என்னைப் பற்றி....

My photo
Salem, Tamil Nadu, India
சொல்கிறேன்..

12 August, 2011

சிரிக்க மட்டும் !

மனைவி : ஏங்க... நேத்து ராத்திரி நீங்க எனக்கு நகை, பட்டுபுடவை எல்லாம் வங்கித் தர்ர மாதிரி கனவு வந்தது...


கணவன்: அடே.. அப்படியா..? உனக்கு வந்த மாதிரி எனக்கும் ஒரு கனவு வந்தது... அதிலே உங்கப்பன் பில் தர்ர மாதிரி !

______________________________________________________________________________


சர்தார் : டாக்டர் ... இந்த பக்கெட்லே ஓட்டை இருக்கு.. கொஞ்சம் ரிப்பேர் பண்ணி தர்ர முடியுமா?

டாக்டர் : ஏப்பா... நான் என்ன தொழில் பண்றேன்னு தெரியுமா?

சர்தார் : தெரியும் டாக்டர்.. நீங்க ஒரு 'பிளாஸ்டிக் சர்ஜன்' தானே?

டாக்டர் : அடே தேவுடா !

_________________________________________________________________________

ஆசிரியர் : பதினோரு அறிவு உள்ள மிருகம் எது? நல்ல யோசிச்சு பதில் சொல்லுங்க பார்க்கலாம்..

மாணவன் : ????

ஆசிரியர் : தெரியலையா? மனித குரங்குதான் அந்த மிருகம். அதாவது மனிதனுக்கு ஆறு அறிவு. குரங்குக்கு ஐந்து அறிவு.. மொத்தம் பதினோரு அறிவு. சரிதானா?

மாணவன் : சார்.. கண்ணை கட்டி காட்டுலே விட்ட மாதிரி இருக்கு..  இருக்கிற கொஞ்ச நஞ்ச அறிவும் போய்டும்  போல  இருக்கே  .. !

ஆசிரியர் : எல்லாம் பழக பழக சரியாய் போய்டும் ...

____________________________________________________________________
ஒருவர் : கல்யாண வாழ்க்கை என்பது ரொம்ப எளிதானது..

மற்றொருவர் : எப்படி சொல்றீங்க?

ஒருவர் : கல்யாண வாழ்க்கை என்பது ஆரம்பத்தில் பார்க்கில் நடந்து போகிற மாதிரி ...

மற்றொருவர் : அடே.. அப்படியா?

ஒருவர் : ஆமா.. ஆனா, போகப்போகத்தான் அந்த பார்க் 'ஜுராசிக் பார்க்' என்பது தெரிய வரும்.

மற்றொருவர் : ?????

___________________________________________________________________________மனைவி : ஏங்க.. லாட்டரி சீட்டு வாங்கறவனுக்கும், பொண்டாட்டியோட ஆர்கியு  பண்றவனுக்கும் என்ன வித்தியாசம் சொல்ல முடியுமா?

கணவன்: ஓ.. தாராளமா... லாட்டரி சீட்டு வாங்கற ஆம்பிளை ஜெயிப்பதற்கு ஒரு வாய்ப்பு உள்ளது..

மனைவி : வெரி குட்...

_________________________________________________________________________


நேர்முகத் தேர்வாளர் : சார்.. நீங்க இப்போ எட்டாவது மாடியிலே இருக்கீங்க என்று கற்பனை செய்து கொள்ளுங்கள்..

பாண்டா  சிங்  : சரிங்க சார்..

நேர்முகத் தேர்வாளர் : அப்போ திடீர்ன்னு தீப்பிடிச்சிடுத்து .... நீங்க எப்படி தப்பிப்பீங்க?

பாண்டா சிங் : ரொம்ப சிம்பிள்.... நான் கற்பனை பண்றதை உடனடியா நிறுத்திடுவேன்..

________________________________________________________________________உணவு ஆய்வாளர் : இந்த கேள்வியை ரொம்ப நல்ல கவனிக்கணும்.. அதாவது.. எந்த சாப்பாடு, அதை சாப்பிட்ட பிறகு ரொம்ப வருசத்துக்கு தொந்தரவு கொடுக்கும்?

ஒரு முதியவர் : இந்த கேள்விக்கு எனக்கு சரியான விடை தெரியும்... ஏன்னா... நான் அனுபவப்பட்டவன்...

உணவு ஆய்வாளர் : அப்படியா? அப்போ பதில் சொல்லுங்க பார்க்கலாம் ?

ஒரு முதியவர் : கல்யாணம் முடிச்ச கையோட மாமியார் வீட்டுலே போடற விருந்து சாப்பாடுதான்...!

உணவு ஆய்வாளர் : சபாஷ் ! சரியான பதில்.

______________________________________________________________________


நீண்ட நாட்களுக்கு பிறகு இரண்டு நண்பர்கள்  சந்தித்துக் கொண்டனர்.. அப்போது...

ஒருவர் சொன்னார், "நான் என் மனைவியை டிவோர்ஸ் பண்ணிட்டேன்".
அதற்கு மற்றொருவர், "அடே.. என்னப்பா சொல்றே.. மெய்யாலுமா?" என்றார்.

"ஆமாப்பா"

"நாங்க ரெண்டு பேரும் ஒரு வக்கீலே வச்சு மியுச்சுவல் கன்சண்டில் டிவோர்ஸ் பண்ணிக்கிட்டோம்.."

"அது சரி... குழந்தைகளை யார் வச்சுகிறது என்று முடிவு பண்ணீங்க?"

"அவ நெறைய பணம் என்கிட்டே இருந்து வங்கிகிட்ட.. அதனால அவகிட்டேயே குழந்தைகளை  வளர்கிற பொறுப்பே விட்டுட்டேன்.."

"அப்போ... உன் மனைவி கிட்டே வளர்ற குழந்தைகளை நீ எப்பெப்போ போய் பாப்பே? அதான்பா "விசிடேசன் ரைட்ஸ்" ?

இது நல்ல கதையா இருக்கே ! என் குழந்தைகளை என் வக்கீல் அதான்பா அந்த லேடி லாயர்  இல்லே வளக்கிறங்க!      

_________________________________________________________________________

2 comments:

# கவிதை வீதி # சௌந்தர் said...

இது சிரிக்க மட்டும் அல்ல...

நினைத்து நினைத்து சிரிக்கவும்...
அத்தையையும் அற்ப்புதம்..

வாழ்த்துக்கள்..

Advocate P.R.Jayarajan said...

நன்றி திரு # கவிதை வீதி # சௌந்தர்
மேலும் எனது வலைப்பதிவை பின்பற்றுபவராக இணைந்ததற்கும் நன்றி...

Related Posts Plugin for WordPress, Blogger...