என்னைப் பற்றி....

My photo
Salem, Tamil Nadu, India
சொல்கிறேன்..

17 September, 2011

பேருந்து நடத்துனருக்கு இதெல்லாம் தேவையா?

அண்மையில் கோவை சென்றிருந்தேன். நான் எனது மகன், மற்றொரு நண்பர் என்று மூன்று பேர் சென்றோம். ஈரோடு, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்கு (கவுந்தபடி கிளை) சொந்தமான பேருந்தில் சேலத்திலிருந்து கோவை பயணம் செய்தோம். மூன்று பேருக்கு பயணக் கட்டணம் ரூ. 3x55 = ரூ. 165/- ஆகும். பயணச் சீட்டு எண். 52163 34:26:07 0=/17/00 (பயணச் சீட்டில் உள்ளபடி). நடத்துனர் பெயர் திரு. குப்புசாமி.

மூன்று பயணசீட்டுகள் வாங்க நான் 500 ரூபாய் தாளை எடுத்து கொடுத்தேன். நடத்துனரும் பணம் வாங்கிக் கொண்டு சீட்டை கொடுத்து விட்டு, பாக்கி பணம் ரூ. 335/-ஐ சில்லறை தாள் சேர்ந்தவுடன் தருவதாகக் கூறினார். காலையில் சீக்கிரம் எழுந்து கிளம்பியதால், பேருந்து கிளம்பிய சிறிது நேரத்தில் அயர்ந்து தூங்கி விட்டேன். முழித்துப் பார்த்த போது பேருந்து பெருந்துறையை தாண்டிவிட்டிருந்தது. அப்போது எங்கள் இருக்கை அருகே வந்த நடத்துனரிடம் பாக்கி பணத்தை கேட்டேன்.

இன்னும் சிறிது நேரத்தில் தருவதாக கூறினார். பேருந்து அவிநாசியை நெருங்கிக் கொண்டிருந்தது. நடத்துனர் வந்து ரூ. 330/- கொடுத்தார். பாக்கி ரூ. 5/- சில்லறையை பின் தருவதாக கூறினார். நானும் சரியென்று வாங்கிக் கொண்டேன். பேருந்து அவினாசிக்கு சற்று முன்பாக மெல்ல ஒதுங்கி நின்றது. "சார், வண்டி ஒரு பத்து நிமிஷம் நிக்கும். டீ, காபி சாப்பிடறவங்க சாப்பிடலாம்" என்று நடத்துனர் குரல் கொடுத்தார். நங்கள் மூன்று பேரும் இறங்கி, காபி குடித்தோம். நடத்துனரும், ஓட்டுனரும் பப்ஸ், பன் போன்ற கொரிப்பவைகள்,காபி ஆகியவற்றை முடித்துக் கொண்டனர். நடத்துனர் சூடாக ஒரு தம் போட்டார்.

வாயில் 'தம்'-முடன் இருந்த நடத்துனர், அப்படியே தனது பணப் பையில் இருந்த சில்லறை காசுகளை எண்ண ஆரம்பித்தார். சரியாக 50 ரூபாய்க்கு சில்லறையை எண்ணி அந்த கடை உரிமையாளரிடம் கொடுத்தார். அவரும் அதை வாங்கிக் கொண்டு ஒரு 50 ரூபாய் தாளை எடுத்துக் கொடுத்தார். சாப்பிட்டதற்கு பில் ஏதும் கொடுத்தமாதிரி தெரியவில்லை.

அச்சமயம் அருகில் நின்று டீ குடித்துக் கொண்டிருந்த நான், எனது பாக்கி ரூ. 5 /-ஐ கேட்டேன். அவர் அதை காதில் போட்டுக் கொண்ட மாதிரி தெரியவில்லை. ஆனால் ஓட்டுனர் நான் பாக்கி கேட்டதை கேட்டு விட்டார். உடனே அவர் "கண்டக்டர் கிட்டே கேளுங்க, கொடுத்து விடுவார்" என்று நடத்துனரை கண்களால் காண்பித்து சொன்னார். ஆனால் அதற்குள் அவர் எனக்கு முன்னதாக பேருந்தில் ஏறி "போலாம் ரைட்" என்று சொல்ல ஆரம்பித்தார். நாங்களும் விடுவிடுவென பேருந்தில் ஏறி அமர்ந்து கொண்டோம்.

"ரூ. 5/- தருகிறீர்களா?" என்று கண்களால் நடத்துனரிடம் ஜாடை காண்பித்தேன். அவர் அப்படி ஏதும் தரவேண்டியதில்லையே என்ற நினைப்பில் உள்ளவரை போல் பாவனை காட்டினர். "ஆங்.. அஞ்சு ரூவா எனக்கு... உனக்கு அசுக்கு புசுக்கு" என்று வேறு முகம் காட்டினர். நானும் இந்த 5 ரூபாய் பாக்கிக்காக இன்னும் என்ன செய்வது? ஒரு முக்கிய வேலைக்கு போகிறேன். இந்நேரத்தில் 'மூடை' கெடுத்துக் கொள்ள வேண்டாம். கொடுத்தால் கொடுக்கட்டும் என்று மேற்கொண்டு நானும் ஏதும் பேசவில்லை. பேருந்து கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தை அடைந்து விட்டது. இறங்கும் போது நடத்துனரை தேடினால், அவர் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் பேருந்து மெல்ல நுழையும் முன்பாகவே இறங்கி விட்டிருந்தார்.

இப்போது பிரச்சனை என்னவென்றால், இப்படி ஒரு நாளைக்கு அதுவும் ஒரு வழிக்கு ஒரு பயணியிடம் ரூ. 5/- பிடித்துக் கொண்டு அதை மறந்து போனவாறு பாவனை காட்டி நடத்துனர் தம்மிடமே இருத்திக் கொண்டால் குறைந்த பட்சம் ரூ. 50/- தேறும். ஒரு நாளைக்கு இரு வழிப் பயணம் என்றால் ரூ. 100/- கிடைக்கலாம். ஒரு மாதம், ஒரு ஆளின் சம்பளத் தொகை அளவிற்கு சேர்ந்து விடுகிறது. தினமும் வழியில் சாலையோர உணவகத்தில் ஓசி சாப்பாடு, சினகேஸ், சிகிரெட்... இப்படி. கையில் இருக்கும் சில்லறை காசுகளை கடையில் கொடுத்து அதை தாள் பணமாக்கிக் கொண்டு, பயணிகளுக்கு சில்லறை கொடுக்காமல் இருக்கலாமா?

நுகர்வோர் நீதிமன்றம் சென்றால், நடத்துனர் தேவையில்லாமல் அலைய நேரிடும். பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு நிச்சயம் தீர்வழி கிடைக்கும். மன உளைச்சல், வழக்கு செலவு தொகை என்று கண்டிப்பாக குறைந்தபட்சம் ரூ. 500/- விதிக்க வாய்ப்பு உள்ளது. நிர்வாக நடத்தை விதிகளின் கீழ் நடத்துனருக்கு 'மெமோ' கிடைக்கும். இதெல்லாம் நடத்துனருக்குத் தேவையா?

21 comments:

ரம்மி said...

இவர்களும் உழைக்கும் வர்க்கத்தின் அங்கத்தினர்கள்?
இன்று எதுவுமே தவறில்லை எனும் மனப் பான்மை வளர்ந்துவருகிறது! என்ன செய்ய?

sakthi said...

கேவலமான ஒரு செயல் .நாங்கள் பயப்படலாம் .உங்களை போன்ற ஒருவர் (வக்கீல் ) அவசியம் பாடம் புகட்ட வேண்டும் .அதை பார்த்து எல்லோரும் திருந்த வேண்டும் .நீங்கள் விட கூடாது .
நட்புடன் ,
கோவை சக்தி

Advocate P.R.Jayarajan said...

@Rammi
//இவர்களும் உழைக்கும் வர்க்கத்தின் அங்கத்தினர்கள்?
இன்று எதுவுமே தவறில்லை எனும் மனப் பான்மை வளர்ந்துவருகிறது! என்ன செய்ய?//

5 ரூபாய் விஷயம்தான் என்றாலும், அது நடத்துனருக்கும் எனக்கும் ஒன்றுதான் என்பது ஏன் நடத்துனருக்கு புரியவில்லை?

அவரைப் போல உழைப்பின் விளை பலன்தான் எனக்கும் ரூபாய் என்பதை அவர் நினைத்துப் பார்க்கவில்லை என்றால் ....
என்ன செய்ய?

Advocate P.R.Jayarajan said...

@கோவை சக்தி
கேவலமான ஒரு செயல் .நாங்கள் பயப்படலாம் .உங்களை போன்ற ஒருவர் (வக்கீல் ) அவசியம் பாடம் புகட்ட வேண்டும் .அதை பார்த்து எல்லோரும் திருந்த வேண்டும் .நீங்கள் விட கூடாது .

ஏற்கனவே இது போன்ற விசயங்களுக்காக நிறைய வழக்குகளை தொடர்ந்து வெற்றி கண்டுள்ளேன்.
குறிப்பாக,
(1) புஷ்பேக் இருக்கை வசதி கொண்ட பேருந்து என்று சொல்லி, மட்டமான இருக்கை கொண்ட பேருந்தில் ஏற்றி விட்டு, புஷ்பேக் இருக்கை வசதிக்கான கட்டணத்தை வசூலித்தல்.
(2) மீதி சில்லறை தருவதில்லை.
(3) பை-பாசியில் செல்லும், எங்கும் நிற்காது என்று சொல்லி விட்டு, பை-பாஸ் தவிர மற்ற எல்லா வழிகளிலும் எல்லா இடங்களிலும் நின்று செல்வது
(4) மழை பெய்தால் ஒழுகும் பேருந்து.
(5) அரை பயணச் சீட்டு வாங்கினாலும் முழு இருக்கை தர வேண்டும் என்பது சட்ட விதி. ஆனால் அதை பின்பற்றாமல் இருப்பது.
இப்படி எத்தனையோ காரணங்களுக்காக நுகர்வோர் குறை தீர் மன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளேன். வெற்றி கண்டுள்ளேன்.

ஆனால் என்ன செய்து என்ன செய்வது, திருந்த மாட்டேன் என்று அடம் பிடித்தால்.

கேரளாக்காரன்(ஆனாலும் அதிரி புதிரி தமிழன் ) said...

Worst than beggars

Anonymous said...

wiki leaks itku anuppiunkal
sillarai eduththu sellunakal iniyawathu

கிணற்றுத் தவளை said...

நமது நாட்டு சட்டங்கள் சாமானியனுக்காக இயற்றப் பட்டதல்ல.அதுவும் நுகர்வோர்க்கான சட்டங்கள் எளியவனும் சந்தித்து அலைச்சல் இல்லாது தீர்வு காணும் முறையில் இருந்தால்தான் இந்த சட்டங்களுக்கே மதிப்பு இருக்கும். அது வரையில் இவைகள் வெறும் படங்களை மாட்டும் சட்டங்கள்தான்.

# கவிதை வீதி # சௌந்தர் said...

இந்தப்பிரச்சனையை தினமும் பஸ் பயணம் செய்யும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கு உண்டு...

எவ்வளவு அறிவுரை வழக்குகள் போட்டாலும் இவர்கள் திருந்த மாட்டார்கள்...

வலிபோக்கன் said...

எனக்கும் இப்படி சில்லரை பிரச்சினை ஏற்பட்டது.நான் விடவில்லை போராட்டம் செய்து நடத்துனர் விட்டா போதும்ப்பா என்று கொடுத்துவிடுவார்கள்

mani said...

சார் அந்த நடத்துனர் போன்ற கௌரவ பிச்சை எடுக்கும் நிறைய பேர் உள்ளனர் . என்ன செய்வது நீங்கள் சொல்வது போல் நமது வேலை கெட்டுவிடும் என்று நாம் விடும் சில அற்ப விஷயங்கள் அவர்களை மிக்க தைரியம் உள்ளவர்களாக மாற்றி விடுகிறது. ஆனால் இறங்கும் போது நமது மனம் படும் பாடு இருக்கிறதே அதை சொல்லி மாளாது. ஒரு லட்சம் ரூபாயை நாமாக தொலைத்தால் கூட அதை நாம் ஏற்று கொள்ளலாம் ஆனால் இது போல் கொள்ளை அடிப்பதை ஏற்க முடியாது.

Advocate P.R.Jayarajan said...

@Mani

//கௌரவ பிச்சை//
மிகச் சரியான வரிகள்..

//இறங்கும் போது நமது மனம் படும் பாடு இருக்கிறதே அதை சொல்லி மாளாது.//
உள்ளபடியான உணர்வுகள் ...

Advocate P.R.Jayarajan said...

@வலிபோக்கன்

//எனக்கும் இப்படி சில்லரை பிரச்சினை ஏற்பட்டது.நான் விடவில்லை போராட்டம் செய்து நடத்துனர் விட்டா போதும்ப்பா என்று கொடுத்துவிடுவார்கள்//

SABASH..

Advocate P.R.Jayarajan said...

@#கவிதை வீதி#சௌந்தர்

//எவ்வளவு அறிவுரை வழக்குகள் போட்டாலும் இவர்கள் திருந்த மாட்டார்கள்...//

ஒருவேளை நாம் சில்லறை கம்மியாக கொடுத்து விட்டு பேருந்து இறங்கும் போது தருகிறேன் என்று சொன்னால்...?

Advocate P.R.Jayarajan said...

@கேரளாக்காரன்(ஆனாலும் அதிரி புதிரி தமிழன்)

//Worst than beggars//

If he begs so, the passengers
don't mind and give 5 rupees to him.

Advocate P.R.Jayarajan said...

Anonymous said...

//wiki leaks itku அனுப்பயுங்கள்
சில்லறை எடுத்து செல்லுனகல் இனியாவது//

எப்படி ஒரு ரூபாய் அல்லது இரண்டு ரூபாய் காசாக எடுத்துட்டு செல்லட்டுமா தலைவரே..

Advocate P.R.Jayarajan said...

@ கிணற்றுத் தவளை...
-----------------------
//நுகர்வோர்க்கான சட்டங்கள் எளியவனும் சந்தித்து அலைச்சல் இல்லாது தீர்வு காணும் முறையில் இருந்தால்தான் இந்த சட்டங்களுக்கே மதிப்பு இருக்கும். //

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் எளிமையான ஒன்றுதான். ஆனால் அதன் உயிரோட்டத்தை நுகர்வோர் குறைதீர் மன்றங்கள் மறந்து வருகின்றன. நுகர்வோர் நலன் மற்றும் பாதுகாப்புக்காக இயற்றப்பட்ட சட்டம் இது, அதை மனதில் கொண்டு வழக்குகளில் நுகர்வோருக்கு சாதகமாக பொருள் விளக்கம் கொள்ள வேண்டும் என்ற மனப்பான்மை குறைந்து வருகிறது. எப்படி ஒருவன் நுகர்வோர் ஆகா மாட்டன், எப்படி அவன் வழக்கு நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வராது.. அவனது வழக்கை 'வணிக நோக்கம்' கொண்டது அல்லது விரிவான விசாரணை தேவைப்படும் வழக்கு என்று கூறி எப்படி தள்ளி விடலாம் என்பதை தீவிரமாக பரிசீலிக்கின்றன.

♔ம.தி.சுதா♔ said...

அட இதுக்காகத் தான் கண்டக்டர் இறங்கிற நேரம் பொண்ணுங்களுக்கு நடவில பொய் நிக்கிறவரு..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
மங்காத்தாவை வெல்ல வைத்த விஜய் ரசிகர்கள்

middleclassmadhavi said...

முடிந்தால் http://blogintamil.blogspot.com/2011/09/blog-post_27.html பார்க்கவும்!

thalir said...

இந்த சில்லறை பசங்க திருந்தவே மாட்டானுங்க! என்னுடைய மனைவிக்கும் இதே போன்ற நிலை ஒரு சமயம் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து கழகம் அளிக்கும் தினப் படி போதவில்லை என்கின்றனர் சிலர்!

Advocate P.R.Jayarajan said...

//இந்த சில்லறை பசங்க திருந்தவே மாட்டானுங்க! //

சரியாய் சொன்னீங்க தளிர் சார்...

Advocate P.R.Jayarajan said...

//போக்குவரத்து கழகம் அளிக்கும் தினப் படி போதவில்லை என்கின்றனர் சிலர்!//

நம்மதான் இப்படி தினமும் படியளக்கிரோமே...!

Related Posts Plugin for WordPress, Blogger...