என்னைப் பற்றி....

My photo
Salem, Tamil Nadu, India
சொல்கிறேன்..

03 July, 2010

அசைவம் இருக்கு.. குடிக்கிறிய லே ?

பின் மதிய கடற்கரையோர வெயில் கார் கண்ணாடியை ஊடுருவி கன்னத்தை சுட்டது. கன்னியாகுமரி - மதுரை நாற்கர சாலை 120 கிலோ மீட்டர் வேகத்தில் பின்னோக்கி வழுக்கிக் கொண்டு சென்றது. ஆங்காங்கே இன்னும் ஆட்கள் சாலை செப்பணிகளை செய்து கொண்டிருந்தனர். மரங்களுக்கு பதிலாக விண்ட்மீல் எனப்படும் காற்றாலைகள் திரும்பிய பக்கம் எல்லாம் ரட்சததனமாக சுற்றிக் கொண்டிருந்தன. கன்னியாகுமரியில் கண்களுக்கு நல்ல விருந்து கிடைத்தது. எனவே அப்போது பசி தெரியவில்லை. ஆனால் கன்னியாகுமரியை விட்டு கிளம்பத் தயாராகி காரில் ஏறி அமர்ந்து சுமார் 50 கிலோ மீட்டர் தூரத்தை கடந்தவுடன் வயிறு என்று ஒன்று இருப்பது தெரிய வந்தது. 'அய்யா... எனக்கு ஏதாச்சும் தருமம் பண்ணுங்க சாமி...' என்று வயிறு மூளையிடம் கெஞ்சுவதை உணர முடிந்தது. எனவே அன்னமிட உணவகம் ஏதும் தென்படுகிறதா என்று கண்கள் நாலாபக்கமும் அலை பாய்ந்தன. ஊருக்கு வெளியே நாற்கர சாலை பாய்ந்து செல்வதால் எந்த மகாராசனும் அன்ன சத்திரம் ஏதும் கட்டி வைத்திருக்கவில்லை. ...

என்ன பட்டுக்கோட்டை பிரபாகர் கதை வரிகளைப் போல் உள்ளதா?

அது ஒன்னுமில்லிங்க... போன வாரம் கோவையிலே உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடந்தது. தொடக்க விழா உள்ளிட்ட முதல் மூன்று நாட்கள் நிகழ்சிகளை கம்பிவடத் தொலைகாட்சியில் பார்த்தேன். கோவைக்குப் போய் கூட்டத்திலே அலைமோதி நேரில் பார்ப்பதை விட இப்படி பார்ப்பது ரொம்ப வசதியா இருந்தது. இன்னும் இரண்டு நாள் விடுமுறை இருந்தது. சரி... கன்னியாகுமரி வரைக்கும் போயிட்டு வரலாம் என்று காரை கிளப்பினேன். அப்படியே தமிழுக்கு வித்தான திரு வள்ளுவர் சிலையையும் பார்த்துவிட்டு வருவது இந்த நேரத்திற்கு பொருத்தமாக இருக்கும்னு கொஞ்சம் மாத்தி யோசிச்சேன். குழந்தைகளை கூட்டிகிட்டு கிளம்பிவிட்டேன்.

கடலோர விடுதியில் அறை எடுத்து தங்கினோம். அறையிலிருந்தபடியே காலை 6.24-க்கு சூரிய உதயம் பார்த்தோம். காலை குமரியம்மன் தரிசனம். சிற்றுண்டி முடித்து விவேகானந்தர் பாறைக்கு சென்றோம். அப்படியே அய்யன் வள்ளுவர் சிலைக்கும் சென்று வந்தோம். இப்போதான் முதல் தடவையா அந்த இடத்திற்கு போறேன். முன்பு ஒரு முறை போன போது வள்ளுவர் சிலைக்கு படகு சவாரி நிறுத்தப்பட்டிருந்தது. இந்த முறை அங்கு படகு போனது.

பிரமாண்டமாக வள்ளுவர் நிற்கிறார். அன்னாந்து பார்த்தால் மேகக் கூட்டங்களின் பின்னணியில் வள்ளுவர் நம் மீது சாய்ந்து விழுந்து விடுவரோ என்று ஒரு பிரமை ஏற்பட்டது. நிழற்படங்கள் எடுத்துக்கொண்டோம்.

காலை சிற்றுண்டியை தாமதமாக சாப்பிட்டதாலும், பார்த்த காட்சிகளை மனது அசை போட்டுக் கொண்டு இருந்ததாலும் அப்போது பசி தெரியவில்லை. எனவே அறையை காலி செய்து விட்டு மதியம் சுமார் 2.30 மணி அளவில் மதுரை வழியாக சேலம் கிளம்பினோம். இப்போது முதல் பத்தியை மீண்டும் வாசிக்கவும்.

நாற்கர சாலையில் சென்று கொண்டிருந்த போது அச்சாலையோரம் ஒருவர் தனது மிதி வண்டியில் கூடை ஒன்றை வைத்துக் கொண்டு அருகில் நுங்கு காய்களை கொட்டி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். பசி நேரத்தில் ஆபத்பாந்தவனாக அவர் தெரிந்தார். எனவே உடனே காரை படக்கென நிறுத்தி நுங்கு திங்க எல்லோரும் இறங்கினோம். அவர் ஒரு நுங்கு காயை எடுத்து மளமளவென கூரான அரிவாளால் சீவினார். எங்கள் கைகளில் பனைமர ஓலை ஒன்றை கோப்பை வடிவில் மடக்கி கொடுத்தார். பின் நுங்கு காயின் மூன்று கண்களில் இருந்த நுங்கை அரிவாளின் முனை கொண்டு சுரண்டி எடுத்து அந்த பனை ஓலையில் கொதகொதவென போட்டார். அடுத்து கூடையில் துணி சுற்றி வைத்திருந்த பானையில் இருந்து நீராக இருந்த ஒரு திரவத்தை ஊற்றினார். பிறகு ஒரு புன்முறுவலுடன் "இது பதனி லே.. இளசான நுங்கொட குடிச்சு பாரும்... அம்ம்புட்டு ருசியா இருக்குமில்லா .. " என்று எல்லோருக்கும் ஒரு டம்ளர் உற்றினார். சொன்னது போல ருசியாகத்தான் இருந்தது. நுங்கு 10 ரூபா. ஒரு டம்ளர் பதநீர் 10 ரூபா. பசி சற்றே தணிந்தது போல் இருந்தது.

பணம் கொடுத்த போது நுங்கு கடைக்காரர் அருகில் வந்து லேசாக காதில் குசுகுசுவென "அசைவம் இருக்குலே.. ஒரு டம்ளர் ஊத்தட்டுமா லே..." என்றார். நானும், "அதேன்னேலே அசைவம்?"... என்று கேட்டேன். அதற்கு அவர், "அட... இது கூட தெரியாதா? அசைம்ன்னா கள்ளுலே கள்ளு.." என்றார்.

"ஏலே... ஆளை விடு லே..." என்றவாறு காரை நோக்கி வேகமாக நடையை கட்டினேன்.

காலை சூரிய உதயம்
(விடுதி அறையிலிருந்து எடுத்த நிழற்படம்)

விவேகானந்தர்  பாறை
(விடுதி அறையிலிருந்து எடுத்த நிழற்படம்)

அய்யன் வள்ளுவர் சிலை
(விடுதி அறையிலிருந்து எடுத்த நிழற்படம்)

விவேகானந்தர் மண்டபத்திற்கு முன்பு என் மகன்

நான்...
(விரைவில் வள்ளுவராகும் அறிகுறிகள் தென்படுகிறதா?)

வள்ளுவர் சிலையை அடைந்தோம்

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின் நிறைவு நாளில் நான் வள்ளுவரின் காலை தொட்டு வணங்குகிறேன்  ..

வள்ளுவரின் காலடியில் என் மகன் வாஞ்சையுடன்..

கடல் காற்று ஆளைத் தள்ளுகிறது..

வள்ளுவர் சிலையிலிருந்து விவேகானந்தர் பாறை...   

21 comments:

Robin said...

Super!

Maximum India said...

சுவாரஸ்யமான பதிவு.

ரசிக்க வைத்த நிழற்படங்கள்.

நன்றி மற்றும் வாழ்த்துக்கள்!

Advocate P.R.Jayarajan said...

Thanks Robin sir..

Advocate P.R.Jayarajan said...

Nanri Maximum India...

rk guru said...

நல்லா பதிவு....அதைவிட புகைப்படம் அருமையா எடுத்திருக்கிங்க....உங்க மகன் உங்க மனைவி ஜாடை போல... ரொம்ப அழகா இருக்கான். நீங்களும் சிங்கம் சூர்யா போல இருக்கீங்க....

வடுவூர் குமார் said...

அருமையான‌ ப‌ட‌ங்க‌ள்.

ராம்ஜி_யாஹூ said...

nice post and pics

There will be lot of small hotels near Tovalai, aaralvaaymozi, kaaval kinaru, moondradaippu.

ராம்ஜி_யாஹூ said...

nice post and pics

There will be lot of small hotels near Tovalai, aaralvaaymozi, kaaval kinaru, moondradaippu.

Advocate P.R.Jayarajan said...

//நல்லா பதிவு....அதைவிட புகைப்படம் அருமையா எடுத்திருக்கிங்க....//

நன்றி ஆர்கே. குரு.

Advocate P.R.Jayarajan said...

//உங்க மகன் உங்க மனைவி ஜாடை போல... ரொம்ப அழகா இருக்கான். நீங்களும் சிங்கம் சூர்யா போல இருக்கீங்க....//

உண்மை. ஆனால் நான் துணையில்லா சிங்கம். என் மனைவி மறைந்து சுமார் 14 ஆண்டுகள் ஆகின்றன..

Advocate P.R.Jayarajan said...

//அருமையான‌ ப‌ட‌ங்க‌ள்//

நன்றி திரு வடுவூர் குமார் ....

Advocate P.R.Jayarajan said...

//nice post and pics//

Thanks for comments Mr. Ramji_yahoo

Advocate P.R.Jayarajan said...

//There will be lot of small hotels near Tovalai, aaralvaaymozi, kaaval kinaru, moondradaippu.//

Thanks for information Mr. Ramji_yahoo

sakthi said...

dear sir,
nice trip enjoyed great

Advocate P.R.Jayarajan said...

//nice trip enjoyed great//

Thanks for comments Mr. Sakthi.

Advocate P.R.Jayarajan said...

//நல்லா பதிவு....அதைவிட புகைப்படம் அருமையா எடுத்திருக்கிங்க....//

நன்றி திரு ஆர்கே.குரு.

Advocate P.R.Jayarajan said...

//உங்க மகன் உங்க மனைவி ஜாடை போல... ரொம்ப அழகா இருக்கான். //

உண்மை. அவன் அழகன்.

Advocate P.R.Jayarajan said...

//ரொம்ப அழகா இருக்கான். நீங்களும் சிங்கம் சூர்யா போல இருக்கீங்க....//

நான் ஒரு துணையில்லா தனி சிங்கம். என் மனைவி மறைந்து சுமார் 14 ஆண்டுகள் ஆகின்றன..

Advocate P.R.Jayarajan said...

//அருமையான‌ ப‌ட‌ங்க‌ள்//

நன்றி திரு வடுவூர் குமார் ...

M.Dharmaprabu said...

It is nice sir... but it is tto much that u are focussing VAlluvar in future... ha ha ha just for fun....

Advocate P.R.Jayarajan said...

ha ha ha....

Related Posts Plugin for WordPress, Blogger...