலுள்ள பொதுக் குடியிருப்பில் வாழ்ந்தார்.அவருக்கு 9 வயதாக இருக்கும் போது அவர் தந்தை இறந்து விட, பெரும் பொருளாதார நெருக்கடி மத்தியில் தாயாரின் பராமரிப்பில் வளர்ந்தார். 1979 ஆம் ஆண்டு சட்டத் துறையில் பட்டம் பெற்ற சோடோமேயர், நியூயார்க் நகரிலுள்ள வழக்குரைஞர் ஒருவரின் உதவியாளராக தனது சட்டத்துறை வாழ்க்கையை ஆரம்பித்தார்.

26 June, 2009

"National Law School" என்று அழைக்கப்படும் தேசிய சட்ட கல்லூரிகளில் சேருவது எப்படி?
சட்டக் கல்விக்கு முன் எப்போதையும் விட அண்மைக் காலத்தில் மவுசு கூடி உள்ளது... காரணம் படித்து முடித்த உடன் நீதிமன்றப் பணியை தொடங்கி விடலாம் . ஆனால் இதை விட தற்போது நிறைய நிறுவனங்களில் நல்ல வேலை கிடைக்கிறது. கை நிறைய சம்பளம் உண்டு. குறிப்பாக "National Law School" என்று அழைக்கப்படும் தேசிய சட்ட கல்லூரிகளில் படித்து தேர்ச்சி பெறுபவர்களை இந்திய மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் பெரிய சம்பளத்துடன் வசதியான மேல்தட்டு வாழ்கையும் வரவேற்கிறது. நிறுவன வேலை வேண்டாம் என்று நினைக்கிறவர்கள் உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் பட்டையை கிளப்புகிறார்கள். விரைவில் தங்களுக்கு என்று ஒரு வட்டத்தை ஏற்படுத்திக்கொண்டு ஒரு வழக்கிற்காக ஒரு முறை நீதிமன்றத்தில் தோன்றி வாதாடினால் இவ்வளவு ரூபாய் என்று பில் செய்கிறார்கள். (Charge for per Appearance in a case).

நுனி நாக்கு ஆங்கிலம், நடை, உடை, பாணியில் ஒரு துணிச்சல் கலந்த துள்ளல், மனதில் கொள்ளை கொள்ளையாக நம்பிக்கை, சட்டப் புலமை ஆகிய இவை எல்லாவற்றையும் இந்த "National Law School" (சட்ட பள்ளிகள்) போதிக்கின்றன. அதாவது நமது நாட்டில் இவை மட்டும்தான் சட்டத்தை உள்ளபடியே கற்று கொடுக்கும் கல்லூரிகளாக செயல் படுகின்றன. வேறு சட்ட கல்லூரிகள் சரியாக நடப்பதே இல்லை. குறிப்பாக பெங்களூரில் சந்துக்கு ஒரு சட்ட கல்லூரி வீதம் நாற்பது தனியார் சட்ட கல்லூரிகள் உள்ளன. எதுவும் உருப்படி இல்லை. கல்லூரிக்கு போகமலே தேர்வு எழுத வசதி உண்டு. சட்டமே தெரியாமல் பட்டமும் பெற்று விடலாம். சரி விடுங்க ... அது எதுக்கு நமக்கு...?


நம்ம நாட்டில் 11 தேசிய சட்ட பள்ளிகள் உள்ளன. அவை வருமாறு:-


1. NLSIU, Bangalore.
2. NALSAR, Hyderabad.
3. NLIU, Bhopal.
4. WBNUJS, Kolkata,
5. NLU, Jodhpur.
6. HNLU, Raipur.
7. GNLU, Gandhinagar,
8. RMLNLU, Lucknow.
9. RGNUL, Patiala.
10. CNLU, Patna,
11. NUALS, Kochi.

இதில் சேர "CLAT (Common Law Admission Test)" எழுத வேண்டும். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் மேற்கண்ட பள்ளிகளில் ஏதேனும் ஒன்றில் சேர்த்து கொள்ளப்படுவார்கள். மொத்தம் 1400 இடங்கள் மட்டுமே உள்ளன. +2 தேர்வில் 55 சதவிகித மதிப்பெண் எடுத்து இருக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம் ரூ. 2500/-. ஒரு ஆண்டுக்கு சுமார் 2 லட்ச ரூபாய் செலவு ஆகும்.

இதை விட்டால், பூனாவில் உள்ள Symbiosis law school-லில் சேரலாம். இதற்கும் நுழைவு தேர்வு [SET (Symbiosis Enterance Test)] உண்டு. விண்ணப்ப கட்டணம் ரூ. 1500/. இதற்க்கு இடையில் டெல்லியில் உள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழகம் (National Law University) சட்டப் பள்ளியில் சேர்த்து படிக்கலாம். இதற்கும் நுழைவு தேர்வு எழுத வேண்டும். இந்த நுழைவு தேர்வுகளின் கேள்விகள் logical reasoning, legal reasoning, arithmetical reasoning, english, General Knowledge ஆகிய தலைப்புகளில் உள்ளது. கிட்ட தட்ட IAS தேர்வு போல் உள்ளது. நான்கு பதில்கள் கொடுக்கப்படிருந்தாலும், சட்டென்று பதில் டிக் செய்ய முடியாத அளவு கடினமானதாக உள்ளது. சென்னையில் நிறைய கோச்சிங் சென்டர் உண்டு. அதில் Sri Raman Law Academy கொஞ்சம் நல்ல பண்றாங்க.

ஆகா இந்த பள்ளிகளில் சேர்ந்து படித்தால் அந்த மாணவன் அல்லது மாணவிக்கு எங்கும் ஒரு பெருமை கூடவே ஒட்டிக்கொண்டு வரும். காரணம் முன் சொன்ன மாதிரி அவன் அல்லது அவளை அப்படி ஒரு ஒளி வட்டத்துடன் அங்கு தயார் செய்து விடுகிறார்கள்.

இந்த மாதிரி நம்ம தமிழ் நாட்டிலே இல்லையா என்று நீங்கள் ஆதங்கப்படுவது எனக்கு நல்ல புரியுது... இருக்கு. அது Tamil Nadu Dr. Ambedkar Law University, Chennai நடத்துகின்ற "School of Excellence in Law" . இதுவும் தேசிய சட்ட பள்ளிகளுக்கு சவால் விடுகிற மாதிரி சட்டம் கற்று தருகிறார்கள். இங்கு உங்களுக்கு ஒரு சந்தேகம் உடனே வந்திருக்கும்.

அதாவது பசங்க ஒருவரை ஒருவர் அடித்து கொண்ட லா காலேஜ் அல்ல இது. அது சென்னை உயர் நீதிமன்றம் அருகே உள்ள 'அம்பேத்கர் அரசு சட்ட கல்லூரியில்' நடந்த துரதிர்ஷ்ட வசமான சம்பவம். ஆனால் "School of Excellence in Law" என்ற சீர்மிகு சட்ட பள்ளி Tamil Nadu Dr. Ambedkar Law University வளாகத்திலேயே உள்ளது. இங்கு மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 80 மட்டும்தான். இந்திய மாணவர்கள் 70 பேர். NRI மாணவர்களுக்கு 10 இடம். அவ்வளவுதான்! இங்கேயும் படித்து முடித்தவுடன் வேலைக்கு வழி செய்து தரும் Placement cell உண்டு. எங்கே சேர நுழைவு தேர்வு இல்லை. +2 மதிப்பெண் அடிப்படையில் cut off தயாரிக்கப்பட்டு மாணவ, மாணவியர் சேர்த்து கொள்ளப் படுவார்கள். ஆண்டு கட்டணம் ரூ.60000/- வரும். முடிவில் B.A., B.L., (Hons.) பட்டம் கொடுப்பார்கள்.

(போன மாதம் இந்த Tamil Nadu Dr. Ambedkar Law University- இன் மாண்பமை துணை வேந்தர் (VC) பேராசிரியர் எஸ். சச்சிதானந்தம் அவர்களை சந்தித்து 'சட்ட பார்வை" இதழுக்காக நேர்காணல் செய்து அது இந்த ஜூன் இதழில் வெளியாகி உள்ளது. அந்த பக்கத்தை நீங்கள் மேலே பார்கிறீர்கள். )

இதற்க்கு அடுத்து தமிழக அரசு சட்ட கல்லூரிகளில் சேரலாம். Chennai, Madurai, Trichy, Tirunelveli, Coimbatore, Vellore, Chengalpattu ஆகிய இந்த இடங்களில் அரசு சட்ட கல்லூரிகள் உள்ளன. சேலத்தில் தனியார் சட்ட கல்லூரி உள்ளது.

புதுவையில் புதுவை அரசின் அம்பேத்கர் அரசு சட்ட கல்லூரி உள்ளது. இது புதுவை பல்கலை கழகத்துடன் சேர்ந்தது. சென்னையில் இருந்து ECR சாலையில் வரும்போது ஊருக்கு முன்னாடியே இந்த கல்லூரி வந்து விடுகிறது. இந்த கல்லூரி கொஞ்சம் அமைதியாக நடக்கிறது. இந்த ஊரிலேயே Balaji Law School என்று ஒரு தனியார் சட்ட கல்லூரியும் உண்டு. நல்ல நடக்குதா என்பது சந்தேகம். விவரங்கள் தெரியவில்லை.

எனவே சட்டம் படிக்க நினைப்பவர்கள் அல்லது அப்படி படிக்க வைக்க நினைக்கும் பெற்றோர்கள் முதலில் மேற்சொன்ன 11 சட்ட பள்ளிகளில் சேர்க்க முயற்சி செய்யலாம். கூடவே Symbiosis Law School மற்றும் National Law University, Delhi -யும் முயற்சிக்க வேண்டும். இதுக்கு எல்லாத்துக்கும் கொஞ்ச நாள் வித்தியாசத்தில் நுழைவு தேர்வு நடக்கும்.

அடுத்து இந்த பள்ளிகளில் இடம் கிடைக்காவிட்டால், சென்னை SOEL (School of Excellence in Law) முயற்சி செய்யலாம். அடுத்து புதுச்சேரி சட்ட காலேஜ். மற்ற காலேஜ் எல்லாம் இதற்க்கு அடுத்துதான்.

வாழ்த்துகள்.

பி. ஆர். ஜெயராஜன்.

23 June, 2009

இந்த அளவு பயங்கரமாக அலர்ஜி ஆகி இருப்பதை நீங்க பார்த்து உள்ளீர்களா?


வணக்கம்.

விவரம் தெரிஞ்சவங்ககிட்டே கிட்டே விளக்கம் கேட்டு இந்த பதிவு. கொஞ்சம் மருத்துவ அறிவு சம்பந்தமாக இருக்கும். அதே சமயம் அனுபவப்பட்டவங்க அட்வைஸ் செய்தாலும் நல்ல இருக்கும்.

மேட்டர் இதுதான். ஆனா இதயம் பலகினமாக உள்ளவங்க இந்த பதிவோட இணைக்கப்பட்டுள்ள காணொளியை (வீடியோ) பார்ப்பதற்கு முன் கொஞ்சம் ஆசுவாசப் படுத்தி உங்களை தயார் செய்து கொள்ளுங்கள்.

இந்த காணொளியில் நீங்க பார்த்துகிட்டு இருப்பது என்னைத்தான். எனக்கு திடீரென்று ஒரு நாள் உதடு வீங்க ஆரம்பித்தது. சரி ஏதாவது பூச்சி அல்லது எறும்பு கடித்திருக்கும் என்று நினைத்தோம். ஆனால் நேரம் அதிகமாக அதிகமாக வீக்கமும் அதிகமாகியது. உதடு பார்க்கவே பயங்கரமான அளவிலே வீங்கிக் கொண்டே வந்தது. கொஞ்ச கொஞ்சமா கன்னம் ரெண்டும் வீங்க ஆரம்பித்தது. இப்படியே முகம் பூராவும் வீங்கி போச்சு.

உடனே தோல் டாக்டர் கிட்டே போனோம். அவர் இது ஏதோ அலர்ஜி போல் தெரிகிறது. இப்போ ஒரு அவிலும் பெட்னிசல் இன்ஜெக்சன் போடுறேன் என்று சொல்லி உடனடியாக போட்டார். citizian மாத்திரை எழுதி கொடுத்தார். அதே சாப்பிட்டு வந்து 3 நாள் கழித்து படிப்படியாக வீக்கம் குறைய ஆரம்பித்தது.

அங்கிருந்து ஒரு 10 நாள் போன பின்னாடி டாக்டர் சொன்ன மாதிரி எனக்கு ஒரு அலர்ஜி டெஸ்ட் செய்யப்பட்டது . அதில் தூசி மற்றும் மீன் கறி அலர்ஜி என்று அவர் சொன்னார். எனவே குறிப்பா தூசி பக்கம் போக வேண்டாம். மீன் தொடவே கூடாது. அதோட ஏதாவது காரணத்திலே தாங்க முடியாத மன உளைச்சல் அல்லது வேதனை ஏற்பட்டாலும் அது முக நரம்புகளை பாதித்து முகத்தை வீங்க செய்யலாம். எனவே கூடுமானவரை இதையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்றார்.
இது மாதிரியே நானும் இருந்தேன். ஆனால் அடுத்த ஒரு வருசத்திலே மறுபடியும் முகம் வீங்கியது. அதே சிகிச்சை. இது இப்படியே தொடர் கதை ஆகியது.

டாக்டர் ஒரு நிரந்தர மருந்து சீட்டு (prescription) எழுதி கையிலேய கொடுத்திட்டார். அதில் முகம் வீக்கம் தெரிய ஆரம்பித்தவுடன் யாரையும் Avil and Decadran ஊஸி போட்டுக்க சொல்லி இருக்கிறார். அப்படியே பின்வரும் மாத்திரை சாப்பிட சொல்லியிருக்கிறார்.

Tab. Atarax 25 mg.
Tab. Lystea
Tab. Ebast 10 mg.
Tab. Sompras.
Tab. Wysolone 10 mg.

ஒரு வரம் பத்து நாள் நான் படர கஷ்டம் பாக்க ரொம்ப வேதனையாக இருக்கும். அந்த வீக்கம் அப்படியே இறங்கி கழுத்து பக்கம் வர்றப்போ என்னலே தண்ணி கூட குடிக்க முடியாது.

டாக்டர் இந்த மாதிரி அலர்ஜிக்கு நிரந்தர வைத்தியம் இல்லே என்று சொல்கிறார்? அலர்ஜி எது என்று தெரிந்த பிறகு அதிலிருந்து விலகி இருக்க வேண்டும் என்று சொல்கிறார். நானும் டாக்டர் சொன்ன மாதிரி விலகிதான் உள்ளேன். ஆனாலும் கொஞ்சம் தூசி அதிகம் உள்ள ரொம்ப நாள் புழங்காத இடம் என்றால் உடனடியாக வீக்கம் வந்து விடுகிறது.
விவரம் தெரிஞ்சவங்க வழிகாட்டினா ரொம்ப உதவியாக இருக்கும். இப்போ போன மாதம் எனக்கு முகம் வீங்கினப்போ வீடியோ எடுத்து blog-இல் போட சொல்லி இது தொடர்பா ஏதாவது கருத்து, ஆலோசனை, அட்வைஸ் வருதா என்று என் சிற்றப்பா மகன் பார்க்கச் சொன்னார்.
இந்த கானொளியில் காணப்படும் இடம் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள எங்க மாமனார் வீட்டு மேல்மாடி. பழைய சாமான்கள், லொடலொட கட்டில், அதன் மீது கிழிச்சு போன மெத்தை, பழைய பேப்பர், புத்தகம் எல்லாம் போட்டு வைக்கிற இடம். மேலே அச்பெச்ட்டஸ் கூரை. விட்டலச்சர்யா படத்தில் வர்ற பழைய குகை மாதிரி எங்கேயும் சிலந்தி வலை. நான் சென்னை போன எனக்கு அவங்க தங்க கொடுக்கிற இடம் இதுதான். அவ்வளவு பாசம்! ராத்திரி போய் தங்கி அடுத்த நாள் காலையில் எழுந்து பார்த்தல் என் முகம் இப்படி வீங்கி போச்சு. மதியம் ஆக ஆக அதிகம் ஆகி விட்டது. அதை அப்படியே என் சோனி டிஜிட்டல் காமிராவில் படம் பிடித்து இங்கே உங்களுக்கு காட்சி படுத்தி உள்ளேன்.


26 May, 2009

MODEL GENERAL POWER OF ATTORNEY BY PERSON RESIDING ABROAD - வெளிநாட்டில் வசிக்கும் ஒருவர் எழுதி தரும் பொது பகர அதிகார பத்திரம்

வெளிநாட்டில் வசிப்பவர்கள் தங்களுக்காக ஒரு செயலை நமது இந்திய நாட்டில் செய்ய பகர அதிகார முகவர் அதாவது ஏஜண்ட் நியமனம் செய்ய வேண்டும். அதற்கு general power of attorney deed எழுதிக் கொள்ள வேண்டும்.
பொதுவாக இப்படிப்பட்ட "பவர் ஆப் அட்டார்னி" பத்திரங்களை இந்தியாவில் எழுதி கொண்டால் ஒன்று ரெஜிஸ்டர் செய்யலாம் அல்லது நோட்டரி பப்ளிக் முன் அட்டஸ்டேசன் செய்து கொள்ளலாம். ஆனால் வெளிநாட்டில் வசிப்பர் இந்த பத்திரம் எழுதிக்கொண்டல் அதை அங்குள்ள இந்திய தூதரக அலுவலர் முன்னிலையில் கையொப்பம் செய்து அட்டஸ்டேசன் செய்ய வேண்டும்.
அதற்கான ஒரு முழுமையான மாதிரி பத்திரம் வருமாறு.
கடல் கடந்து வாழும் இந்தியர்களுக்கு பயன் தரலாம் என்ற நம்பிக்கையில் இந்தப் பதிவு.
வெளிநாட்டில் வசிக்கும் ஒருவர் எழுதி தரும் பொது பகர அதிகார பத்திரம்
MODEL GENERAL POWER OF ATTORNEY BY PERSON RESIDING ABROAD
GENERAL POWER-OF-ATTORNEYTHIS POWER-OF-ATTORNEY is executed on this the .......... day of........................... in the year.............................. by me, ............................... daughter of ............................... aged......... years permanently residing in............................... working in............................... holder of Passport No................ issued at............................. by the Indian Embassy, presently having come down to ............................... and temporaily residing in ............................................ in favour of my mother............................... aged........... residing in ............................... whose specimen signature is attested herein below,
WHEREAS I am permanently employed and working in..............................and I am consequently unable to look after the affairs of my properties and belongings in India, particularly in .........................; and
WHEREAS my mother mrs ..............................is competent to look after my affairs as effectively and efficiently as I myself can do; andWHEREAS it may be necessary for me to dispose of encumber, alienate or otherwise deal with my property, more specifically the property having an extent of......................... in Sy. No/municipal khatha no: ........... of ......................... Village,/town ......................... District, ..........State with the building situated thereon bearing No. ...............; and
WHEREAS I, the aforesaid .......................... for the purpose of carrying out the various acts, deeds and things, am desirous of appointing my mother .......................... residing in......................... as-my attorney.
I hereby appoint her my attorney in my name and on my behalf to execute or to do all or any of the following deeds, acts or things, which I have to do relating to, and in connection with, the property and the building referred to above:—
1. To give, move and present before the appropriate authorities, applications, petitions, affidavits etc. necessary for the purpose of doing acts, deeds and things in relation to the land and the building referred to above.
2. To execute, sign, enter into, acknowledge perfect and do all such conveyances, leases, mortgages, transfers, surrenders, releases, assurances, deeds, agreements, instruments, acts and things as shall be requisite or as the said attorney may deem necessary or proper for or in relation to all or any of the purposes or matters aforesaid.
3. To sign, execute, present for registration, register, admit execution or registration or otherwise perfect or cause to be signed, executed, registered and perfected any agreement, lease, conveyance, reconveyance and other assurances in respect of the property referred to above, which may, in the opinion of my said attorney be expedient or necessary;
4. To represent me before all Government, Municipal, local or any other authorities constituted for any purpose whatsoever and to receive compensation and to give discharge in regard to any claim whatsoever arising howsoever in regard to the aforesaid properties.
5. To lease out the building or to do such other thing in relation to the use or occupation of the building or in any other manner which is permissible under law.
6. To apply for demand, sue for,, recover receive and from all and every or any person or persons whomsoever concerned or chargeable therewith all and every sum or sums of money, debts, goods, effects, securities, stocks, shares, debentures, fixed deposit receipts, rent and interests which shall or may belong to or be or become due or payable to me.
7. To take possession of all property, lands and tenements as I am now or may in any way during my absence from India become entitled to and to bring any action or other proceeding in respect or for or concerning all or any such property, lands or tenements and also to demand, receive, recover and give receipts for the rents and profits thereof respectively for my use and to let, mortgage or create charge or sell or absolutely dispose of and convey the same or any part thereof or to join with any other persons or person having or who may hereafter have a share or interests with me in any property, lands or tenements in letting, selling or absolutely disposing of the same.
8. To sign in my name and as may act and deed, to execute, verify and deliver and plaint, written statement, affidavits, complaints, contract, agreement, lease, mortgage or assignment or conveyance of and concerning any property, land or tenement belonging or which may hereafter belong to me or any part thereof and to receive and sign and give or to join the signing and giving receipts or discharges for the moneys arising from such matters, transfers or transfer.
9. To appear before any registering authority and to present before him any instrument whether signed and executed by me or by my said attorney to admit the execution of the said deed or deeds, to admit the receipt of consideration and to do any act, deed or thing that may be necessary to complete the registration of the said deed or deeds and, when it has or they have been returned to them or him after being duly registered, to give proper receipts and. discharges for the same.
10. To commence, carry on, or defend all actions and other proceedings concerning my property, whether movable or immovable or any part thereof or concerning anything in which I may be a party, And to compound, compromise or submit to arbitration all actions, suits, accounts, claims and disputes between me and any other person or persons. And to engage any pleader, lawyer or advocate or Chartered Accountant to conduct any case, suit, appeal or other proceedings, concerning anything in which I may have any interest.
11. To accept the transfer of any stock, funds, shares, annuities and the securities which shall or may at any time hereafter be transferred to me and to vote at the meeting of any company, or otherwise to act as my attorney or proxies in respect of any stocks, shares or other investments now held or which may hereafter be acquired by me in any company.
12. To invest any of my moneys in such manner, at such rate of interest and upon such security as my said attorneys shall in his absolute discretion think fit, and from time to time to alter and vary the said investments, as aforesaid, to deposit the said moneys or any part thereof with any Financial Institution, Bank, Unit Trust of India or whom my said attorneys shall think fit to entrust.
13. For any of the purposes aforesaid and generally in my name and as my act to draw, endorse and sign any cheque or other negotiable instrument, dividend or interest warrants or other investments payable to me and to deposit in and operate upon the accounts standing in my name now or hereafter at any Bank or elsewhere.
14. To appoint and remove in his absolute discretion any substitute for or agent under my said attorney in respect of all or any of the matters aforesaid, upon such terms as he may think fit.
15. And generally to act as my attorney or agent in relation to the aforesaid properties and all other matters related thereto and on my behalf and for me to execute and do all instruments, acts, deeds, matters and things as fully and effectually in all respects as I myself could do if I were personally present. And execute and perform all and every other act, matter and thing whatsoever in any wise, necessary or expedient to be done in my concerns and business of every or any nature or kind arising during my absence from India as fully and effectually as if I were personally present to do the same.
AND I hereby ratify and confirm all such acts, deeds and things done by my said attorney by virtue of these presents and I hereby agree that the same shall be binding on me as if it were done by me and I undertake to ratify and confirm all and whatsoever my said attorney shall do or cause to be done by virtue of this power-of-attorney.
IN WITNESS WHEREOF, I, the aforesaid .......................... have signed this deed of power-of-attorney on this the.......... day of .................... in the presence of the following witnesses:
Executant
Specimen signature of the Attorney. ;
Witnesses:
1.
2.
Executed and signed before me in my Office at.........................on this the.......... day of....................(Seal & Signature of the Indian Embassy)

22 May, 2009

ஒரு வக்கீலின் கோடை விடுமுறை காலம் - ஏற்காட்டில் ஒரு அரிசியின் விலை 20 ரூபா.


நீதிமன்றம் கோடை விடுமுறைக்காக மூடப்பட்டது. (அப்படி திறந்தே இருந்தாலும் நாங்கள் நீதிமன்றம் செல்ல முடியாத அளவு ஏதேதோ கசப்பான சம்பவங்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து நடைபெற்று விட்டன. போனது போகட்டும் .... நடந்ததை மறந்து நீதிமன்றம் கிளம்பு தயாரானோம். சில நாட்களே சென்றோம். கோடை விடுமுறை வந்து விட்டது.)

வீட்டில் தாய்குலம் "இப்போதான் கோர்ட் லீவ் விட்டட்சு இல்லே.... எங்கேயாவது மலைப் பிரதேசமா கூட்டிக் கிட்டு போங்களேன்.... அடிக்கிற வெய்யிலுக்கு கொஞ்சம் ஜில்ல்ன்னுனாவது இருக்கும்" என்று மெதுவாக ஆரம்பித்தார்கள். நானும் பின் விளைவுகளை சற்றே யோசித்து "நமக்கேன் பொல்லாப்பு" என்று வேகமாக தலையை அசைத்து வைத்தேன். (நாமென்ன மலைப் பிரதேசம் என்ற உடன் இமய மலைக்கா கூட்டிக்கொண்டு போகப்போகிறோம்? இதோ எங்கள் ஊருக்கு பக்கமா இருக்கும் அழகிய "ஏற்காடு" -தான் எங்களுக்கு (சாரி எனக்கு) சிம்லா, குலு, மனாலி எல்லாம்.)

"சரி ஒரு செட் டிரஸ் எடுத்துக்கோ. இன்னிக்கு மதியம் போயிட்டு நாளைக்கு சாயங்காலம் வந்துடலாம் ... " என்று எனது புதிதாக வாங்கிய "ஹோண்டா பிளசர்" (ஹோண்டா சிட்டி கார் அல்ல) வண்டியை எடுத்தேன். தாய்குலம் உடனே புரிந்து கொண்டு விட்டது. (என்னே இருந்தாலும் ஒரு வக்கீல் சம்சாரம் இல்லே?)

உடனே, "என்னங்க எத்தினி தடவைதான் ஏற்காடு போறது... ஒரு கொடைக்கானல், ஊட்டி எல்லாம் கிடையாதா? " என்று இழுத்தார்கள். நான் சற்று கோபமாக முகத்தை வைத்து கொண்ட மாதிரி நடித்து "இப்போதைக்கு ஏற்காடுதான் முடியும். இல்லேன்னா இதுகோட கிடையாது" என்றவாறு லேசாக (அடித்தொண்டை கீச்சுக்குரலில்) ஒரு சவுண்ட் விட்டேன். நான் தோற்று போனதை உணர்ந்து என்னை மேலும் துன்புறுத்தாமல் தாய்குலம் ஏற்காடுக்கு கிளம்ப தயாரானது.

ஒருமாதிரியாக அந்தி மயங்கும் நேரத்தில் நானும், தாய்க்குலமும் ஸ்கூட்டரில் மெல்ல ஏற்காடு மலைப்பாதையில் பயணிக்க ஆரம்பித்தோம். குழந்தைங்க எல்லாம் அவங்க பாட்டி வீட்டுக்கு போய் இருக்காங்க. எங்கள் வீட்டில் இருந்து 20 கிலோ மீட்டர் தூரம் ஏற்காடு. மெல்ல போனாலும், சுமார் முக்கள் மணி நேரத்தில் சென்று விடலாம். 20 கொண்டை ஊசி வளைவுகள். இவற்றில் 6 வளைவுகளை கடந்து விட்டாலே காத்து ஜில் என்று வீச ஆரம்பித்து விடும். ஒரு வழியா ஏற்காடு வந்துட்டோம். கிளைமேட் நன்றாகவே இருந்ததில் தாய்குலத்திற்கு ரொம்பவே சந்தோசம்.

ஏற்கனவே ஒரு பழைய கிளைண்டுக்கு போன் போட்டு ஒரு ரூம் எடுத்து வைக்க சொல்லிட்டேன். அவரும் ரொம்ப அலைஞ்சு திருஞ்சுதான் ரூம் போட்டு இருப்பார் போல. அந்த நேரத்தில் வானம் சற்றே கறுத்து காணப்பட்டதை போல அவர் முகத்தில் சற்றே கடுப்பு காணப்பட்டது. சீசன் நேரம்.... ரூம் கிடைப்பது கொஞ்சம் கஷ்டம்தான், அதுவும் நாம் கொடுக்கிற 500 ரூபாயில்.பஸ் ஸ்டாண்ட்க்கு எதிர் புறத்தில் ஷோபா லாட்ஜில் தங்கி கொண்டோம். "ஷேர்வரோய்ஸ் ஓட்டலில்" சாப்பிட்டால் பர்ஸ் தாங்காது என்பதை உணர்ந்து, அதற்க்கு அருகில் உள்ள "மலர் ரெஸ்டாரெண்டில்" சாப்பிட்டு முடித்தோம்.அடுத்து அப்படியே ஒரு குட்டி வாக் "லேக்" (ஏரி) வரையில். நன்றாகவே இருந்தது. எனக்கென்னவோ எங்கள் ஏற்காடுதான் சுவிட்சர்லாந்து. ....

அடுத்த நாள் காலை குளித்து முடித்து, நேராக "ராஜராஜேஸ்வரி கோயில்" போய் சாமி கும்பிட்டோம். (ஸ்கூட்டர் என்பதால் நினைத்த இடத்திற்கு உடனே வண்டியை கிளப்பிக் கொண்டு போனோம்). அடுத்து தாய்குலத்திற்கு இன்னும் பக்தி அதிகமாகி "அப்படியே முருகன் கோயிலுக்கும் போயிட்டு வந்திரலங்க" என்றார். ஓட்டல் தமிழ் நாடு ஒட்டி போற ரோட்லே போன முருகன் கோயில் வரும். அங்கே போய் சாமி கும்பிட்டோம். காலை டிபன் ஓட்டல் தமிழ்நாடில் முடித்தோம். சுமார்தான்.அதற்கும் கீழே ஏற்காடு ஏரி உள்ளது. போட்டில் போக ஆசைப்பட்டு அங்கு போனோம்.


அங்கு போட் ஹவுஸ் வாசல் முன்னாடி ஒருவர் உட்கார்ந்து சுறுசுறுப்பா ஒரு தொழில் செய்து கிட்டு இருந்தார். அவரை சுற்றிலும் ஒரு சின்ன கூட்டம். என்னன்னு கிட்டத்திலே போய் பார்த்த.... "அரிசியிலே நம்ம பேர் எழுதி அதை கீ செய்ன்லே போட்டு தர்றார்... அதோட விலை 20 ரூபா. "நிறைய பேர் அந்த மாதிரி ஒரு அரிசியே 20 ரூபா கொடுத்து வாங்கி சந்தோசமா போய்கிட்டு இருந்தாங்க... உண்மையிலே ஒரு அரிசி 20 ரூபா கொடுத்து வாங்கற மாதிரி ஆயிடுமா......? அப்படியே கொஞ்சம் நினைச்சு பார்த்து பயந்து போய் பிரமிப்புலே நின்னுட்டேன். அந்த அரிசி கலைஞர் கிட்டே சில கேள்வி கேட்டேன்.. பதில் சொல்லலே... பெயர் கேட்டேன்... உடனே அவரோட தொழில் பெட்டியே கொஞ்சம் அந்தண்டே நகர்த்தி காண்பித்தார். அதிலே அவரோட பெயர் எழுதி இருந்தது.

உடனே அங்கிருந்த நம்ம சுற்றுலா நண்பர்கள் "அவருக்கு தமிழ் தெரியாது" என்றும்... இன்னும் சிலர் "அவராலே வாய் பேச முடியாது" என்றும் வக்காலத்து வாங்கினார்கள். உடனே தாய்குலம் "அட தேவுடா.. இப்படி நுணக்கமா ஒரு தொழில் செய்கிறார். பகவான் அவருக்கு பேச்சே கொடுக்கலையே?" என்று ரொம்ப பரிதாபமாக எங்கள் மூன்று குழந்தைகளின் (மூன்று தெய்வங்கள்) பெயர்களையும் அரிசியில் எழுதி வாங்கிக் கொண்டார்.. (ஏதோ ஏற்காடு எஸ்டேட் ஒன்னே எழுதி வாங்கினாப்போலே!). மறக்கமே அதவும் பேரம் எதுவும் பேசாமே அதுக்கான காசையும் என்னிடம் கேட்டு வாங்கி கொடுத்திட்டார். ஏதோ ஒரு நல்ல காரியம் பண்ண நிம்மதி என் திருமதியிடம் தெரிந்தது.

அங்கே ரொம்ப நேரம் ஆகி விட்டதால், போட்டிங் போகமே அடுத்த spot க்கு போனோம். அது ஏற்காடு பூங்கா. ஏதோ கொஞ்சம் பூச் செடி இருந்தது. அங்கே உட்கார்ந்து குழந்தைகள் ஊஞ்சல், சறுக்கு மரம் ஆகியவற்றில் விளையாடுவதை பார்த்து கொண்டிருந்தோம். பசி வயற்றை கிள்ள ஆரம்பித்த பிறகுதான் நேரம் போனது தெரியவில்லை என்பதை உணர்ந்தோம். மீண்டும் மலர் ஓட்டல். ஆனால் இப்போது அதற்க்கு சற்று மேல் செல்லும் பாதையில் உள்ள "செல்வம் ஓட்டலுக்கு" சென்றோம். சைவ மற்றும் அசைவ பிரியாணிக்கு பெயர் பெற்ற ஓட்டல் இது. தாய்குலம் சைவம். நான் "நான் வெஜிடரியன்". எனவே தாய்குலத்திற்கு காளான் பிரியாணி. எனக்கு முழு கோழி தொடை பிரியாணி. ஒரு கை பிடித்து விட்டு "ஏவ்" என்ற பொது மணி மதியம் 1.30. ஆனால் வெயில் இல்லை. குளிர் காற்று மிதமாக ஊருக்கு A/c போட்டதை போன்று இருந்தது.

அடுத்து ஒரு ஸ்வீட் பீடாவை வாயில் போட்டுக்கொண்டு அங்கிருந்து, "பகோடா பாயிண்ட்" போனோம். நன்றாக டெவலப் செய்துள்ளார்கள். நான் அசைவம் சாப்பிடுள்ளபடியால் அங்கிருந்த கோதண்டராமர் கோயில் படியில் கால் கூட வைக்க வில்லை. தாய்குலம் காளான் பிரியாணி என்பதால் ஒரு விசிட் அடித்து கும்பிட்டது. இப்படியாக நாள் மெல்ல நகர்ந்து சென்று கொண்டிருந்தது...

மாலை 4 மணி. ரூமுக்கு வந்து கொஞ்சம் refresh செய்து கொண்டு, ரூமை காலி செய்து விட்டோம். ஏரிக்கு அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் ஸ்கூட்டருக்கு பெட்ரோல் போட்டேன். அப்போது "என்னங்க கடைசியிலே போட்டிங் போகமே திரும்பி போறேமே.... இது உங்களுக்கே நல்ல இருக்கா?" என்று ஒரு நியாயமான கேள்வியை தாய்குலம் முன் வைத்தார்.

'சரி' என்று நாங்கள் மீண்டும் போட்டிங் ஹவுஸ் வாசலுக்கு போனோம். நான் அருகில் உள்ள ஒரு இடத்தில ஸ்கூட்டர் பார்கிங் செய்ய போக, தாய்குலம் போட்டிங் ஹவுஸ் வாசல் படியில் இறங்க தயாராக, அப்போதுதான் இது நடந்தது. தாய்குலம் வாசலில் இருந்தபடியே தீடிரென "என்னங்க ...... இங்கே பார்த்தீங்களா...?" என்று சற்றே உரத்த, பரபரப்பான குரலில் கத்தினார்.


நான் என்னமோ... ஏதோ.... என்று ஒருவித பதற்றத்துடன் அங்கே பார்த்தால், காலையில் பார்த்த அந்த அரிசி கலைஞர் அழகுத் தமிழில் தனது வாடிக்கையாளர்களுடன் பேசிக் கொண்டே அரிசியில் பெயர் எழுதி கொடுத்து கொண்டிருந்தார்."

"ஒரே நாளில் பேச்சை கொடுத்த அந்த தெய்வம்தான் எதுவோ?" என்ற மௌனமான சிந்தனையில் வீடு வந்து சேருகின்ற போது இரவு மணி 7.

30 March, 2009

ஓட்டு போட உங்களுக்கு விருப்பம் இல்லையா...? - Are you deciding not to vote?


தேர்தல் திருவிழா தொடங்கி விட்டது. 'இன்னும் சரியாக மைக்கே பிடிக்கவில்லை', அதற்குள் கைது செய்து விட்டார்களே என்று புலம்பும் இளம் அரசியல்வாதி ஒருபுறம். மக்களுடன் தான் எனது கூட்டணி' என்ற தன்னம்பிக்கை முழக்கமிடும் நடிக அரசியல்வாதி மற்றொரு புறம். 'அரசியலில் இதல்லாம் சகஜமப்பா' என்று கூறக் கூடிய வியத்தகு "கூட்டணிகள்" இன்னொரு புறம். இவற்றிக்கு இடையில் மக்களை மெஸ்மரிசம் செய்யும் பிரச்சாரங்கள்.... வண்ண வண்ண வாக்குறுதிகள்.... இப்படி அரசியல் தலைவர்கள் அய்ந்தாண்டிற்கு ஒருமுறை மக்களிடம் கையேந்தும் ஜனநாயக பண்டிகை கோலாகலமாக ஆரம்பித்து விட்டது.
ஆனால் மக்கள் முன்பு மாதிரி இல்லை. சமூகம், சட்டம், அரசியல் என எல்லாவற்றிலும் நல்ல விழிப்புணர்வு பெற்றவர்களாக உள்ளனர். பல்வேறு ஊடகங்களின் வாயிலாக அவர்களுக்கு அனைத்திந்திய மற்றும் உலக பார்வை ஏற்பட்டுள்ளது. எனவே சிந்திக்க ஆரம்பித்து உள்ளனர். 'இன்னாருக்கு அல்லது இன்ன கட்சிக்கு ஓட்டு போடலாம்!' என்று சிந்திக்கும் அதே வேளையில் 'அப்படி போட்டால் என்ன நன்மை நமக்கு விளையும்' என்பதையும் நன்றாகவே யோசிக்கின்றனர். ஆகவே உள்ளபடியாக நல்ல அரசியல் பதிவுகள் அல்லது மக்கள் நலனுக்காக பாடுபடும் எண்ணம் மற்றும் வல்லமை கொண்டவர்களை மட்டுமே மக்கள் தேர்தெடுக்க விழைகின்றனர் என்று சொன்னால் அதை மிகையானது என்று ஒதுக்கி விட முடியாது. சுருங்கச் சொன்னால் மக்களின் ஓட்டை அவ்வளவு எளிதாக வாங்கி விட முடியாது, வேட்பாளர்கள்.
நிலைப்பாடு இவ்வாறு இருக்க, தான் நினைத்த நல்ல கட்சி அல்லது நல்ல வேட்பாளர் தேர்தலில் நிற்கவில்லை அல்லது நின்றுள்ள கட்சி அல்லது வேட்பாளர் நல்லது செய்யக்கூடியவர் அல்ல; தனக்கு பிடிக்கவில்லை என்று பொது ஜனம் ஒருவர் நினைத்தால், அவருக்கு என்ன தீர்வழி? சுருங்கச் சொன்னால் தனக்கு ஒட்டு போட விருப்பம் இல்லை என்று நினைக்கும் பொது ஜனம் அதை எப்படி சட்டப்படி தெரிவிப்பது?
இதற்கு 1961-ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட 'தேர்தல்கள் நடத்தும் விதிகள்' (Conduct of Elections Rules, 1961) வகை செய்கின்றன. ஒட்டு போட வேண்டும் என்பது ஜனநாயக கடமை என்று எவ்வாறு கூறப்படுகிறதோ, அவ்வாறே ஒட்டு போட தனக்கு விருப்பம் இல்லை என்றும் ஒருவர் கூறலாம். இந்த விதிகளின் பகுதி 4-இன் கீழ் வரும் 2-ஆம் அத்தியாயம் 'மின்னணு ஒட்டு போடும் இயந்திரம் மூலம் ஒட்டு போடுதல்' (VOTING BY ELECTRONIC VOTING MACHINES) பற்றி கூறுகிறது. அதில் வரும் விதி 49-O பின்வருமாறு கூறுகிறது.
49-O. Elector deciding not to vote.-If an elector, after his electoral roll number has been duly entered in the register of voters in Form-17A and has put his signature or thumb impression thereon as required under sub-rule (1) of rule 49L, decided not to record his vote, a remark to this effect shall be made against the said entry in Form 17A by the presiding officer and the signature or thumb impression of the elector shall be obtained against such remark.
ஓட்டு போடுவதில்லை என்று முடிவு செய்யும் வாக்காளர் ஒருவர் என்ன செய்ய வேண்டும்?
"வாக்காளர் ஒருவர், அவரது வாக்காளர் பட்டியல் எண் ஆனது வாக்காளர் பதிவேட்டில் படிவம் எண் 17A -இல் உரியவாறு பதிவு செய்யப்பட்டும், மேலும் அதன் பேரில் விதி 49L-இன் உள் விதி (1)-இன்படி வேண்டுறுத்துகிறவாறு அவர் தனது கையொப்பம் அல்லது பெருவிரல் ரேகை இட்டதற்கும் பிறகு, ஒட்டு போடுவதில்லை என்று முடிவு செய்தால், அதற்கு செயலாக்கம் தருவதற்கான குறிப்பு ஒன்று படிவம் எண் 17A- இல் மேற்சொன்ன பதிவுக்கு எதிராக தலைமை அலுவலரால் செய்யப்பட வேண்டும். மேலும் அந்த குறிப்புக்கு எதிராக வாக்காளரின் கையொப்பம் அல்லது பெருவிரல் ரேகை பெறப்பட வேண்டும். " - விதி 49-O.

  • இப்படி ஒரு சட்ட விதி இருப்பதை அரசு ஏன் மக்களுக்கு பிரசாரம் செய்யவில்லை?

    • இப்படி ஒரு சட்ட விதியை மேற்சொன்ன 'தேர்தல்கள் நடத்தும் விதிகளில்' சேர்த்ததன் மூலம் நமது நாடாளுமன்றம் அடைய நினைத்தது என்ன?

    • இவ்விதியால் யாருக்கு என்ன இலாபம்?
விவரம் தெரிந்தவர்களை விவாதிக்க அழைப்பு விடுக்கிறேன்..

20 March, 2009

அழுத பிள்ளைக்கு பால் கொடுக்கும் தீர்ப்பு இது...

அழுத பிள்ளைக்கு பால் கொடுக்கும் தீர்ப்பு இது...
உயர் நீதிமன்றத்தில் ஆயுத காவற்படை எப்படி வந்தது? வழக்குரைஞர்களின் மீது யார் தடியடி நடத்த சொன்னது? இதற்கு பதில் அளிக்க அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆணையுறுதியாவணத்தில் வரும் 16-ஆம் பத்தி பின் வருமாறு கூறுகிறது..
“16. I am informed that around 4.00 pm, the stone pelting continued and a few two wheelers and cars were damaged and many police personnel sustained injuries on their head and other vital parts. Head Constable 276 Krishnakumar sustained a grievous stone-hit injury on his testicles, became unconscious and fell down on the ground. The situation was turning grave and the life and security of the general public and the police personnel was in imminent threat. To protect the life and property of the police personnel, the public and others, the Additoinal Commissioner of Police (law & Order) who was the seniormost officer present in the spot, consulted other senior officers in the spot, viz., the Joint Commissioner of Police (North), the Joint Commissioner of Police (Central), the Deputy Commissioner of Police, Flower Bazaar, the Deputy Commissioner of Police, Pulianthope and the Deputy Commissioner of Police, Kilpauk and took the collective decision to declare the assembly as unlawful and to disperse it. Accordingly he directed the Deputy Commissioner of Police, Flower Bazaar who in turn took measures to disperse the unlawful assembly using minimum force.”
இதில் வரும் சில முக்கிய வரிகளின் தமிழாக்கம் படி, "காவல் அதிகாரிகள், பொது மக்கள் மற்றும் பலரின் உயிரையும் உடமையையும் காப்பாற்ற சம்பவ இடத்தில இருந்த மிக மூத்த காவல் அதிகாரியான கூடுதல் காவல் ஆணையர் (ACP) (சட்டம் மற்றும் ஒழுங்கு), சம்பவ இடத்தில இருந்த இதர மூத்த காவல் அதிகாரிகளான காவல் இணை ஆணையர் (JCP) (வடக்கு), காவல் இணை ஆணையர் (மையம்), காவல் துணை ஆணையர், பூக்கடை மார்க்கெட், காவல் துணை ஆணையர் (DCP) - பூக்கடை மார்க்கெட், காவல் துணை ஆணையர் - புளியந்தோப்பு, காவல் துணை ஆணையர் - கீழ்ப்பாக்கம் ஆகியோருடன் கலந்து ஆலோசித்து, அங்கிருந்த கூட்டத்தை சட்ட விரோதமான கூட்டம் என்று விளம்பவும் அதை கலைக்கவும் கூட்டு முடிவு எடுத்தார். அதன்படி அவர் பிறப்பித்த ஏவுரைக்கு (direction) இணங்க, பூக்கடை மார்கட் காவல் துணை ஆணையர் அந்த சட்ட விரோதமான கூட்டத்தை குறைந்தபட்ச பலப் பிரயோகம் செய்து கலைக்க நடவடிக்கைள் எடுத்தார்."
இதன் அடிப்படையில் உயர் நீதிமன்றம் பின்வருமாறு தனது தீர்ப்பை பகருகிறது. "8. As we find that a prima facie case made out to initiate disciplinary proceeding against the concerned officers, to ensure the State Government to pass appropriate orders, we are of the view that i) Mr.A.K.Viswanathan, IPS, Addl. Commissioner of Police (Law & Order) and ii) Mr.M.Ramasubramani, IPS, formerly Joint Commissioner of Police (North) (Jurisdiction JCP), should be placed under suspension, as they were the persons who were in the helm of the affairs and under whose direct supervision the operation was carried on."
இத்தீர்ப்பில் ஒரு மிகப் பெரிய நெருடல் உள்ளது. அதாவது ஒரு அத்து மீறிய செயல் இங்கு நடந்துள்ளது என்பது தெளிவாக அரசு தரப்பில் மேற்சென்ற பத்தி 16-இன் வாயிலாக ஒத்தேற்க்கப்பட்டுள்ளது. அச்செயலுக்கான முடிவு கூட்டாக எடுக்கப்பட்டு உள்ளது (கவனிக்க : 'கூட்டாக') என்றும் கூறப்பட்டு உள்ளது. எப்போது ஒரு செயல் செய்ய கூட்டாக முடிவு செய்யப்பட்டது என்று சொல்லப்படுகிறதோ அப்போதோ அவ்வாறு முடிவு செய்த அனைவரும் கூட்டாகவும், தனிதனியாகவும் பொறுப்பாவார்கள் என்பது சட்ட நிலைப்பாடு. அப்படி இருக்க (1) கூடுதல் காவல் ஆணையர் (ACP) (சட்டம் மற்றும் ஒழுங்கு) (திரு A.K. விசுவநாதன்), (2) காவல் இணை ஆணையர் (JCP) (வடக்கு) (திரு M. இராம சுப்பிரமணி) ஆகியோர் மட்டும் பணி இடை நீக்கம் செய்யப்பட்டிருப்பது ஒரு சட்டத் தவறு. பத்தி 16-இல் சொல்லப்பட்ட அனைத்து காவல் அதிகாரிகளையும் உயர் நீதிமன்றம் பணி இடை நீக்கம் செய்ய அரசுக்கு ஆணை இட்டு இருக்க வேண்டும்.
அத்துடன், அரசு சார்பில் இந்த ஆணையுறுதியாவணத்தை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்பவர் காவல் ஆணையர் (திரு இராதா கிருஷ்ணன்) ஆவர். சம்பவ தினத்தன்று அவரும் சம்பவ இடத்தில இருந்து உள்ளார். அதற்கு நிறைய ஆதாரம் உள்ளது. காவல் ஆணையர்கள் அனைவர்க்கும் உயர்ந்த நிலையில் இருக்கும் இவரையும் பணி இடை நீக்கம் செய்து இருக்க வேண்டும்.
ஒரு பக்கம் இத்தீர்ப்பை நாம் வரவேற்கிறோம். ஆனால் பிள்ளைகள் ஒரு மாதமாக அழுது கொண்டிருக்கிறார்கள் என்று ஒரு வாய் மட்டும் அமுது ஊட்டிய தாயாகத்தான் தற்போது நாம் உயர் நீதிமன்றத்தை காண்கின்றோம். எங்கள் பசிக்கு (மன வேதனைக்கு) இது போதாது...

19 March, 2009

வலை பதிவு வரலாற்றில் ஓர் முக்கிய பதிவு... போராட்டம் வெற்றி...


14 March, 2009

The Feelings - வழக்குரைஞர்களின் போராட்ட உணர்வுகள்...பிப்ரவரி 19- ஆம் தேதியன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞர்களை தமிழக காவற்படை கண்முடித்தனமாக தாக்கிய விவகாரத்தில் வழக்குரைஞர் சமூகத்திற்கு ஏற்பட்ட மன உளைச்சல் ஒருபுறம் என்றால், அச்சம்பவத்தை விசாரிப்பதற்காக நியமனம் செய்யப்பட்ட நீதியரசர் கிருஷ்ணா கொடுத்த அறிக்கையால் விளைந்த வேதனை மற்றொரு புறம்.

இத்தனை நாளாக போராடுகின்றோம் .... வழக்குரைஞர்களை தாக்கிய காவல் துறை மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாமல் எப்படி நீதிமன்றத்திற்கு செல்வது என்ற ஒரு மனக் குழப்பம் இன்னொரு பக்கம்.

இடையில் ஆளும் அரசியல் கட்சியை சார்ந்த வழக்குரைஞர்கள் இதையே ஒரு நல்ல சந்தர்ப்பமாக பயன்படுத்தி தங்கள் அரச விசுவாசத்தை காண்பிக்கிறார்கள், நீதிமன்றத்திற்கு செல்வதாக கூறி. அதை எதிர் கட்சி (வழக்கில் அல்ல, அரசியலில்) வழக்குரைஞர்கள் தடுத்து தங்களுக்கு ஒரு பெயர் பதிவை அக்கட்சியில் ஏற்படுத்திக் கொள்கிறார்கள்..

இந்த விவகாரத்தை தமிழக அரசு கண்டு கொள்வதாக தெரியவில்லை... இவர்கள் தங்களுக்குள் அடித்துக் கொண்டு, எப்படியும் போராட்டத்தை பிசுபிசுசுத்து போகச் செய்து விடுவார்கள் என்றே காத்து கொண்டிருக்கிறது.

வழக்குரைஞர்களுக்கு நீதிமன்றம் சென்றால்தான் வருமானம். கடந்த 25 நாட்களாக நீதிமன்றத்தை வழக்குரைஞர்கள் புறக்கணித்து வருகின்றனர். சுத்தமாக வருமானம் இல்லை. கொஞ்சம் செல்வ செழிப்பாக உள்ள வழக்குரைஞர், ஒன்றுக்கு இரண்டு தொழில் செய்பவர்கள், அரசியல் செய்யும் வழக்குரைஞர்கள் ஆகிய இவர்களுக்கு கவலை இல்லை. சமாளித்து கொள்வார்கள். ஆனால், நீதிமன்ற வருமானத்தை மட்டுமே நம்பி, வேறு எதுவும் தெரியாமல் அல்லது கற்றுக்கொள்ளாமல் இருக்கும் வழக்குரைஞர்கள் பாடு உள்ளபடியே திண்டாட்டம்தான். குறிப்பாக அன்றாட வருமானத்தை தரும் குற்றவியல் நீதிமன்றப் பணி மட்டும் கொண்ட வழக்குரைஞர்கள் மிகவும் சோர்ந்து போயிருக்கிறர்கள், இந்தப் போராட்ததால். எனினும் சங்கத் தலைமை கருதி அமைதி காக்கிறார்கள்.
போராட்டம் வெற்றி பெற வேண்டும்... அப்போதுதான் வழக்குரைஞர்கள் கௌரவம் காவல்துறை மத்தியில் நிலை நாட்டப்படும் என்ற உணர்வும் ஆழமாக உள்ளது...

இப்படி பல்வேறு உணர்வுகள் மனதில் நிழலாட வழக்குரைஞர்கள் போராடி வருகிறார்கள். கூட்டமைப்பில் கூடி விவாதிக்கிறார்கள் ......

போராட்டம் வெற்றி பெற வேண்டும்.... வெற்றி பெறும்.....

12 March, 2009

வக்கீல் - பொது மக்கள் பிரச்சனைகளுக்காக போராட "தமிழ் நாடு வக்கீல் முன்னணி"


வக்கீல் - பொது மக்கள் பிரச்சனைகளுக்காக போராட சேலத்தில் "தமிழ் நாடு வக்கீல் முன்னணி" என்ற புதிய அமைப்பு தொடங்கப்பட்டது. 2009, மார்ச்சில் நடந்த இந்த அமைப்பின் கூட்டத்தில் இதன் நிருவாகிகள் சேலம் தமயந்தி, சேலம் ஷாஜகான், கோவை பரமசிவம், திருவண்ணாமலை விநாயகம், மதுரை கேசவன், திருச்சி கனகராஜ், மதுரை அப்துல் காதர், நீலகிரி ஷேக் முகமது, தஞ்சை கார்த்திகேயன், தருமபுரி சுகுமார், புதுகோட்டை ரங்கசாமி, கடலூர் கௌதமன், அரியலூர் மனோகரன், பெரம்பலூர் ராஜேந்திரன், பொருளாளர் ஜாகீர் அஹ்மத், ஒருங்கிணைப்பாளர் ஹரி பாபு உள்ளிட்ட 12 மாவட்டங்களை சேர்ந்த வழக்குரைஞர்கள் கலந்து கொண்டனர்.
மேலதிகமான சேதிகளுக்கு நமது சட்ட பார்வை-க்கு சந்தாதாரர் ஆகுங்கள். ஆண்டு சந்தா ரூ 120/- மட்டுமே.
செல்லிட பேசி எண். 9843035132.

05 March, 2009

Photos of attack by Tamil Nadu Police on Chennai Advocates


தமிழக காவல் துறையினர் சென்னை வழக்குரைஞர்கள் மீது நடத்திய கொடூர தாக்குதல்கள் காட்சிகள். இதை கண்டு உங்கள் மனம் துயருற்றால் ஆறுதலுக்கு ஒரு வார்த்தை பின்னூட்டம் இடுங்கள். நன்றி...

03 March, 2009

Fasting by Salem Advocatesஅண்மையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக காவல் துறை கண்மூடித்தனமாக நடத்திய கொடூர தடியடி தாக்குதலில் எண்ணற்ற வழக்குரைஞர்களுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது; மண்டை உடைந்தது. அதை கண்டித்து சேலம் வழக்குரைஞர்கள் சங்க உறுப்பினர்கள் மண்டை ஓடுகளுடன் உண்ணாநிலை போராட்டம் நடத்தினர். இதற்கு தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி மாவட்ட மற்றும் கீழமை நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் திரு. பி. பரமசிவம் முன்னிலை வகித்தார். சேலம் வழக்குரைஞர்கள் சங்க தலைவர் திரு. கா. இராஜசேகரன் தலைமை வகித்தார்.
படத்தொகுப்பு - சட்டப்பார்வை, பி.ஆர்.ஜெ.
9843035132

02 March, 2009

Federation Chairman speaks at Salem


19-2-2009- ஆம் தேதி தமிழக நீதித்துறை வரலாற்றில் ஓர் கருப்பு நாள். தமிழக காவல் துறையினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞர்கள் மீதும், அவர்தம் வாகனங்கள் மீதும் திட்டமிட்டு நடத்திய காட்டுமிராண்டிதனமான தாக்குதலும், வன்முறை வெறியாட்டமும் இந்திய வழக்குரைஞர்கள் நெஞ்சில் முள்ளாக ஆழத் தைத்த துர்பாக்கிய தினம். இதை கண்டித்து சேலத்தில் கடந்த 27-2-2009-ஆம் தேதியில் நடந்த உண்ணாநிலை போராட்டத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாவட்ட மற்றும் கீழமை நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் பி. பரமசிவம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்ததன் வீடியோ காட்சி. -
சட்டப் பார்வை, பி. ஆர். ஜெயராஜன்.
Condemning the brutal attack by TN Police on Chennai Advocates, the members of Salem Bar Association observed one day fasting on 27/02/2009. The Chairman of Federation of District and Subordinate Courts Bar Associations of Tamil Nadu and Puducherry addressing the press persons on the issue. The President of Salem Bar Association Mr. Ka. Rajasekaran is present. -
A Video by Satta Parvai PRJayarajan

03 February, 2009

மணமுறிவை தவிர்க்க இதோ சில ஆலோசனைகள்..


" மணமுறிவு செய்து கொள்வதற்காக யாரும் மணம் செய்து கொள்வதில்லை. ஒன்று சிறப்பாக அமைய நாம் நேரத்தை ஒதுக்கி நிறைய முயற்சி செய்கிறோம். அவ்வாறுதான் திருமண வாழ்கையும். மண வாழ்க்கை பந்தம் தொடர்ந்திருக்க தம்பதிகள் பரஸ்பரம் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதற்காக நேரத்தை ஒதுக்கி கொள்ள வேண்டும். திருமண வாழ்க்கை எல்லாவற்றிலும் ஏற்றத் தாழ்வுகள் இருக்கவே செய்கின்றன. வெளியிலிருந்து பார்த்தால், இருவரும் இணை பிரியா தம்பதிகளாக தெரிவர். ஆனால் அவர்களுக்குள் எத்தனையோ கசப்புகள் இருக்கலாம். இவற்றை களைந்து உள்ளும் புறமும் இணை பிரியாமல் இருப்பதற்கு அத்தம்பதிகள் சேர்ந்து செயலாற்ற வேண்டும். "

எனவே புதிதாக திருமணம் செய்து கொண்டவர்களே அல்லது இன்றோ நாளையோ மணமுறிவு கோரி நீதிமன்றத்தில் வழக்கிட சிந்தித்து கொண்டிருக்கும் தம்பதிகளே, உங்கள் இல்வாழ்க்கை இனிதாக எந்த இடர்படும் இன்றி தொடர இங்கு சில ஆலோசனைகளை உங்களுக்கு சொல்ல ஆசைபடுகிறோம். கடைபிடித்துப் பாருங்கள்.... உங்கள் துணை உங்கள் அன்புக்கு அடிமை ஆவது உறுதி.


இதோ அந்த ஆலோசனைகள் ....

1. உங்கள் இல்வாழ்க்கை துணையை கலந்தாலோசித்தே எதையும் செய்யுங்கள். அவர் கூறும் கருத்தை கூர்ந்து கேளுங்கள்.


2. இருவரும் தவறுகளை செய்யக் கூடியவர்கள் என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். அத்தவறுகளில் இருந்து சரியானதை அறிந்து கொள்ளுங்கள். ஒருமுறை செய்த தவறை மீண்டும் செய்யாதீர்கள்.


3. ஆணும் பெண்ணும் வேறுபட்டவர்கள், மாறுபட்ட உணர்ச்சி கொண்டவர்கள் என்பதை ஏற்று கொள்ளுங்கள்.


4. உங்கள் துணையிடம் மணம் விட்டு பேசுங்கள், கேளுங்கள், கற்றுக் கொள்ளுங்கள்.


5. மண வாழ்க்கைக்கு புறம்பான தொடர்புகளை கை விடுங்கள்.


6. ஏற்பட்ட பிரச்சனை தீராமல் இருந்தாலும், இரவில் தனித்தனி படுகைகளில் படுக்காதீர்கள். படுப்பதற்கு முன் அப்பிரச்சனையை தீர்க்க ஏதேனும் வழிகளை கண்டுபிடிக்க முயலுங்கள்.


7. உங்களை பற்றியே பேசிக் கொண்டிருக்க வேண்டாம். அது உங்கள் துணையை சலிப்படைய செய்து விடும்.


8. சிறு சிறு கேலியும் கிண்டலும் இருக்கலாம். ஆனால் அது வன்மமாக மாறி விடக்கூடாது.


9. ஒருவருக்கொருவர் நல்ல நண்பர்களாகவும், அன்பான காதலர்களாகவும் இருங்கள்.


10. உங்கள் துணையின் நண்பர்களை உங்கள் துணையை அருகில் வைத்து கொண்டு குறை கூறாதீர்கள். குறிப்பாக உங்கள் நண்பர்களின் முன்னிலையில் உங்கள் துணையை குறை கூறாதீர்கள்.


11. உங்கள் துணையின் பெற்றோர்களை இழிவு படுத்தாதீர்கள் அல்லது குறை கூறாதீர்கள்.


12. கொடுத்து பெற்று கொள்ளுங்கள்.


13. உடலுறவு கொள்வதை ஏதோ ஒரு வழக்கமாக மேற்கொள்ளாதீர்கள். ஆசையும், காதலும் கொண்டு அணுகுங்கள்.


14. என்ன சொல்லி விடப் போகிறாள்/றார் என்ற எண்ணத்தில் செயல்படுவதை தவிர்க்கவும். அதாவது உரிமை என்ற பெயரில் அத்து மீறாதீர்கள்.


15. உங்கள் துணையர் சோர்ந்திருக்கும் போது அவரை உற்சாகப்படுத்துங்கள், ஊக்கப்படுத்துங்கள், நம்பிக்கை கொடுங்கள். மாறாக அவரது சோர்வை அதிகப்படுத்தி விட வேண்டாம்.


16. உங்கள் தோற்றத்தை பொலிவாக வைத்திருங்கள். ஆரோக்கியம் பேணுங்கள். அழகு படுத்திக் கொள்ளுங்கள். அழுது வடியதீர்கள்.


17. ஒருவருக்கொருவர் நேர்மையுடன் நடந்து கொள்ளுங்கள்.


18. சமாதானம்தான் தீர்வு என்பதை உணருங்கள்.


19. மன்னிக்க கற்றுக் கொள்ளுங்கள்.


20. எதையாவது கடனாக பெற விரும்பினால், அது பற்றி உங்கள் துணையிடம் கேளுங்கள்.


21. உங்களது எல்லா தகவல்களையும் உங்கள் துணையிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.


22. நீங்கள் உங்கள் துணையரை அதிகம் நேசிப்பதாக அவரிடம் அடிக்கடி கூறிக்கொண்டே இருங்கள்.


23. ஒருவருக்கொருவர் பாராட்ட பழகுங்கள். உள்ளன்போடு வாழ்த்துகளை சொல்லி மகிழுங்கள்.


24. சுகத்திலும், துக்கத்திலும் பங்கு கொள்ளுங்கள். குறிப்பாக துக்கத்தின் போது ஆறுதல் கூறி ஆதரவாக இருங்கள்.


25. பொறுப்புகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.26. ஒருவருக்கொருவர் நன்றி மறவாதீர்.


27. உங்கள் துணையை ஒருபோதும் ஏமாற்ற முயலாதீர்கள்.


28. "என்னை மன்னித்துவிடு" என்று சொல்ல தயங்காதீர்கள்.


29. இயன்ற அளவு உங்கள் துணையை திருப்திபடுத்துங்கள். இயலாத நிலைக்கு வருத்தம் தெரிவியுங்கள்.


30. சகித்து கொள்ளுங்கள்.


31. சச்சரவுகளை கலந்து பேசி தீருங்கள். குறிப்பாக கணவன் எச்சமயத்திலும் மனைவியிடம் வன்முறையை கையாளக் கூடாது.


32. சேர்ந்து வாழ்ந்து இன்பம் காண்பதே இல்வாழ்க்கை என்பதை அடிக்கடி நினைவு படுத்தி கொள்ளுங்கள்.

06 January, 2009

51 நோய்களுக்கு மருந்தில்லையா?

நமது நாட்டில் 1945 ஆம் ஆண்டில் இயற்றப்பட்டது "தி டிரக்ஸ் அண்ட் காஸ்மடிக்ஸ் ஆக்ட்" (The Drugs and Cosmetics Act, 1945) எனப்படும் மருந்து மற்றும் ஒப்பனை பொருட்கள் சட்டம். இது பின்னிட்டு வந்த பல ஆண்டுகளில் திருத்தப்பட்டது. கடந்த 2008-ஆம் ஆண்டில் கூட ஒரு திருத்த சட்டம் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இச் சட்டத்தின் முக்கிய நோக்கம், நமது நாட்டில் மருந்து மற்றும் ஒப்பனை பொருட்களை இறக்குமதி செய்தல், உற்பத்தி செய்தல், விநியோகித்தல், விற்பனை செய்தல் ஆகியவற்றை ஒழுங்குபடுத்துவதாகும்.
இச்சட்டத்தின் கீழ் விதிகள் இயற்றுவதற்கான அதிகாரத்தை பயன்படுத்தி அதே 1945 - ஆம் ஆண்டில் ""தி டிரக்ஸ் அண்ட் காஸ்மடிக்ஸ் ரூல்ஸ்" கொண்டு வரப்பட்டது. இதுவும் செம்மையாக, காலத்திற்க்கு ஏற்றார் போல் திருத்தும் செய்யப்பட்டதாகும். இதன் கீழ் பின் இணைப்பு பட்டியலாக வரும் " Schedule J" ஆனது ஒரு விவகாரமான சங்கதியை சொல்கிறது. அதாவது அதன் கீழ் வரும் 51 நோய்களுக்கு மருந்து உண்டு என்றோ, அதை மருந்தால் தடுக்க முடியும் என்றோ கூறக்கூடாது, என்று அது விதிக்கிறது.
அந்த 51 நோய்கள் இதோ.....
1. AIDS
2. Angina Pectoris
3. Appendicitis
4. Arteriosclerosis
5. Baldness
6. Blindness
7. Bronchial Asthma
8. Cancer and Benign tumour
9. Cataract
10. Change in colour of the hair and growth of new hair.
11. Change of Foetal sex by drugs.
12. Congenital malformations
13. Deafness
14. Diabetes
15. Diseases and disorders of uterus.
16. Epileptic-fits and psychiatric disorders
17. Encephalitis
18. Fairness of the skin
19. Form, structure of breast
20. Gangrene
21. Genetic disorders
22. Glaucoma
23. Goitre
24. Hernia
25. High/low Blood Pressure
26. Hydrocele
27. Insanity
28. Increase in brain capacity and improvement of memory.
29. Improvement in height of children/adults.
30. Improvement in size and shape of the sexual organ and in duration of sexual performance
31. Improvement in the strength of the natural teeth.
32. Improvement in vision
33. Jaundice/Hepatitis/Liver disorders
34 Leukaemia
35. Leucoderma
36. Maintenance or improvement of the capacity of the human being for sexual pleasure.
37. Mental retardation, subnormalities and growth
38. Myocardial infarction
39. Obesity
40. Paralysis
41. Parkinsonism
42. Piles and Fistulae
43. Power to rejuvinate
44. Premature ageing
45. Premature greying of hair
46. Rheumatic Heart Diseases
47. Sexual Impotence, Premature ejaculation and spermatorrhoea
48. Spondylitis
49. Stammering
50. Stones in gall-bladder, kidney, bladder
51. Vericose Vein
சட்ட வகை முறையின்படி, "ஒரு மருந்து மேற்படி பட்டியலில் காணப்படும் நோய் மற்றும் பிணிகளை தடுக்கக்கூடும் அல்லது குணமாக்ககூடும் என்ற பொருள் படும்படி தோன்றக் கூடாது அல்லது அவ்வாறு தடுக்கும் என்றோ, குணப்படுத்தும் என்றோ உரிமை கோரக் கூடாது." [Diseases and ailments (by whatever name described) which a drug may not purport to prevent or cure or make claims to prevent or cure.]
மேற்கண்ட நோய் பட்டியலானது 1945 - ஆம் ஆண்டில் ""தி டிரக்ஸ் அண்ட் காஸ்மடிக்ஸ் ரூல்ஸ்" -களின் விதி 106- லிருந்து பிறந்ததாகும். அந்த விதி 106 -இன் படி, "மருந்து பொருள் எதுவும் பின்னிணைப்பு பட்டியல் "ஜெ"-இல் குறித்துரைக்கப்பட்ட நோய்களில் அல்லது பிணிகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவற்றை தடுக்கும் அல்லது குணப்படுத்தும் என்ற பொருள் பட தோன்றக்கூடாது அல்லது உரிமை கொண்டாடக் கூடாது அல்லது அதை பயன்படுத்துபவருக்கு அது அப்படி தடுக்கலாம் அல்லது குணப்படுத்தலாம் என்ற எண்ணம் எதையும் கொடுக்கக் கூடாது" என்பதாகும். [Rule 106 of the Drugs and Cosmetics Rules.- Diseases which a drug may not purport to prevent or cure.—(1) No drug may purport or claim to prevent or cure or may convey to the intending user thereof any idea that it may prevent or cure one or more of the diseases or ailments specified in Schedule J.]
ஆக மேற்கண்ட 51 நோய்கள் அல்லது பிணிகளுக்கு மருந்தில்லை என்று சட்டம் சொல்கிறது. இந்நிலைப்பாடு சரிதானா? அல்லது இச்சட்ட விதியை திருத்த வேண்டுமா? (கடந்த 2008 -இல் அறிமுகபடுத்தப்பட்ட திருத்த சட்ட முன்வடிவில் இது பற்றிய திருத்தும் ஏதுமில்லை என்பது இங்கு கவனிக்கத்தக்கது.)
நண்பர்களே உங்கள் பின்னூட்டம் அவசியம் எதிர்பார்க்கிறேன்...

Related Posts Plugin for WordPress, Blogger...