என்னைப் பற்றி....

My photo
Salem, Tamil Nadu, India
சொல்கிறேன்..

21 June, 2010

சுவிஸ் வங்கியில் உள்ள 70 இலட்சம் கோடி ரூபாய் பணம்

சுவிஸ் வங்கியில் நமது இந்தியர்களின் பணம் ரூபாய் 70,00,000 கோடி உள்ளது. அதிர்ச்சியாகவும் வியப்பாகவும் இல்லை? ஆனால் இந்தத் தகவல் உண்மைதான். இன்னும் சில அதிர்ச்சி புள்ளி விவரங்கள் வருமாறு:-

1. சற்றே எண்ணிப் பாருங்கள்... சுவிஸ் வங்கியில் உள்ள 70 லட்சம் கோடி ரூபாய் இந்தியர்களுக்கு சொந்தமானது என்றால் நமது இந்திய நாடு எவ்வளவு பெரிய பணக்கார நாடாகும். உலகில் உள்ள 180 நாடுகளில் நமது நாட்டினரின் பணம்தான் சுவிஸ் வங்கியில் உள்ள மிக உச்ச அளவு தொகையாகும். கருப்பு பணத்தின் பிறப்பிடமாக இந்தியா   உள்ளது.
 
2. தங்கள் வங்கிகளில் உள்ள 70 லட்சம் கோடி ரூபாய்க்கு சொந்தமானவர்களின் பெயர்களை வெளியிடக் கோரி இந்திய அரசாங்கம் கேட்டால் அப்பெயர்களை வெளியிட சித்தமாக இருப்பதாக சுவிஸ் அரசாங்கம் இந்திய அரசாங்கத்திற்கு அதிகாரபூர்வ கடிதம் எழுதியுள்ளது.

3. சுவிஸ் அரசு நமது இந்திய அரசுக்கு எழுதிய அதிகாரபூர்வ கடிதத்தின் அடிப்படையில் இச்செய்தி ஏற்கனவே கடந்த 22-5-2008-இல் டைம்ஸ் ஆப் இந்தியா மற்றும் பிற நாளிதழ்களில் வெளியாகி உள்ளது.

4. ஆனால் இதற்கு நமது இந்திய அரசு எந்த பதிலையும் அனுப்பவில்லை. அதாவது 1947 முதல் 2008 வரை சுவிஸ் வங்கியில் வைப்பீடு செய்யப்பட்டுள்ள பணத்தின் விவரங்கள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்பிக்கும்படி இந்திய அரசானது சுவிஸ் அரசுக்கு பதில் கடிதம் எழுதவில்லை. மேலும் இது குறித்து எதிர் கட்சியினரும் எந்த ஆர்வமும் கட்டவில்லை. காரணம், சுவிஸ் வங்கியில் உள்ள பணத்தில் ஒரு பெரிய சதவிதம் நமது இந்திய அரசியல்வாதிகளுக்கு சொந்தமானது. அப்பணம் நமது இந்தியர்கள் ஒவ்வொவருக்கும் சொந்தமானது என்றுதான் சொல்வதுதான் பொருத்தமானதாகும்.

5. இந்தப் பணம் நமது நாட்டைச் சேர்ந்தது. இவ்வளவு பெரிய தொகையில் இருந்து நமது நாடு அது தனது அயல்நாட்டுக் கடனை 13 தடவை திருப்பி செலுத்தலாம். இத்தொகையில் இருந்து வரும் வட்டியை கொண்டு நமது மைய அரசின் ஓராண்டு பட்ஜெட் செலவை சமாளிக்கலாம். மக்கள் எந்த வரியையும் அரசுக்கு செலுத்த வேண்டியதில்லை. மேலும் 45 கோடி ஏழை குடும்பங்கள் ஒவொன்றுக்கும் தலா 1 இலட்சம் ரூபாய் வழங்கலாம்.

6. சுவிஸ் வங்கியில் மட்டும் 70 இலட்சம் கோடி ரூபாய் வைப்பீடு செய்யப்பட்டுள்ளது என்று கணக்கெடுத்துக் கொண்டால், மற்ற 69 வங்கிகளில் எவ்வளவு பணம் வைப்பீடு செய்யப்பட்டிருக்கும் ? சற்றே கற்பனை செய்து பாருங்கள். இந்தியர்கள் தங்கள் பணத்தை எவ்வளவு இழந்துள்ளார்கள்? நினைத்துப் பார்க்கவே அச்சமாக உள்ளது! இங்கு இன்னொரு இடர்பாடு உள்ளதும் கவனிக்கத்தக்கது. அதாவது சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் ஒருவர் இறந்து விட்டால், அவரது கணக்கில் உள்ள பணத்திற்கு சுவிஸ் வங்கியே உரிமையாளராகிவிடும்.

7. சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்துள்ள இந்திய பண முதலைகள் 'கர்ம வினை' என்ற சித்தாந்தை சுத்தமாக மறந்து விட்டார்களா? ஊழல், சுரண்டுதல் ஆகிய முறையற்ற வழிகளில் கிடைத்த அப்பணத்தை அவர்கள் தங்களுக்கு சொந்தமாக்கிக் கொள்ள நினைத்தாலோ/பயன்படுத்த முனைந்தாலோ அப்பணம் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் எத்தகு கேடு பலன்களை ஏற்படுத்தும் என்பதை அவர்கள் சிந்திக்க மறந்து விட்டார்கள்.

8. இந்த உண்மை யாவும் நமது இந்தியர்கள் வாசித்திருப்பார்கள் அல்லது கேள்விப்பட்டிருப்பார்கள். ஆனால் பாவம் அவர்கள் என்ன செய்து விட முடியும்? அன்றாட பிழைப்பை ஒட்டி சொந்த செலவுக்கு சம்பாதிக்கவே அவர்களுக்கு நேரமில்லை. இந்நிலையில் அவர்கள் இதற்காக வருத்தப்பட்டு ஒரு பெரு மூச்சு மட்டுமே விட முடியும். எனினும் "இதுவும் ஒரு விடுதலை போராட்டமே". ஒரு பெரும் பொரளாதார விடுதலைக்கான போராட்டம். இதற்காக நாம் இந்தியர் அனைவரும் ஒன்று திரண்டு போராட வேண்டும்.

9. சுவிஸ் வங்கியில் உள்ள மேற்படி பணம் இந்திய மக்களின் ரத்தத்திலும், வியர்வையிலும் விளைந்தது. அது மீண்டும் இந்திய நாட்டிற்க்கு கொண்டு வரப்பட வேண்டும்.

10. நமது இந்திய தாய் மண்ணிற்கு செய்யும் சேவையாக, இந்தப் போராட்டத்திற்கு உங்கள் பங்களிப்பை உறுதி செய்ய, இங்கு நீங்கள் வாசித்த பதிவை உங்கள் நண்பர்கள், உறவினர்கள் என எல்லோருக்கும் அனுப்பி வைத்து ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தவும். சிரமம் பார்க்காமல் இப்போதே ஆரம்பிக்கவும்.

நமது பணத்திற்கு மற்றவர்கள் உரிமை கொண்டாடுவதா? அதை ஒருக்காலும் அனுமதிக்கக் கூடாது. இந்தியா ஒரு ஏழை நாடு என்று  எவன் சொன்னது?

12 comments:

நிகழ்காலத்தில்... said...

ஓட்டுப்போட்டு இருக்கிறேன்,

நீர் மேலாண்மை, மின் உற்பத்தி என அத்தியாவசியமானவற்றிற்கு இந்தப் பணத்தின் வட்டியக் கொடுத்தாய்ங்கன்னா போதுமே :((

அமைதி அப்பா said...

//சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் ஒருவர் இறந்து விட்டால், அவரது கணக்கில் உள்ள பணத்திற்கு சுவிஸ் வங்கியே உரிமையாளராகிவிடும்.//

நல்லாயிருக்கே..!

Advocate P.R.Jayarajan said...

தோழமை மற்றும் தாய் மண் உணர்வுடன் இந்தப் பதிவிற்கு ஓட்டு போட்ட அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.

இந்தப் பதிவு இத்துடன் நின்று விடாது. நமது அரசாங்கத்தை உரிய சட்ட முறையில் விரைவில் கேள்வியும் கேட்கப் போகிறேன்.

ஆதரவளித்த அனைவருக்கும் மீண்டும் நன்றி.

Advocate P.R.Jayarajan said...

//நீர் மேலாண்மை, மின் உற்பத்தி என அத்தியாவசியமானவற்றிற்கு இந்தப் பணத்தின் வட்டியக் கொடுத்தாய்ங்கன்னா போதுமே :((//

உண்மைதான் அண்ணே! அத்தியாவசியமான, வாழ்வாதாரமான மக்கள் பிரச்சனைகளை சுலபமா தீர்க்க முடியும்.

Advocate P.R.Jayarajan said...

//சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் ஒருவர் இறந்து விட்டால், அவரது கணக்கில் உள்ள பணத்திற்கு சுவிஸ் வங்கியே உரிமையாளராகிவிடும்.//

//நல்லாயிருக்கே..!//

எவ்வளவு பெரிய அபாயம் இருக்கு பாருங்க அமைதி அப்பா?
கடைக்காரன் தக்காளி கிலோ 25 ரூபாய் சொன்னா அதிலே 2 ரூபாயை குறைக்க 1/4 மணி நேரம் பேரம் பேசுகிறோம். ஆனா நம்ப பணம் கேட்பார் நாதி இல்லாமே ஒரு பக்கம் வீணா போக சுவிஸ் வங்கி ரூட் போட்டிருக்கு. வயித்துப் பொழப்புக்கு ராப்பகலா உழைக்கிறோம். பலர் அதுவும் இல்லாமே ஒரு வேளே சோத்துக்கு செத்துப் பிழைக்கிறாங்க . இங்கே சேர்த்த சொத்து போததென்னு செத்துப் போன திரும்ப கேட்க உரிமை இல்லாத இடத்திலே ஊராமூட்டு பணத்தை முதலீடு செய்றாங்க. இதுக்கு ஏதாவது பண்ணனும் அமைதி அப்பா.. கொஞ்சம் நமக்கும் விழிப்புணர்வு ஏற்படணும் அப்பா..

Thomas Ruban said...

//சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் ஒருவர் இறந்து விட்டால், அவரது கணக்கில் உள்ள பணத்திற்கு சுவிஸ் வங்கியே உரிமையாளராகிவிடும்.//

இது தவறான தகவல்.

சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் ஒருவர் இறந்து விட்டால் அவர் "நாமினியாக குறிப்பிடுகிறாரோ அவரை தவிர", வேறு யாரும் மனைவி,உறவினர்கள் பிள்ளைகளாக இருந்தாலும் இந்த பணத்தை உரிமை கோர முடியாது.


சுவிஸ் வங்கியில் கணக்கு துவங்க 5000சுவிஸ் பிராங் கட்டி சாதரண கணக்கு துவங்கலாம். ஆனால் இதில் கறுப்புப் பணத்தை பதுக்க முடியாது.

கறுப்புப் பணத்தை பதுக்க பிரைவேட் அக்கவுண்ட் எனப்படும் ஸ்பெஷல் அக்கவுண்ட் துவங்க முதல் டெபாசிட் எவ்வளவு தெரியுமா? இந்திய மதிப்பில் ஒன்றைக் கோடி ரூபாயை கட்ட வேண்டும்.

நன்றி சார்.

Advocate P.R.Jayarajan said...

//கறுப்புப் பணத்தை பதுக்க பிரைவேட் அக்கவுண்ட் எனப்படும் ஸ்பெஷல் அக்கவுண்ட் துவங்க முதல் டெபாசிட் எவ்வளவு தெரியுமா? இந்திய மதிப்பில் ஒன்றைக் கோடி ரூபாயை கட்ட வேண்டும். //

எங்கே ரூபன் சார், ரொம்ப நாளா உங்களை பாக்க முடியலே..
நல்லா இருக்கீங்களா?
தவிர உங்கள் தகவலுக்கு நன்றி சார்..
அடிக்கடி வாங்க..

பல கோடி ரூபாயை பதுக்க 1/2 கோடி ரூபா ரொம்ப அனாவசியம் சார் அவங்களுக்கு..

nerkuppai thumbi said...

விவரம் அறியும் உரிமை சட்டத்தை (Right to Information Act) பயன்படுத்தி, பொது நல விரும்பிகள் கேட்கலாமே. புதிய கட்ச்சிகள் உதாரணத்துக்கு தேசீய முன்னேற்ற திராவிட கழகம் கேட்கலாமே. மைய அரசு பணத்தைக் கைப்பற்ற நடவடிக்கை துவக்க போராட்டம் நடத்தலாமே

Advocate P.R.Jayarajan said...

//விவரம் அறியும் உரிமை சட்டத்தை (Right to Information Act) பயன்படுத்தி, பொது நல விரும்பிகள் கேட்கலாமே.//

நல்ல முயற்சி.. பலன் தரும்..

Advocate P.R.Jayarajan said...

//புதிய கட்ச்சிகள் உதாரணத்துக்கு தேசீய முன்னேற்ற திராவிட கழகம் கேட்கலாமே.//

யாராவது ஆரம்பித்தால் பின் தொடர்வார்கள்... உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக கொண்டு வர முதலில் குரல் கொடுக்க ஆரம்பித்தவுடன், இப்போது அணைத்து கட்சிகளும் கூக்குரல் கொடுக்கின்றன.

Advocate P.R.Jayarajan said...

//மைய அரசு பணத்தைக் கைப்பற்ற நடவடிக்கை துவக்க போராட்டம் நடத்தலாமே//

இது நிச்சயம் மேற்கொள்ளப்பட வேண்டும்.

நண்பன் said...

விவரம் அறியும் உரிமை சட்டத்தை (Right to Information Act) பயன்படுத்தி, பொது நல விரும்பிகள் கேட்கலாமே. புதிய கட்ச்சிகள் உதாரணத்துக்கு தேசீய முன்னேற்ற திராவிட கழகம் கேட்கலாமே. மைய அரசு பணத்தைக் கைப்பற்ற நடவடிக்கை துவக்க போராட்டம் நடத்தலாமே

Related Posts Plugin for WordPress, Blogger...