என்னைப் பற்றி....

My photo
Salem, Tamil Nadu, India
சொல்கிறேன்..

24 October, 2011

உங்கள் மண வாழ்க்கை உறுதியானதா ? ஒரு சிறு சோதனை !

பொதுவாக நாம் மோதிரத்தை நமது கையின் நான்காவது விரலில் அதாவது மோதிர விரலில் போட்டுக் கொள்கிறோம். திருமண நிச்சயதார்த்தம் அல்லது திருமணத்தின் போது மணமகளின் மோதிர விரலில்தான் மணமகன் மோதிரம் அணிவிக்கிறார்.

இவ்வாறு குறிப்பாக திருமண சடங்குகளின் போது நான்காவது விரலில் மோதிரம் அணிவிப்பதற்கு பின்னணியில் சுவாரஸ்யமான அதே நேரத்தில் ஏற்றுக் கொள்ளக் கூடிய கதை ஒன்று உண்டு.

இப்போது நமது கை விரல்களை எடுத்துக் கொள்வோம். முதல் விரலான கட்டை விரல் உங்கள் பெற்றோர்களை குறிக்கிறது. இரண்டாம் விரலான ஆட்காட்டி விரல் உங்களுடன் பிறந்த சகோதர, சகோதரிகளை குறிக்கிறது. மூன்றாம் விரலான நடு விரல் உங்களை  குறிக்கிறது. நான்காம் விரலான மோதிர விரல் உங்கள் இல்வாழ்க்கை துணையை குறிக்கிறது. ஐந்தாம் விரலான சுண்டு விரல் உங்கள் குழந்தைகளை குறிக்கிறது.


இப்போது உங்கள் இரண்டு கைகளையும் எடுத்து கீழ்வரும் படத்தில் உள்ளவாறு வைத்துக் கொள்ளுங்கள்.
 
 
அதாவது ஒரு கையில் உள்ள நடு விரல் தவிர மற்ற எல்லா விரல்களையும் நீட்டி வைத்து அவ்வாறே மற்றொரு கையிலும் செய்து கொண்டு இப்போது இரண்டையும் ஒன்றுடன் ஒன்று ஒட்டி இருக்குமாறு வைத்துக் கொள்ளவும். நடு விரல் நீங்கள் என்பதால் அது இந்த விளையாட்டிற்கு ஒரு ஒப்புக்கு சப்பா. எனவே அந்த விரலை மடக்கி ஒட்டி வைத்துக் கொள்ளவும்.

அடுத்து ஒன்றுடன் ஒன்றாக ஒட்டி இருக்கும் உங்கள் கட்டை விரல்களை மட்டும் மெல்ல விலக்கவும். (கவனிக்க : இவ்வாறு செய்யும் போது ஒட்டி இருக்கும் மற்ற விரல்களை பிரித்து விடக்கூடாது.) அவற்றை உங்களால் விலக்க அதாவது பிரிக்க முடியும். கட்டை விரல் என்பது உங்கள் பெற்றோர்கள். அவர்கள் உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலம் வரைதான் அரவணைப்பாக இருப்பார்கள்.

அடுத்து ஆட்காட்டி விரல்கள் . இவற்றையும் அவ்வாறே விலக்க முடியும். ஏற்கனவே சொன்னவாறு ஆட்காட்டி விரல் என்பது உங்களுடன் பிறந்தவர்கள். இவர்கள் நாளாவட்டத்தில் தங்களுக்கென ஒரு குடும்பம் அமைத்துக் கொண்டு பிரிந்து விடுவார்கள்.

தொடர்ந்து வருவது நடு விரல்கள் . இவற்றை நீங்கள் ஒன்றும் செய்ய வேண்டியதில்லை. ஏனெனில் இவை நீங்கள்.

இதை அடுத்து மோதிர விரல்கள் . இவற்றை பிரிப்பதற்கு முன் இதற்கு பிறகு வரும் சுண்டு விரல்களை பிரிக்க முடிகிறதா என்று பாருங்கள். இதையும் பிரிக்கலாம். அதாவது சுண்டு விரல் என்பது உங்கள் குழந்தைகள். இவர்கள் வளர்ந்து தங்களுக்கென கணவன்/மனைவி என்று அமைத்துக் கொண்டு சென்று விடுவார்கள்.

இப்போது மோதிர விரல்களுக்கு வருவோம். ஒன்றுடன் ஒன்று ஒட்டி இருக்கும் மோதிர விரல்களை பிரிக்க முடியுமா? நிச்சயமாக முடியாது. ஏனெறால் மோதிர விரல்கள் உங்கள் இல்வாழ்க்கை துணைவி/ துணைவரை குறிக்கின்றது.

இல்வாழ்கை பந்தம் பிரிந்து விடக் கூடாது, உறுதியானதாக இருக்க வேண்டும் என்பதற்காகவே திருமணத்தின் போது மோதிர விரலில் மோதிரம் அணிவிக்கப்படுகின்றது ! _____________________________________________________________________

("மோதிரம் போட்டு என்ன பண்றதுங்க? கட்டிக்கிட்டதிலிருந்து தரித்திரம் பிடிச்ச மாதிரி இருக்கு.." என்று சொல்பவர்களுக்கோ, "எப்படி இவரை திட்டம் போட்டு கவுத்து மெய்ன்டனன்ஸ் கேட்கலாம்" என்று கணவன் கூடவே இருந்து குழி பறிக்க நினைப்பவர்களுக்கோ இக்கதை ஒரு விதிவிலக்கு !)

5 comments:

sakthi said...

இண்டரஸ்டிங் நல்ல கருத்து.நானும் செய்து பார்த்தேன்
அன்புடன் ,
கோவை சக்தி

Advocate P.R.Jayarajan said...

Thanks Mr. Kovai Sakthi..

selvarasu said...

very interesting thanks sir

selvarasu said...

very interesting thanks sir

Advocate P.R.Jayarajan said...

Thanks for comments Mr. Selvarasu Sir..

Related Posts Plugin for WordPress, Blogger...