என்னைப் பற்றி....

My photo
Salem, Tamil Nadu, India
சொல்கிறேன்..

29 September, 2011

தகவல் அறியும் உரிமை சட்டப்படி கேட்ட தகவல் தரப்படவில்லையானால் நுகர்வோர் குறை தீர் மன்றத்தில் புகார் செய்யலாம் !தேசிய நுகர்வோர் குறைகள் தீர் ஆணையம் 
வழங்கிய அதிரடித் தீர்ப்பு !!

கவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்படும் தகவல், விண்ணப்ப தாரருக்கு தரப்படவில்லையானால் அவர் சம்பந்தப்பட்ட பொது அதிகார அமைப்புக்கு எதிராக நுகர்வோர் குறை தீர் மன்றத்தை அணுகலாம்; அதற்கு அவருக்கு  உரிமை உண்டு என்று ஒரு முன்னோடியான அதிரடியான தீர்ப்பு ஒன்றை சீராய்வு மனு ஒன்றில் தேசிய நுகர்வோர் குறைகள் தீர் ஆணையம் வழங்கியுள்ளது. இத்தீர்ப்பின்படி, கேட்ட தகவல் விண்ணப்பதாரருக்கு வழங்கப் படவில்லையானால், அது நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின்படி ஓர் 'சேவைக் குறைபாடாகும்'.

தகவல் தருவது ஒரு சேவை !
தராமல் இருந்தால் அது சேவைக் குறைபாடு !! 

து சம்பந்தமாக மைசூர் மாவட்ட நுகர்வோர் மன்றம் வழங்கிய ஆணையை தேசிய ஆணையம் உறுதி செய்து தீர்ப்புரைக்கையில், "தகவல் சட்டப்படி கேட்ட தகவல் தரப்படவில்லை என்ற பிரச்சனை நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் பிரிவு 2(1)(ஓ)-இன் வரம்பு மற்றும் பரவெல்லையில் வருகிறது. இப்பிரிவின்படி சேவை என்பது பயன்படுத்த வாய்ப்பு உடையவர்களுக்கு கிடைக்கச் செய்யப் பெறும் எந்த வகையான சேவையும் என்று பொருள்படும். இதில் செய்திகள் அல்லது பிற தகவல்கள் தொடர்பான வசதிகளுக்கு வகை செய்வதும் அடங்கும். (The case would fall within the scope and ambit of Section 2 of CP Act, which provides that service means service of any description which is made available to potential users, which include purveying of news or supplying of other information)," என்று கூறியது.

முக்கியத் தீர்ப்பை முனைந்து பெற்றுத் தந்த 
மருத்துவர் எஸ்.பி.திருமலா ராவ் 

மைசூரை சேர்ந்த எஸ்.பி.திருமலா ராவ் ஒரு மருத்துவர். இவரது மருத்துவ மனைக்கு முன் உள்ள நடைபாதையில் தொலைபேசி கம்பிவடங்களை பதிப்பதற்காக ஒரு தனியார் தொலைபேசி நிறுவனம் குழி ஒன்றை பறித்திருந்தது. பணி முடிந்த பின் அதை மூடி முன்பிருந்ததை போல் செய்யாமல் விட்டுவிட்டது. பல நாட்கள் இப்படியே சரி செய்யப்படாமல் இருப்பதை கண்ட திருமலா ராவ், இதற்கு காரணமான அத்தொலைபேசி நிறுவனத்தின் விவரங்களை கோரி மைசூர் மாநகராட்சியின் பொது தகவல் அலுவலருக்கு தகவல் அறியும் உரிமை சட்டப்படி ரூ.10/- கட்டணம் செலுத்தி விண்ணப்பம் செய்தார். ஆனால் அவருக்கு யாதொரு தகவலும் வழங்கப்படவில்லை. தகவல் கொடுப்பதற்கென தகவல் சட்டம் நிருணயம் செய்துள்ள காலமும் கடந்து விட்டது. 

மைசூர் மாவட்ட மன்றத்தின் முத்தான தீர்ப்பு 

வ்வாறு தகவல் தராமல் இருப்பது ஒரு சேவைக் குறைபாடாகும் என்றும், எனவே தனக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும் கோரி, திருமலா ராவ் மைசூர் மாநகராட்சி ஆணையருக்கு எதிராக மாவட்ட நுர்கர்வோர் மன்றத்தில் புகார் செய்தார். அதில் தோன்றிய மாநகராட்சி நிருவாகம், "தங்களுக்கு இருந்த அதிகப்படியான பணிப்பளுவின் காரணமாக தகவல் வழங்க முடியவில்லை" என்று சமாதானம் சொன்னது. ஆனால் இதை மைசூர் மாவட்ட மன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை. அது தனது ஆணையில், "இப்பிரச்சனையில் புகார்தாரர் ஒரு 'நுகர்வோராக' நுகர்வோர் மன்றத்தை அணுக உரிமை உண்டு. எனவே தகவல் அறிதல் என்ற மதிப்பு மிக்க உரிமையை அங்கீகரிக்கும் வண்ணம் புகார்தாரர் திருமலா ராவுக்கு மைசூர் மாநகராட்சி பெயரளவு இழப்பீடாக ரூ. 500/- அளிக்க வேண்டும்" என்று தீர்ப்புரைத்தது. 

மாவட்ட மன்றத்தின் தீர்ப்பை 
கர்நாடக மாநில நுகர்வோர் ஆணையம் இரத்து செய்தது

னால் மைசூர் மாநகராட்சி, இத்தீர்ப்பை எதிர்த்து கர்நாடக மாநில நுர்கர்வோர் குறைகள் தீர் ஆணையத்தில் மேல்முறையீடு செய்தது. அங்கு மாவட்ட மன்றத்தின் தீர்ப்பை கர்நாடக ஆணையம் ஏற்றுக் கொள்ளவில்லை. அது தனது ஆணையில், "தகவல் அறியும் சட்டப்படி கேட்ட தகவல் அதற்குரிய கால வரம்பிற்குள் தரப்படவில்லையானால், அதற்கான விண்ணப்பம் நிராகரிக் கப்பட்டதாக கருதப்பட வேண்டும். இதை எதிர்த்து அடுத்துள்ள மேல் நிலை அதிகார அமைப்பிடம் மேல்முறையீடு செய்வதே இதற்கான தீர்வழியாகும். அப்படியிருக்க இதற்காக நுகர்வோர் மன்றத்தை நாடுதல் ஆகாது" என்று கூறி மாவட்ட மன்றத்தின் ஆணையை இரத்து செய்து, திருமலா ராவின் புகரை தள்ளுபடி செய்து தீர்ப்புரைத்தது. 

ஆனால் உரிமையை உறுதி செய்த தேசிய ஆணையம்

ர்நாடக ஆணையத்தின் தீர்ப்பை ராவ் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் தேசிய ஆணையத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தார். அங்கு ராவின் பக்கமே மீண்டும் தீர்ப்பானது. கர்நாடக ஆணையத்தின் தீர்ப்பு இரத்து செய்யப்பட்டு மைசூர் மாவட்ட மன்றத்தின் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது. 

"தகவல் சட்டப்படி தகவல் கோரும் ஒருவர் அதற்கான கட்டணமாக ரூ. 10/- செலுத்துகிறார். எனவே அவர் நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி ஒரு நுகர்வோர் ஆகிறார். இங்கு புகார்தாரரும் இவ்வாறு கட்டணம் செலுத்தி தகவல் கேட்டுள்ளார். ஆனால் அது அவருக்கு வழங்கப்படவில்லை. மறுபயனுக்காக நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின்படி சேவைகளை பெறும் ஒருவருக்கு அச்சேவை வழங்கப்படவில்லையானால் அது சேவைக் குறைபாடாகும் (The Complainant had availed of the services under the said Act for consideration by paying fee and had sought information, which was not supplied to him, which amounts to deficiency of service)," என்று கூறி தேசிய ஆணையம் ராவின் மேல்முறையீட்டை அனுமதித்தது. 

தகவல் தராத அலுவலர்களுக்கு அபராதம் விதிக்க தகவல் சட்டத்தில் வழியுண்டு; ஆனால் தகவல் கிடைக்கப் பெறாத நுகர்வோர்களுக்கு என்ன தீர்வழி?

த்தீர்ப்பில், "தகவல் தராத அலுவலர்களுக்கு, அபராதம் விதிக்க தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 20-இல் வகை செய்யப்பட்டிருந்தாலும், தகவல் கோரி அது வழங்கப்படாத நுகர்வோர்களுக்கு சேவைக்குறைபாட்டிற்காக இழப்பீட்டின் வடிவில் எந்தப் தீர்வழியும்  வழங்க அதில் வகை செய்யப்பட வில்லை (Though the RI Act  provided for penalties under Section 20 of the Act, yet it did not provide for any remedy to the consumers who have sought information for deficiency of service in the nature of compensation or damages for not furnishing the information)," என்று தேசிய ஆணையம் கூறியது. 

இது தகவல் உரிமை ஆர்வலர்களுக்கு 
கிடைத்துள்ள மற்றொரு சட்டத் தீர்வழி

கவல் வழங்கப்படாத விண்ணப்பதாரர்களுக்கு தேசிய ஆணையத்தின் இத்தீர்ப்பு மற்றொரு பெரும் கூடுதல் தீர்வழியை கொடுத்துள்ளது. இது நாடு முழுவதும் உள்ள தகவல் உரிமை ஆர்வலர்களால் வரவேற்கப்படவேண்டிய ஒன்று. 

முழு நீளத் தீர்ப்பு இதோ....

NATIONAL CONSUMER DISPUTES REDRESSAL COMMISSION, NEW DELHI

REVISION PETITION NO.  1975 OF 2005
 (Against the order dated 1.10.05 in Appeal No.244/04
    of the State Commission, Karnataka)

 Dr. S.P. Thirumala Rao
Consultant Physician
No.1138/3, Narayanasastry Road
Devaraja Mohalla
Mysore – 570 001                                                                        ........ Petitioner
Vs.
Municipal Commissioner
Mysore City Municipal Corporation
Sayyaji Rao Road.
Mysore – 570 024                                                                        …….Respondent

BEFORE: 

      HON'BLE MR. JUSTICE R.K. BATTA,
PRESIDING MEMBER
       HON’BLE MR. S.K. NAIK, MEMBER

For the Petitioner               :  Mr. Aditya Narain, Advocate, Ms. Astha Tyagi, Advocate
For the Respondent          :  NEMO

 Pronounced on : 28th  May, 2009

ORDER
                  
PER JUSTICE R.K. BATTA, PRESIDING MEMBER

The grievance of the complainant who is Consultant Physician is that some private telephone provider had dug up the footpath in front of his clinic, for laying telephone cables and after laying the PVC pipes, failed to restore the footpath in original condition.  The damaged footpath and projected PVC pipe was causing obstruction to his patient and pedestrians.  He, therefore, filed two applications before the opposite party on 10.2.2003, under Rule 4(1) of the Karnataka Right to Information Act, 2002 (hereinafter referred as the said Act) seeking information about the said private telephone provider.  The OP was required to furnish information within 15 days under the Act, but the said information was not furnished which according to the complainant amounts to deficiency of service. The complainant, therefore, filed a complaint before the District Forum claiming damages/compensation of Rs.30,000/- and cost of Rs.1,000/-.

The opposite party in affidavit dated 26.8.2003 submitted that the information could not be given within the time prescribed due to heavy work in the office.  In the affidavit it was stated that the private telephone provider, namely; Reliance Company and the Government of India through the Department of Telecommunication had laid down the cables and the Corporation had nothing to do with the said act of the Reliance Company.

The District Forum had framed 4 points for consideration, which are as under:

1. Whether Section 11 of the K.R.I. Act, 2002 has got overriding effect on the provision of the Consumer Protection Act, 1986?

2.  Whether Section 10 of the K.R.I. Act, 20002 bars the jurisdiction of the Consumer Forum?

3.  Whether this forum has no jurisdiction as an appeal is provided under Section 7 of the K.R.I. Act, 2002 for not furnishing the information;

4.  Whether the complainant has proved deficiency in service, if so, to what relief he is entitled?

On the first point, it was held that Section 11 of the Karnataka Right to Information Act does not have any overriding effect on the Consumer Protection Act, 1986.  On the question of bar of jurisdiction of Courts under Section 10 of the Karnataka Right to Information Act, it was held that Section 3 of the Consumer Protection Act, 1986 provides an additional remedy; that the bar of jurisdiction under Section 10 of the Act is only against the Courts as also in respect of the order made under the Act but in this case the OP had not passed any order on account of which, the question of bar of jurisdiction does not arise and it is a case of deficiency of service.  On the third point, the District forum held that since the OP did not furnish information in time, the complainant could not approach proper authority for redressal of his grievance on account of deficiency of service, a such he was entitled to invoke the jurisdiction of District Forum.  On quantum of damages, it was stated that nominal damages would be sufficient as a token of recognition of valuable Right to Information.  Accordingly, District forum directed OP to pay damages of Rs.500/- and cost of Rs.100/-. This order was challenged by the OP before the State Commission.

The State Commission referred to Section 7 of the Karnataka Right to Information Act, 2002 and held that since no communication was sent to the complainant within 15 working days of filing the applications in terms of Section 5 of the Act, it is a case of deemed rejection against which, an appeal is provided under Clause II of Section 7 of the said Act.  The State Commission also took into account that though the remedy under Section 3 of the CP Act is in addition to remedy provided under other Acts and not in derogation of the provisions of any other law, yet, once the complainant has availed the remedy against which appeal is provided, he cannot maintain a complaint under the CP Act. Accordingly, the appeal was allowed and the order of the District Forum was set aside.  This order is subject matter of challenge before us.

Ld. Counsel for the petitioner was heard. 

The Respondent was duly served for 23.2.2009 when the matter was fixed for final hearing but the respondent did not appear.  The acknowledgement card of service of Respondent is kept in Part II file.  No one appeared for the respondent.

Ld. Amicus Curiae appearing on behalf of the petitioner took us through the various provisions of Karnataka Right to Information Act, 2002 and submitted before us that the complainant had sought information under the said Act and as per Section 5(2), the information is to be supplied within 15 working days from the date of receipt of the application.  Since the said information has not been furnished, there is deficiency of service on account of which, the complainant is entitled to approach the District Forum in view of Section 3 of the CP Act, even though, the complainant has not filed any appeal as provided under Section 7 of the said Act.  According to Ld. Counsel for the petitioner, on account  of deficiency in service in not providing information to which the petitioner was entitled under the said Act, the petitioner is a  consumer who has availed the services of opposite party on payment of application fee for the said purpose. After placing reliance on the judgement of this Commission in Smt. Kalawati & Ors. Vs. United Vaish Co-operative Thrift & Credit Society Ltd. – I (2002) CPJ 71 (NC) and judgement of this Commission in Smt. Ushal Rani Aggarwal Vs. Nagar Palika Parishad (R.P. No. 2774 of 2004) decided on 6.9.2006, it was urged that Section 10 of the said Act does not bar the jurisdiction of the District Forum since only the jurisdiction of Court has been barred and in view of Section 3 of the CP Act, 1986, the matters pertaining to deficiency of service under the Karnataka Right to Information Act can be entertained by the Consumer Fora.  On the question of additional remedy, reliance was placed on Fair Air Engineers Pvt. Ltd. & Anr. Vs. N.K. Modi – III (1996) CPJ 1 (SC)  and Skypak Couriers Ltd. Vs. Tata Chemicals Ltd. – AIR 2000 SC 2008 in which it was held that despite the existence of an arbitration clause, the complaint by a consumer under CP Act, 1986 was tenable since the remedy provided under the CP Act is in addition to the provisions of law for the time being in force.  Reliance was also placed on the judgement of Lucknow Development Authority Vs. M.K. Gupta – (1994) 1 SCC 243 and it was urged that revision be allowed and compensation ordered by the District Forum be maintained.

The District Forum had dealt with the objections raised by the opposite party regarding bar of jurisdiction of Courts under Section 10 of the Act as also the overriding affect of the Act.  The State Commission in the impugned order did not at all refer to the findings of the District Forum on the said issues but allowed the appeal only on the ground that once the complainant had already availed remedy under the said Act and appeal is provided therein, the complainant cannot maintain a complaint under the CP Act. We may at this stage point out that the findings of the District Forum with reference to Section 10 & 11 are supported by reasons which do not call for any interference. In fact, the view taken by the District Forum is in consonance with the rulings of this Commission in the case of Smt. Kalawati (Supra) and Smt. Ushal Rani Aggarwal (Supra). We entirely agree with the reasoning of District Forum on this aspect.  Though, the said Act provides for penalties under Section 9 of the said Act on the competent authority, yet, the Act does not provide for any remedy to the consumers who have sought information under the said Act for deficiency of service in the nature of compensation or damages for not furnishing the informations ought to which they are entitled to get under the said Act.  Section 3 of the CPA provides additional remedy in addition to the remedies provided under other Acts and it is not in derogation of any provisions of any law.  The Consumer Fora has, therefore, jurisdiction to entertain the complaint in respect of deficiency of service in the given facts especially when information sought was not furnished.  The competent authority was required to give information within 15 days of the application in terms of Section 5 of the said Act.  However, the said information was not furnished. The complainant had approached the District Forum claiming compensation/ damages for deficiency of service.  Even though, further remedy may be available to the applicant in case information is not supplied in terms of Section 5 of the Act within 15 days, yet, there is no bar to approach the District Forum for deficiency of service.  The remedy under the said Act would take care of disciplinary action and penalty against the competent authority in not furnishing the information but no remedy is provided under the said Act to the applicant seeking information therein if information sought is not provided resulting in deficiency of service on that count.  The applicant had paid a fee of Rs.10/- for seeking the said information.  The case of the applicant would fall within the scope and ambit of Section 2(i)(o) of CP Act, which provides that service means service of any description which is made available to potential users, which include purveying of news or supplying of other information. The complainant had availed of the services under the said Act for consideration by paying fee and had sought information under the said Act, which was not supplied to him, which amounts to deficiency of service.  The complainant is, thus, a consumer vis-à-vis information sought on payment under the said Act.   In our view, therefore, the State Commission was wrong while holding that once the complainant had availed the remedy against which appeal was provided, he could not maintain a complaint under the CP Act.

For the aforesaid reasons, the impugned order of the State Commission is liable to be set aside and the order of the District Forum is restored. In the facts and circumstances, we shall leave the parties to bear their own cost.
                                                       …………………..………J
     (R.K. BATTA)
      ( PRESIDING MEMBER)

                                                                   ……………….……………
                                                        (S.K. NAIK)
                                                                            MEMBER

______________________________________________________________________________

மேலும் சில குறிப்புகள் ...  

Re: Consumer Forum may accept complaint if only Info not supplied ? or also for Defective Info supplied ?
http://164.100.72.12/ncdrcrep/judgement/00RP197505.html

If no reply is received under RTI Act or reply is defective you can move Consumer Forum for deficiency in service. You can claim compensation and ultimately it will be recovered from erring officers. Territorial jurisdiction will be the district in which RTI application was filed. Consumer Complaint has to be filed against head of the office of public authority to whom RTI was addressed and PIO can be made co-defendant [opposite party]. Please refer:


NCDRC decision: 
http://164.100.72.12/ncdrcrep/judgement/00RP197505.html 

Additional Remedy
http://www.rtiindia.org/forum/blogs/...n-seekers.html

Consumer Notice
http://www.rtiindia.org/forum/blogs/...ation-act.html

PIO cannot refuse information just because any police or court case is pending. Please peruse:

Sec 8:
http://www.rtiindia.org/forum/blogs/...decisions.html
10 comments:

வலிபோக்கன் said...

தகவலுக்கு நன்றி! அய்யா

அம்பலத்தார் said...

சட்டம், தனிமனித உரிமை போன்றவிடயங்களில் நம்மவர்மத்தியில் விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது

sakthi said...

முத்தான தீர்ப்பு ,முத்தான தகவல் ஐயா ,
நான் சென்னை பல்கலை கழகத்திற்கு வாழ்வுரிமை தகவல் சட்டத்தில் 48 மணி நேரத்திற்குள் தகவல் கேட்டிருந்தேன் .ஆனால் நான் தபால் அனுப்பி 3 வாரங்கள் ஆகியும் பதில் வரவில்லை .நான் கோவை நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகலாமா?.
நட்புடன் ,
கோவை சக்தி

Advocate P.R.Jayarajan said...

@ வலிபோக்கன்

//தகவலுக்கு நன்றி!//

பார்வையிட்டு, புரிந்து, பின்னூட்டமிட்ட உங்களுக்கு நான்தான் நன்றி சொல்ல வேண்டும்..

இச்செய்தியை முடிந்தால் மற்றவர்களுக்கும் எடுத்துச் செல்லவும்..

Advocate P.R.Jayarajan said...

@ அம்பலத்தார்

சட்டம், தனிமனித
//சட்டம், தனிமனித உரிமை போன்றவிடயங்களில் நம்மவர்மத்தியில் விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது//

சட்ட அறியாமையை சட்டம் மன்னிப்பதில்லை...

Advocate P.R.Jayarajan said...

@ கோவை சக்தி

//நான் சென்னை பல்கலை கழகத்திற்கு வாழ்வுரிமை தகவல் சட்டத்தில் 48 மணி நேரத்திற்குள் தகவல் கேட்டிருந்தேன் .ஆனால் நான் தபால் அனுப்பி 3 வாரங்கள் ஆகியும் பதில் வரவில்லை .நான் கோவை நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகலாமா?.//

முதலில் முதல் மேல்முறையீட்டு அதிகார அமைப்பிடம் மேல்முறையீடு செய்யவும்.. அதற்கு பிறகும் தகவல் கிடைக்கப் பெறவில்லையானால் தாரளமாக நுகர்வோர் மன்றத்தை அணுகவும்... அதுதான் தீர்ப்பு நம் கையிலே இருக்கிறதே..!

ரம்மி said...

அருமை! இனிதே தொடரட்டும் உமது அறிவுப் பணி!

Advocate P.R.Jayarajan said...

//அருமை! இனிதே தொடரட்டும் உமது அறிவுப் பணி//

Thanks Rammi

Bala subramanian said...

தகவல் பெரும் உரிமை சட்டம் வாரமாக

Bala subramanian said...

பத்திரிகை தொலைக்காட்சி மற்றும் வானொலி நிறுவனங்களின் செய்தி ஆசிரியர்களே! நிருபர்களே! நிகழ்ச்சி தயாரிப்பாளர்களே! நிகச்சி ஒருங்கிணைப்பாளர்களே! நிகழ்ச்சி இயக்குனர்களே!

அனைத்து அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் இயக்குனர்களே! மாவட்ட ஆட்சியர்களே! அரசுத் துறை செயலாளர்களே!

சமூக ஆர்வலர்களே! தகவல் உரிமை சட்ட உபயோகிப்பாளர்களே! தொண்டு நிறுவனங்களே!
வணக்கம்

தகவல் உரிமை சட்டத்தின் பத்தாவது பிறந்தநாள் விழா
இன்று 5-10-14 ஆம் தேதி முதல் 12-10 -14 ஆம் தேதிவரை தகவல் பெரும் உரிமை சட்டம் வாரமாக இந்தியா முழுமையும் கொண்டாட மத்திய அரசு உத்தரவிட்டு அதற்கான நிதியையும் மாநில அரசுகளுக்கு வழங்கி உள்ளது

இந்தியன் குரல் அமைப்பும் இந்த பொண்ணான உண்மையான சுதந்திரமாம் தகவல் உரிமை சட்டம் பிறந்த நாளை தமிழகம் முழுதும் கொண்டாடி மக்களுக்கு விழிப்புணர்வுப் பணியினை தோழமை அமைப்புகளுடனும் சமூக ஆர்வலர்களுடனும் தகவல் உரிமை சட்ட ஆர்வலர்களுடனும் இணைந்து கிராமம் தோறும் துண்டுபிரசுரங்கள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரக் கொண்டாட்டம் நடைபெற ஏற்பாடு செய்துள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவிக்கின்றோம்

அது சமயம் தாங்களும் தாங்கள் சார்ந்த ஊடகத்தின் வாயிலாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி கொண்டாடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்

Related Posts Plugin for WordPress, Blogger...