என்னைப் பற்றி....

My photo
Salem, Tamil Nadu, India
சொல்கிறேன்..

04 June, 2010

ஆசியா நாடுகளின் உச்ச நீதிமன்றங்கள் - ஒரு நிழற்பட பார்வை

இந்திய உச்ச நீதிமன்றம், தில்லி.

பங்களாதேஷ் உச்ச நீதிமன்றம்

 
இந்தோனேசியா உச்ச நீதிமன்றம்

மலேசியா - கூட்டாட்சி நீதிமன்றம்

ஹாங்காங் - பழைய உச்ச நீதிமன்றம்

ஹாங்காங் - இறுதி மேல்முறையீட்டு நீதிமன்றம்
(இன்றுள்ள உச்ச நீதிமன்றம்)

வியட் நாம்  சோஷலிச குடியரசின் உச்ச மக்கள் நீதிமன்றம்  
(Head offfice The Supreme People's Court of The Socialist Repulic of Viet Nam)

பிலிப்பைன்ஸ் உச்ச நீதிமன்றம்

 
சிங்கப்பூர் உச்ச நீதிமன்றம் (பழையது)

சிங்கப்பூர் உச்ச நீதிமன்றம் (புதியது)

மியான்மர் (பர்மா) உச்ச நீதிமன்றம் (ரங்கூன்)

இலங்கை உச்ச நீதிமன்றம், கொழும்பு

ஜப்பான் உச்ச நீதிமன்றம்

 
மால்தீவ்ஸ் உச்ச நீதிமன்றம் 

 
நேபாள் உச்ச நீதிமன்றம்

பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம்

சீனக் குடியரசு உச்ச நீதிமன்றம், தைபே (தைவான்)

சீன மக்கள் உச்ச நீதிமன்றம், பீஜிங்

 
தென் கொரியா உச்ச நீதிமன்றம்

தாய்லாந்து உச்ச நீதிமன்றம்

03 June, 2010

காசோலை வரைதல் பற்றி RBI-யின் முக்கிய சுற்றறிக்கை

              வங்கி வாடிக்கையாளர்கள் காசோலை வழங்குவது தொடர்பாக இந்திய சேம வங்கி (RBI) அண்மையில் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. எதிர்வரும் 01-07-2010 முதல் அமலுக்கு வரும் அச்சுற்றறிக்கையின்படி,

              - வாடிக்கையாளர்கள் காசோலைகள் வழங்கும் போது அதில் உள்ள செலுத்தப் பெறுநரின் (பேயி) பெயரிலோ, காசோலை தொகையிலோ (எழுத்திலும் சரி எண்ணிலும் சரி)  திருத்தங்கள் ஏதும் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

              -செலுத்தப் பெறுநரின் பெயரில் அல்லது செலுத்தப்பட வேண்டிய தொகையில் திருத்தங்கள் / அடித்து எழுதுதல் ஆகியவற்றுடன் காசோலை வழங்கப்பட்டால் அது வங்கியால் ஏற்றுக் கொள்ளப்படமாட்டது அல்லது மதிப்பிற்குரிய பணம் வழங்கப்படமாட்டது.

              -செலுத்தப் பெறுநரின் பெயரிலோ, காசோலை தொகையிலோ (எழுத்து அல்லது எண்ணில் உள்ள தொகை) மாற்றங்கள் ஏதும் செய்யப்பட வேண்டி வந்தால், அதற்கு வாடிக்கையாளரால் புதிய காசோலை வழங்கப்பட வேண்டும்.

             மேற்படி வழிகாட்டு நெறிகள் மோசடியான திருத்தங்களை அடையாளம் கண்டு அதை கட்டுப்படுத்த வங்கிகளுக்கு உதவுகிறது. எனவே எதிர்வரும் 01-07-2010 முதல் செலுத்தப் பெறுநரின் பெயர், எழுத்தில் உள்ள தொகை, எண்ணில் உள்ள தொகை ஆகியவற்றில் திருத்தங்களுடன் வரும் காசோலைகளை (மேற்படி வழிகாட்டு நெறிகளின் அடிப்படையில்) வங்கிக் கிளைகள் திருப்பிக் கொடுத்து விட வேண்டும்.
  
             எனினும் காசோலையின் மீது ஒரேயொரு திருத்தம் செய்ய அனுமதிக்கப் படுகிறது. அதாவது காசோலை தேதியில் திருத்தம்  செய்யலாம்.


            எனவே வாடிக்கையாளர்கள் 01-07-2010 முதல் காசோலை வரையும் போது விழிப்புடன் இருக்கவும்.


02 June, 2010

ஒரு இளம் பெண்ணுக்கு ஏற்பட்ட பிரச்சனை

திருமணமாகாத ஒரு இளம்பெண்ணுக்கு ஒரு சிக்கல் ஏற்பட்டது. அவள் தான் கர்ப்பமாக இருப்பதை கண்டறிந்து அதிர்ந்து போனாள். தனது தாய், தந்தையின் ஏச்சுக்கும், பேச்சுக்கும் ஆளாக வேண்டுமே என்று அஞ்சி நடுங்கினாள்.

எனினும் சற்றே தைரியத்தை வரவழைத்துக் கொண்டு இந்த அதிர்ச்சி தகவலை தனது தாயிடம் சொன்னாள். இதை கேட்டு அவளது தாய் அவளை விட மிகவும் அதிர்ச்சியும் கோபமும் அடைந்தாள். உடனே, "எந்த பன்னி உன்னை இந்த நிலைக்கு ஆளாக்கினான்? எனக்கு உடனே மேட்டர் தெரிஞ்சு ஆகனும்" என்று உரத்த குரலில் கத்தி ஆவேசத்துடன் கேட்டாள் அத்தாய்.

இதை அடுத்து அப்பெண் உடனே செல்லிடபேசி எடுத்து தமாசுக்கு பேசினாள். சுமார் ஒரு மணி நேரம் கழித்து தாமஸ் அவளது வீட்டிற்க்கு வந்தான். பார்க்க உயரமாக, இலட்சணமாக, பகட்டான ஆடை அணிந்து ஒரு BMW காரில் அவன் வந்து இறங்கினான். அவன் பூசி இருந்த வாசனாதி தைலம் (அதாங்க 'சென்ட்') அவ்விளம் பெண்ணின் வீடு முழுவதும் அளாவியது.

அவன் வரவேற்பறையில் அமர்ந்தான். அப்பெண், அவளது தாய், தந்தை ஆகியோரும் அமர்ந்து இருந்தனர். அப்போது அவன், "வணக்கம். நான் தாமஸ். உங்க பெண் தனது பிரச்சனையை பற்றி என்னிடம் சொன்னாள். ஆனா நீங்க என்னை மன்னிக்கணும். என் குடும்ப சூழ்நிலை காரணமாக உங்க பெண்ணை நான் கல்யாணம் செய்து கொள்ள முடியாது. இருந்தாலும் இந்த பிரச்சனைக்கு நான் பொறுப்பேத்துக்கிறேன்" என்றான். மேலும் அவன் தொடர்ந்து சொல்லும் போது...

"உங்க பெண்ணுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தால் நான் அக்குழந்தைக்கு என்னோட இரண்டு கடைகளையும், ஒரு வீட்டையும், ஒரு கடற்கரை பங்களாவையும் எழுதி வைத்து, வங்கியில் 1 மில்லியன் டாலர் ரொக்கப் பணத்தையும் வைப்பீடு செய்கின்றேன்.

உங்க பெண்ணுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தால் நான் அக்குழந்தைக்கு என்னோட இரண்டு தொழிற்சாலைகளை எழுதி வைத்து, வங்கியில் 2 மில்லியன் டாலர் ரொக்கப் பணத்தையும் வைப்பீடு செய்கின்றேன்.

இரட்டைக் குழந்தைகள் பிறந்தால் ஆளுக்கு ஒரு தொழிற்சாலையையும், தலைக்கு 1 மில்லியன் டாலர் பணத்தையும் வைப்பீடு செய்கின்றேன்"

இவ்வாறு ஒரு தீர்வழி சொன்ன தாமஸ் இப்படி ஒரு கேள்வியை அவர்கள் முன் வைத்தான்.

அதாவது, "ஒருவேளை உங்க பெண்ணுக்கு கருச் சிதைவு ஏற்பட்டாலோ, பிரசவத்திலே பிரச்சனை ஏற்பட்டு குழந்தை இறந்து பிறந்தாலோ நான் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்" என்று அப்பெண் ணின் தாய், தந்தையிடம் கேட்டான்.

இது வரை முகத்தில் எந்த சலனமும் காட்டாமல் அப்பாவியாக அமர்ந்து இருந்த அப்பெண்ணின் தந்தை தாமசின் தோள் மீது ஆதரவாக கை வைத்து பின்வருமாறு சொன்னார்...


"நீங்கள் மறுபடியும் ஒரு அட்டெம்ப்ட் அடித்து பார்க்கலாம்" என்றார் அவர்.


(கலி முத்திடுத்து சாமி... )

31 May, 2010

ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வதால் பிறக்கும் குழந்தைகளுக்கு மூதாதையர் சொத்தில் பங்கு இல்லை - இந்திய உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.

உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு:

ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழும் உறவில் (live-in-relationship) பிறக்கும் குழந்தை இந்து மூதாதையர் பங்குரிமை சொத்தில் வாரிசுரிமை கோர முடியாது என்றும், அக்குழந்தை பெற்றோர்களின் சுய சம்பாத்திய சொத்து ஏதும் இருந்தால் அதில் வேண்டுமானால் பாகம் கோரலாம் என்றும் நமது இந்திய உச்ச நீதிமன்றம் மாறுபட்ட, அதிரடியான முக்கியத் தீர்ப்பு ஒன்றை கடந்த வாரம் மேல்முறையீடு வழக்கு ஒன்றில் நல்கியுள்ளது.

இந்து திருமண சட்டத்தின் பிரிவு 16 என்ன சொல்கிறது?

இந்து திருமண சட்டம் பிரிவு 16-ஆனது முறையற்ற மணபிறப்பு குழந்தைகளைப் பொறுத்த வரையில் ஓர் சட்டங்கொள் புனைவு (legal fiction) உரிமையை உருவாக்கியுள்ளது. அதாவது இல்லா நிலை மற்றும் தவிர்தகு நிலை திருமணத்தின் வாயிலாக பிறக்கும் குழந்தைகளின் சட்டமுறை நிலை (Legitimacy of children of void and voidable marriages) குறித்து அது கூறுகிறது. சற்று விளங்கச் சொன்னால், இந்து திருமண சட்டத்தின் வகைமுறைகளில் ஒரு இந்து ஆண் அல்லது பெண் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்றால் அதற்கு சில நிபந்தனைகள் வரையறுக்கபட்டுள்ளன. எடுத்துக்காட்டாக ஒரு இந்து ஆணோ, பெண்ணோ திருமணம் செய்து கொள்ளும் காலத்தில் அவருக்கு ஏற்கனேவே திருமணம் ஆகி அந்த வாழ்க்கைத் துணை உயிருடனோ அல்லது அத்திருமணம் சட்ட முறையில் இரத்து ஆகாமல் அமலிலோ இருத்தல் ஆகாது. ஆனால் அப்படி இருந்து அந்த இந்து ஆணோ, பெண்ணோ மீண்டும் மற்றொருவரை திருமணம் செய்து கொண்டால் அது சட்டப்படி செல்லாது. அது வெறுமனே சேர்ந்து வாழும் உறவு முறை (live-in-relationship) மட்டுமே ஆகும். அப்படிப்பட்ட கணவனோ, மனைவியோ முறையே 'சட்டமுறையற்ற கணவன் அல்லது மனைவி' (Illegitimate husband or wife) என்று மட்டும்தான் ஆவர். இப்படிப் பட்டவர்களுக்கு ஒருவர் மற்றொருவருக்கு எதிராக எந்த சட்ட உரிமையும் எழாது. வாழ்கை பொருளுதவியோ (ஜீவனாம்சம்), சொத்தில் உரிமையோ கோர இயலாது. இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் "சட்டமுறையற்ற மணப் பிறப்பு குழந்தைகள்" (Illegitimate children) ஆகின்றனர். எனினும் மேற்படி பிரிவு 16-ஆனது இப்படிப்பட்ட "சட்டமுறையற்ற மணப் பிறப்பு குழந்தை களுக்கு" பெற்றோர்களின் சொத்தில் வாரிசுரிமை கொண்டாடும் உரிமை உள்ளிட்ட எல்லா நடைமுறை நோக்கங்களுக்கும் அக்குழந்தைகள் சட்ட முறை மணப் பிறப்பு குழந்தைகளாகவே பாவிக்கப்பட வேண்டும் என்று ஒரு புனைவான உரிமையை சட்டப்படி வழங்கியுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு:

முன்னதாக இந்த வழக்கின் இரண்டாம் மேல்முறையீட்டு நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியிருந்தது. அதன்படி, நீண்ட கால உறவில் வாழும் போது அங்கு திருமண உறவு உள்ளது என்ற அனுமானம் இருப்பதால், அப்படிப்பட்ட வாழ்க்கை உறவில் பிறக்கும் குழந்தைகளுக்கு மூதாதையர் சொத்தில் பங்குரிமை உள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருந்தது. ஆனால் இத்தீர்ப்பை உச்ச நீதிமன்றத்தின் கோடை விடுமுறை கால மாண்பமை நீதியரசர்கள் திரு பி.எஸ். சவுஹன், சுவேதந்தர் குமார் ஆகியோர் அடங்கிய ஆயம் இரத்து செய்து அப்படிப்பட்ட குழந்தைகளுக்கு மூதாதையர் சொத்தில் பங்குரிமை இல்லை என்று தீர்ப்புரைத்தது.

கீழமை நீதிமன்றத்தில் எழுந்த வழக்கின் சங்கதிகள்:

இவ்வழக்கின் சங்கதிகள்படி, ரங்கம்மாள் என்பவர் முத்து ரெட்டியார் என்பவருடன் 'வாழ்கை உறவு முறையில்' வாழ்ந்து வந்ததாகவும், அதன் வாயிலாக இரண்டு குழந்தைகள் பிறந்ததாகவும்,   எனவே அக்குழந்தைகளுக்கு முத்து ரெட்டியாரின் மூதாதையர் சொத்தில் பாகம் கேட்க உரிமை உண்டு என்றும் கோரி வழக்கிட்டார்.

இந்நிலையில் முத்து ரெட்டியாரின் மூதாதையர் சொத்தின் மீது 'முந்தைய உரிமை உள்ளவர்களான' (predecessor-in-interest) ஒரு பாரத மாதா என்பவரும் மற்றொருவரும் ரங்கம்மாளின் மேற்படி வழக்குக் கோரிக்கையை எதிர்த்து அவர் மீது ஒரு வழக்கை தாக்கல் செய்கின்றனர். அதில் ரங்கம்மாள் என்பவர் ஒரு அழகர்சாமி ரெட்டியார் என்பவரின் சட்டப்படியான மனைவி ஆவர் என்றும், அவருக்கும் முத்து ரெட்டியருக் கும்  மண வாழ்கை உறவு முறை ஏதும் இல்லை என்றும் வாதுரைத்திருந்தனர்.

இந்த இரண்டு வழக்கையும் விசாரித்த கீழமை விசாரணை நீதிமன்றம் ரங்கம்மாள் என்பவர் அழகர்சாமி ரெட்டியார் என்பவரின் மனைவி என்றும், மேற்படி ரங்கம்மாள் முத்து ரெட்டியருடன் வாழ்த்த பொழுது அழகர்சாமி ரெட்டியார் உயிருடன் இருந்து உள்ளார் என்றும் தீர்ப்புரைத்து, மேற்படி பாரத மாதாவும், மற்றொருவரும் தாக்கல் செய்த வழக்கில் அவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு கூறியது.

இத்தீர்ப்பை முதல் மேல்முறையீட்டு நீதிமன்றமும் உறுதி செய்தது. ஆனால் இதை இரண்டாம் மேல்முறையீட்டில் சென்னை உயர் நீதிமன்றம் இரத்து செய்து ரங்கம்மாளின் இரண்டு குழந்தைகளும் முத்து ரெட்டியாரின் மூதாதையர் சொத்தில் பாகம் கோர உரிமை உண்டு என்று தீர்ப்பு வழங்கியது.

இத்தீர்ப்பை எதிர்த்து பாரத மாதாவும், மற்றொருவரும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இதை ஆராய்ந்த உச்ச நீதிமன்றம், வழக்கின் ஆவணங்களில் இருந்து முத்து ரெட்டியார் தனது கூட்டுக் குடும்ப சொத்தை பாகப்பிரிவினை செய்யவில்லை என்பதும், அவர் உயில் ஏதும் எழுதி வைக்காமல் 1974-ஆம் ஆண்டில் இறந்து விட்டார் என்பதும் தெளிவாக தெரிகிறது. எனவே மண உறவு முறையில் சேர்ந்து வாழ்ந்ததால் பிறந்த சட்டமுறையற்ற மணப் பிறப்பு குழந்தைகளுக்கு முத்து ரெட்டியாரின் மூதாதையர் சொத்தில் பாகம் கோர உரிமை உண்டா என்ற கேள்வியே எழாது என்றும், அவர்களுக்கு அத்தகு உரிமை இல்லை என்றும் தீர்ப்பு வழங்கியது.

இத்தீர்ப்பை எழுதும் போது மாண்பமை நீதியரசர் சவுஹான், "உயர் நீதிமன்றம் ஆவண சாட்சியங்களை மீண்டும் பரிசீலித்து இரண்டு கீழமை நீதிமன்றங்களும் எடுத்திருந்த முடிவிற்கு முரணாக ஒரு முடிவை எடுத்துள்ளது. சட்டம் சார்ந்த முக்கிய பிரச்சனை ஏதும் உள்ளடங்கி இருக்காத நேர்வில் இரண்டாம் மேல்முறையீட்டில் உயர் நீதிமன்றம் சாட்சியங்களை மீண்டும் பரிசீலனை செய்திருப்பது சரியானதல்ல. இரண்டு கீழமை நீதிமன்றங்களும் ரங்கம்மாள் என்பவர் அழகர்சாமி என்பவரின் சட்டப்படியான மனைவி என்பதை பதிவு செய்துள்ளது" என்று பகர்ந்துள்ளார்.

முடிவில் பாரத மாதா மற்றும் மற்றொருவரின் மேல்முறையீட்டை அனுமதித்து சென்னை உயர் நீதிமன்றத்தின் குறையுடைய தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இரத்து செய்தது.

Related Posts Plugin for WordPress, Blogger...