என்னைப் பற்றி....

My photo
Salem, Tamil Nadu, India
சொல்கிறேன்..

12 July, 2010

எல்லோரும் ஜோரா கை தட்டுங்க ! இது என்னுடைய 50-வது பதிவு !!

இந்தியாவில் விரைவில் வணிக நீதிமன்றங்கள் !

மைய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி அண்மையில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் இந்தியாவில் விரைவில் வணிக நீதிமன்றங்கள் அமைக்கப்படவிருக்கின்றன என்றும், இதற்கான சட்ட முன்வடிவை வருகின்ற நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.

ஆனால் சட்டமாக்க உத்தேசிக்கப்பட்ட சட்ட முன்வடிவில் ரூபாய் 5 கோடிக்கும் அதிக மதிப்புள்ள வணிக நடவடிக்கைளுக்கு தனியாக  வணிக நீதிமன்றங்கள் அமைக்கப்படும் எனப்பட்டுள்ளது. இதனால் கீழமை  நீதிமன்றங்களின் பணிப்பளு, வழக்குகளின் தேக்க நிலை அப்படியேதான் இருக்கும். அதை கீழமை உரிமையியல்  நீதிமன்றங்களில் உள்ள வணிக வழக்குகளுக்கும் பொருந்தும் வண்ணம் செய்ய வேண்டும். இதற்கான விவாதம் நாடாளுமன்றத்தில் நடத்தப்பட வேண்டும். அப்படி கீழமை  நீதிமன்றங்களுக்கும் பொருந்தும் வண்ணம் செய்து விட்டால் நிறைய பலன்கள் விளையும்.

இந்தியாவில் வணிக நீதிமன்றங்கள் கீழமை நீதிமன்ற பண வரம்பு அளவில் அமைக்கப் பெற்றால் அது வழக்கமான உரிமையியல் நீதிமன்றங்களின் பணிப்பளுவை வெகுவாகக் குறைக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. உரிமையியல் நீதிமன்றங்களில் முக்கியமாக இரண்டு வகையான வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன. ஒன்று, சொத்து குறித்து எழும் வழக்குகள். மற்றொன்று பணம் வசூலித்தல் தொடர்பான வழக்குகள். அதாவது கடனுறுதி சீட்டின் உள்ளிட்ட மாற்று முறையாவணங்களின் அடிப்படையில் கொடுத்த கடனை வசூலிக்க தொடரப்படும் வழக்குகள் இன்றைய உரிமையியல் நீதிமன்றங்களின் கோப்புகளை பெரிதும் ஆக்கரமித்து உள்ளன. மேலும் மேலும் வணிக நடவடிக்கைளில் எழும் கணக்கு வழக்குகளின் அடிப்படையில் பாக்கி நிற்கும் தொகைகளை வசூலிக்கவும், மேலும் வணிக நடவடிக்கை தொடர்பாக உறுத்துக் கட்டளை கோரும் வழக்குகள், கூட்டாண்மை தொடர்பான வழக்குகள், வணிக நடவடிக்கையில் இழப்பீடு கோரும் வழக்குகள் ஆகிய வணிக வழக்குகளும் உரிமையியல் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படுகின்றன.

தற்போது சட்ட அமைச்சர் மொய்லி தனது அறிக்கையில் சொன்னவாறு வணிக நீதிமன்றங்கள் அமிக்கபட்டும், அதற்க்கு கீழமை நீதிமன்ற பணவரம்பு பொருந்தும் வண்ணமும் செய்தால்,  உரிமையியல் நீதிமன்றகளில் நிலுவையில் உள்ள வணிக வழக்குகள் வணிக நீதிமன்றங்களுக்கு மாற்றப்படலாம். வணிக நடவடிக்கை சார்ந்த புதிய வழக்குகள் இந்நீதிமன்றகளில் தாக்கல் செய்ய வழிவகை பிறக்கும். இதனால் உரிமையியல் நீதிமன்றங்களில் தேக்கியுள்ள வழக்குகள் பாதியாக குறைய வாய்ப்பு ஏற்படுகிறது. அந்நீதிமன்றங்கள் பாகப்பிரிவினை, உறுத்துக் கட்டளை, குறித்த வகை நிவாரணம் போன்ற பிற தனி உரிமை வழக்குகளில் கவனம் செலுத்தி தீர்ப்பு வழங்கலாம். வழக்குகளும் விரைவில் தீர்வு காணப்படும்.

எனவே இவ்வாறு வணிக நீதிமன்றகள் அமைப்பது வரவேற்ப்புக்குரிய விடயம்தான் என்றாலும், அதை கிணற்றில் போட்ட கல்லாக்கி விடக்கூடாது. ஏனென்றால், காசோலை மோசடி தொடர்பான வழக்குகளுக்கு தனி நீதிமன்றங்கள் அமைப்பது என முன்பு ஒரு முறை முடிவு செய்யப்பட்டது. ஆனால் அது நடைமுறையில் கொண்டு வரப்படவில்லை. அவ்வாறு கொண்டு வந்து இருந்தால், குற்றவியல் நீதிமன்றங்கள் சற்றே நிம்மதிப் பெரு மூச்சு விட்டு இருக்கும். அங்கு காசோலை மோசடி வழக்காடிகளின் கூட்டம் குறைந்திருக்கும். குற்றவியல் நீதிமன்றங்கள் தூய குற்றவியல் வழக்குகளில் கவனம் செலுத்தி வழக்குகளை விரைவில் முடித்து இருக்கலாம். எனவே வணிக நீதிமன்றங்களை ஏட்டளவில் மட்டுமல்லாமல் நடைமுறையிலும் கொண்டு வர ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முயல வேண்டும்.

மொய்லியின் அறிக்கையில் உள்ள மற்றொரு முக்கிய விடயம் :

சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லியின் அறிக்கையில் மற்றொரு வரவேற்கத்தக்க அம்சமும் உள்ளது. அது சட்டக் கல்வி தொடர்பானது. அந்த அறிக்கையில், "இந்தியாவில் 933 சட்டக் கல்லூரிகள் உள்ளன. சட்டக் கல்லூரிகளின் பாடத் திட்டங்களை மேம்படுத்தவும், சட்டக்கல்வியில் சீர்திருத்தங்களை கொண்டு வரவும் முன்னரிமை வழங்கப்படும். ஏறத்தாழ 10 லட்சத்திற்கும் அதிகமான வழக்குரைஞர்கள் உள்ள இந்தியாவில் சட்டக் கல்வி முறை மாற்றியமைக்கப்படும். அவற்றின் திறனை அதிகரிப்பதுடன், குறைந்தபட்சம் மாநிலத்திற்கு ஒன்று வீதம் தேசிய அளவிலான சட்டக் கல்வி நிறுவனங்கள் (லா ஸ்கூல்) அதிகரிக்கப்படும்."

நமது தமிழகத்தில் தேசிய சட்டக் கல்வி நிறுவனம் இல்லை. ஆனால் அதற்கு இணையாக முனைவர் அம்பேத்கர் சீர்மிகு சட்டப் பள்ளி சென்னையில் இயங்கி வருகிறது. இது கூட இல்லாமல் எத்தனையோ மாநிலங்கள் நமது இந்தியாவில் உள்ளன. எனவே மாநிலந்தோறும் ஒரு தேசிய சட்டப் பள்ளியை அமைக்க ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பாராட்டப்பட வேண்டிய ஒன்று.
 

இது என்னுடைய 50-வது பதிவு:

வலைப்பதிவில் எழுதத்தொடங்கி மெல்லமெல்ல இன்று 50-வது பதிவை எட்டிவிட்டேன். அதற்கு உங்கள் தோழமையும், ஆதரவும், பின்னூட்டங்களும், ஓட்டுகளும்தான் காரணம் என்றால் அதில் மிகை ஏதும் இல்லை. உங்களிடம் நிறைய பகிர்ந்து கொண்டு உள்ளேன். சட்டம், சட்டக் கல்வி, சட்ட விழிப்புணர்வு தொடர்பாக எனக்கு தெரிந்ததை, அறிந்ததை நான் இந்த வலைப்பதிவு மூலம் உங்களிடம் சொல்லி உள்ளேன். இன்னும் சொல்லப் போகின்றேன். மானுடம் எடுத்தது தேவைப்படுவோருக்கு தெரிந்ததை அறிந்து, இருப்பதை கொண்டு உதவி செய்வது என்று நான் நம்புகிறேன். ஒரு பதிவை எழுத குறைந்தபட்சம் 2 மணி நேரம் ஆகிறது. இந்த வலைப்பதிவில் எழுதுவதால் எனக்கு வருமானம் ஏதும் இல்லை. ஆனால் யாருக்கேனும் பயனாகும், யாருடைய கருத்தையாவது கவரும், யாரையேனும் சிந்தக்கத் தூண்டும், அறிவிக்கச் செய்யும், மகிழ்விக்கச் செய்யும் என்ற உளப்பூர்வமான உவகை உணர்வுடன் எழுதி வருகின்றேன். என்னுடைய எழுத்தில் வலிமையும், பலிதமும் கூட, இப்பணி மேலும் சிறப்புடன் தொடர உங்கள் வாழ்த்துகளை வேண்டி நிற்கின்றேன்.

17 comments:

Indian said...

வாழ்த்துகள்!
தொடருங்கள் உங்கள் சேவையை.

அமைதி அப்பா said...

வாழ்த்துக்கள் சார்.
உங்கள் சட்டப்பார்வை மூலம் நிறைய செய்திகளை அறியமுடிகிறது.
எனது மகனை சட்டக்கல்வி பயில நான் சேர்த்த போது, இப்படி ஒரு வழிகாட்டி எனக்கு கிடைக்கவில்லை. இருந்தும் பல இடங்களில் கேட்டும், படித்தும் பல விஷயங்களைத் தெரிந்துகொண்டேன்.
School of Excellence in Law குறித்து இன்றும் பலர் அறியவில்லை என்பது வருத்தமான செய்தி.

//ஒரு பதிவை எழுத குறைந்தபட்சம் 2 மணி நேரம் ஆகிறது.//

ஆமாம் சார். நிச்சயமாகப் பொறுமை வேண்டும். மேலும் நமக்கு தெரிந்ததை, பிறருக்கு சொல்வோம் என்கிற மனநிலை இருந்தால் மட்டுமே அது சாத்தியம். அது தங்களிடம் நிறைய இருப்பதாகவே எனக்கு தோன்றுகிறது.

தொடரட்டும் தங்கள் பணி, சட்டம் மற்றும் சட்டக்கல்வி பற்றிய விழிப்புணர்வு எல்லோரும் அடையவேண்டும். அதற்கு தாங்கள் ஆற்றும் பணிக்கு பாராட்டுக்கள்.

கக்கு - மாணிக்கம் said...

வாழ்த்துக்கள். நிறைய எழுதுங்கள்

TechShankar said...

congrats

ராம்ஜி_யாஹூ said...

வாழ்த்துக்கள் ஐம்பதிற்கு

வணிக வழக்குகள நீதி மன்றங்களில் சிறு வணிக பிரச்சினைகளையும் வாதாட வழி செய்ய வேண்டும்

Sumi said...

வாழ்த்துகள்!
தொடருங்கள் உங்கள் சேவையை
தொடரட்டும் தங்கள் பணி, சட்டம் மற்றும் சட்டக்கல்வி பற்றிய விழிப்புணர்வு எல்லோரும் அடையவேண்டும்.

Advocate P.R.Jayarajan said...

//வாழ்த்துகள்!
தொடருங்கள் உங்கள் சேவையை//

நன்றி திரு இந்தியன் அய்யா ....

Advocate P.R.Jayarajan said...

//வாழ்த்துக்கள் சார்.
உங்கள் சட்டப்பார்வை மூலம் நிறைய செய்திகளை அறியமுடிகிறது.//

நன்றி திரு அமைதி அப்பா...

Advocate P.R.Jayarajan said...

//School of Excellence in Law குறித்து இன்றும் பலர் அறியவில்லை என்பது வருத்தமான செய்தி.//


உண்மை திரு அமைதி அப்பா... ஆனால் இன்று தெரிகிறது. காரணம், அதில் படித்த மாணவ-மாணவியர் தற்போது நல்ல பணியிலும், மேலமை நீதிமன்றங்களில் சிறந்த வழக்குரைஞர்களாக உள்ளனர். இந்த ஆண்டு சேர்கைக்குக்கு தகுதி மதிப்பெண் எவ்வளவு தெரியுமா? +2 -வில் மொழி பாடம் நீங்கலாக முக்கிய பாடங்களில் 95 விழுக்காடு பெற்றிருக்க வேண்டும்.

Advocate P.R.Jayarajan said...

ஆமாம் சார். நிச்சயமாகப் பொறுமை வேண்டும். மேலும் நமக்கு தெரிந்ததை, பிறருக்கு சொல்வோம் என்கிற மனநிலை இருந்தால் மட்டுமே அது சாத்தியம். அது தங்களிடம் நிறைய இருப்பதாகவே எனக்கு தோன்றுகிறது.//

நன்றி சார். பொறுமை கடலினும் பெரிது. பெருமையும் பெற்றுத் தரும்.

Advocate P.R.Jayarajan said...

//வாழ்த்துக்கள். நிறைய எழுதுங்கள்//

வாழ்த்துகளுக்கு நன்றி திரு கக்கு. மாணிக்கம் சார்.

Advocate P.R.Jayarajan said...

//congrats//

Thanks Thiru. TechShankar Sir.

Advocate P.R.Jayarajan said...

//வாழ்த்துக்கள் ஐம்பதிற்கு... .//

வாழ்த்துகளுக்கு நன்றி திரு ராம்ஜி_யாஹூ சார்.

Advocate P.R.Jayarajan said...

//வணிக வழக்குகள நீதி மன்றங்களில் சிறு வணிக பிரச்சினைகளையும் வாதாட வழி செய்ய வேண்டும்//


இதைத்தான் நானும் வலியுறுத்துகின்றேன்.

Advocate P.R.Jayarajan said...

//வாழ்த்துகள்! தொடருங்கள் உங்கள் சேவையை
தொடரட்டும் தங்கள் பணி, சட்டம் மற்றும் சட்டக்கல்வி பற்றிய விழிப்புணர்வு எல்லோரும் அடையவேண்டும்.//

வாழ்த்துகளுக்கு நன்றி திருமதி சுமிதா கேசவன் அவர்களே..

வெறும்பய said...

வாழ்த்துகள்!
தொடருங்கள் உங்கள் சேவையை.

Advocate P.R.Jayarajan said...

//வாழ்த்துகள்!
தொடருங்கள் உங்கள் சேவையை.//

நன்றி திரு வெறும்பய அவர்களே...

Related Posts Plugin for WordPress, Blogger...