என்னைப் பற்றி....

My photo
Salem, Tamil Nadu, India
சொல்கிறேன்..

21 November, 2011

இது என் 100-வது பதிவு ! வாழ்த்துகளை வேண்டுகிறேன் !!

இது என் 100-வது பதிவு.

வாழ்த்துகளை வேண்டுகிறேன் !

முதலில் எனது வலைப்பதிவை தொடர்ந்து வாசித்து வரும் உங்கள் அனைவரிடமும் வாழ்த்துகளை பெற விளைகின்றேன். உங்கள் வாழ்த்துகளை இந்தப் பதிவுக்கு நீங்கள் அளிக்கும் ஓட்டுகள் மூலம் சுட்டிக் காட்டினால், அதுவே கூட போதுமானது. என் மனம் நன்றியுடன் என்றும் நினைக்கும்.

நன்றி தெரிவிக்கின்றேன் !

எனது இந்த வலைப்பதிவிற்கு உறுப்பினர்களாக இதுகாறும் எழுபத்து ஏழு பேர் சேர்ந்திருக்கின்றனர். அவர்களில் பலர் மிகப் பெரும் வலைப்பதிவர்கள். கிட்டத்தட்ட ஜாம்பவான்கள் அல்லது முன்னோடிகள் என்று கூறலாம். அவர்கள் எல்லோருக்கும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி நன்றி தெரிவிக்க விளைகின்றேன்.  குறிப்பாக திருவாளர்கள்  ராஜராஜேஸ்வரி ஜெகமணி, கவிதை வீதி சௌந்தர்,ரமேஷ் வெங்கடபதி, வேடந்தாங்கல் கருன், நெற்குப்பை தும்பி,  ரத்தினவேல் நடராஜன், மக்சிமம் இந்தியா ஆகியோரைச் சொல்லலாம். இவர்கள் அடிக்கடி பின்னூட்டம் இட்டவர்கள் என்ற வகையில் என் நினைவில் நிற்கிறார்கள்.


அடுத்து அந்த உறுப்பினர்களில் பலர் இந்த வலைப்பதிவை தொடர்ந்து வாசித்து, அவ்வப்போது ஓட்டும், மறுமொழியும் இட்டு வருகிறார்கள். அவர்களில், வலைப்பதிவர்கள் அல்லாத பல வாசகர்கள் அடங்குவர். குறிப்பாக சொல்வதென்றால் அமைதி அப்பா, கோவை சக்தி, செல்வராசு (அன்னை மோட்டோர்ஸ்), வக்கீல் ராஜா, அண்மையில் 'ஆளுங்க' - இவ்வாறு சிலர். இவர்களுக்கும் நன்றி சொல்கின்றேன்.


உறுப்பினர்களாக சேர்ந்த வேறு சிலருடன் எனக்கு பெரிய பரிச்சயம் ஏதும் ஏற்படவில்லை. காரணம் அவர்கள் உறுப்பினர்களாக சேர்ந்த போது, அவ்வாறு சேர்ந்துள்ள விவரத்தை என்னால் தெரிந்து கொள்ள முடிந்ததே தவிர, வேறு வகையில் விவரங்களை அறிய முடியவில்லை.

மற்றபடி இந்த வலைப்பதிவை உலகெங்கிலும் உள்ள, தமிழறிந்த மக்கள் அவ்வப்போது வாசித்துக் கொண்டிருக்கினறனர் என்பதை அறிய முடிகிறது. அவர்கள் யாவருக்கும் நீங்கா நன்றிகள்.

சில வேடிக்கை அனுபவங்கள் :

நான் சில மாதங்களுக்கு முன் '' 'Disc Bulge' வலிக்கு ஒரு நிமிடத்தில் தீர்வு'' என்ற தலைப்பில் அனுபவக் கட்டுரை ஒன்றை எழுதி இருந்தேன்.அது மட்டும் இன்றளவும் தினமும் குவைத் தேசத்திலிருந்து பார்வை இடப்படுகிறது. யாரோ ஒருவர் இப்படி தினமும் வாசிக்கின்றார் என்பதை என்னுடைய அனுமானத்தில் அறிய முடிகிறது. நீங்கள் தொடர்ந்து இந்த வலைப்பதிவின் ஓரத்தில் உள்ள 'Live Traffic Feed'பெட்டியை கவனித்தால் புரியும். ஆனால் அவர் ஏன் அப்படி தொடர்ந்து பார்க்கின்றார் அல்லது வாசிக்கின்றார், யார் அவர் என்று எனக்குத் தெரியவில்லை. அவருக்கு என்ன தெரிய வேண்டும் என்பதும் புரியாத மர்மமாக உள்ளது. அல்லது 'அந்தக் கட்டுரையை அவர் தொடர்ந்து பார்க்கிறார் என்பதை நான் அறிந்து கொள்ள வேண்டும் என்று அவர் நினைக்கிறாரா ?" - அதுவும் புரியவில்லை. 

அந்த டிஸ்க் பல்ஜ் வலி எனது நண்பருக்கு ஏற்பட்டது, என்று நான் கட்டுரையை தொடங்கி இருந்தாலும், உள்ளபடி அந்த வலி எனக்குதான் ஏற்பட்டது.  அக்கட்டுரையின் முடிவில் 'வலி வந்தது எனக்குத்தான்' என்பதை புரிய வைத்திருப்பேன். சிறிய எழுத்துகளில் இருக்கும் அதையும் படித்து என் மீது அன்பு கொண்டவர்கள், 'உங்களுக்கு ஏதோ வலியாமே..? இப்போ எப்படி இருக்கு..?" என்று கேட்கத் தொடங்கி, அதற்கு நான் பதில் அளித்து கொஞ்ச காலம் இப்படியே சென்றது. சிறிய எழுத்துக்கே இப்படி என்றால், 'எனக்குத்தான் வலி' என்று பெரிய எழுத்துகளில் எழுதி இருந்தால்...? சில சமயங்களில் சில சங்கடங்களை தவிர்க்க வேண்டி உள்ளது. எனினும் அப்படி என் மீது அன்பு கொண்டு விசாரித்தவர்களுக்கும் நன்றி.

இன்னும் சிலர் திடீரென ஒரு தொடர்பில்லாத கேள்வியை கேட்டு வலைப்பதிவிற்கு பின்னூட்டமாக அனுப்புவர். ஏதோ என்னிடம் கேட்க வேண்டும் என்ற நோக்கில் அது இருக்கும். அவர்களின் விவரங்கள் பார்த்தால் அது அப்போதுதான் உருவாக்கப்பட்டதாக இருக்கும். இப்படியும் சில நேரங்களில் சில மனிதர்கள்.

வலைப்பதிவில் எழுதுவதால் ஒரு வலைப்பதிவாளருக்கு என்ன பயன்? 

இது ஒரு முக்கிய கேள்வி என்கிறீர்களா? இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்வது?

நீங்கள் எழுதுவதற்கு  யாராவது பணம் கொட்டித் தருகிறார்களா? 'ஒரு பைசா வருமானமும் கிடையாது' என்று  உங்கள் மனது உடனே பதில் சொல்லியிருக்குமே ?

சரி போகட்டும்.. வேறு ஏதேனும் வருமானம் உண்டா, என்ற ஒரு கேள்வியை எழுப்பினால், கூகுள்  'ஆட்சென்ஸ்' என்று ஒரு நிறுவனம் அல்லது அமைப்பு அல்லது ஏதோ ஒன்று (!) நமது வலைப்பதிவில் விளம்பரங்களை வைக்குமாம். அதுவும் வலைப்பதிவு மிகவும் பிரபலமான, பலர் வாசிக்கக் கூடிய ஒன்றாக இருக்க வேண்டும். அவ்வாறு அப்போதைக்கப்போது வைக்கும் விளம்பரங்களின் மீது யாரவது சொடுக்கி, அது சம்பந்தப்பட்ட வலைதளத்திற்கு சென்றால், ஒரு சொடக்குக்கு  ஏதோ 'ஒரு காசு.. ரெண்டு காசு' என்ற சொற்ப வீதத்தில், காசு தருவார்களாம். இந்தச் சங்கதி எல்லா வலைப்பதிவர்களுக்கும் தெரியும். ஆனால் இந்த 'ஆட்சென்ஸ்'-இல் நீங்கள் பதிவு செய்து கொள்ள விரும்பி, அது கேட்கும் தகவல்களை பூர்த்தி செய்து மின்னஞ்சல் வாயிலாக விண்ணப்பம் செய்தால், நமக்கு இரண்டு நாட்கள் கழித்து ஒரு பதில் வரும். அதில் 'உங்கள் வலைப்பதிவின் மொழி ஆட்சென்ஸ் அங்கீகரிக்காத மொழியாக (அதாவது நமது செம்மொழி தமிழ்) இருப்பதால், உங்கள் வலைப்பதிவை ஏற்க முடியாது. எனவே நிராகரிக்கின்றோம்' என்று நமது விண்ணப்பத்தை தள்ளுபடி செய்து விடுவார்கள்.  தமிழ் மொழியில் வெளியாகும்  பதிவுகளை  'ஆட்சென்ஸ்' அங்கீகரிக்க வேண்டும்.

இப்படி பணரீதியாக பெரிய பயன் ஒன்றும் இல்லை. இதை சக பதிவர்கள்  பெரும்பாலும் ஆமோதிப்பார்கள் என்று நினைக்கின்றேன். 'ஆனால் மனரீதியாக ஏதோ ஒரு மகிழ்ச்சி கிடைக்கிறது' என்று சொல்வது எனக்கு புரிகிறது. ஆம், வலைப்பதிவர்களுக்கு கிடைப்பது அந்த மகிழ்ச்சி ஒன்றுதான்.

நாம் வாசித்து புரிந்து கொண்டதை, நமக்கு தெரிந்ததை, நமது சிந்தனைகளை, நாம் கேட்டதை, பார்த்ததை, உணர முடிந்ததை, நமது அனுபவத்தை, கண்டு பிடித்ததை இந்த வலைப்பதிவின் மூலம் வெளி உலகிற்கு எடுத்து சொல்கிறோம். ஒன்றிரண்டு பக்க அளவில்.

சாமானிய மக்கள் இவற்றை  அச்சில் சொந்தமாக கொண்டு வந்து, உலகம் முழுக்க விநியோகம் செய்ய முடியுமா? நிச்சயம் முடியாது. அல்லது வேறு யாரும் பிரசுரம் செய்ய முன் வருவார்களா? வேண்டுமானால் ஒரு முழுப் புததகமாக எழுதி, அது சம காலத்திற்கு பயன் அல்லது மகிழ்ச்சி தருவதாக இருந்தால், பதிப்பாளர்கள் முன் வரலாம். அதற்கும் ஆரம்பத்தில் பணம் தரமாட்டார்கள். பதிப்பாகி வெளி வந்த புத்தகத்தில் 50  அல்லது 100௦௦ புத்தகத்தை ௦௦ தருவார்கள்.

அந்த வகையில் இந்த வலைப்பதிவு பன்மடங்கு சிறந்தது என்றே கூற வேண்டும். நமது நேரம் ஒன்று மட்டும் செலவாகிறது. கருத்துகள் வெளியே உடனுக்குடன் பறக்கிறது, அதுவும் அகிலம் முழுக்க. ஆனால் மனமகிழ்ச்சி ஒன்றை தவிர வேறு பிரதிபலன் ஏதும் இல்லாமல். இதுவும் ஒரு சேவை, அதுவும் இலவசமாக !

மற்றொரு சங்கதியும் இங்கு கவனிக்கத் தக்கது. அதாவது நாம் இணையதளம் வாயிலாக எழுதும் அல்லது பதிக்கும் எல்லாம், அறிவியல் உள்ளவரை இருக்கும். ஒரு கணினி இருந்தால் எங்கும், எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம், வாசிக்கலாம், அச்செடுத்துக் கொள்ளலாம்.  நமது  சிந்தனைகளின் பெட்டகம், இந்த வலைப்பதிவு கருத்துரு. 

ஏடு கூட கிழிந்து விடலாம். ஆனால் ஒரு பதிவை அப்பதிவர் நீக்கினால்  தவிர மற்றவர் நீக்க முடியாது; அழிக்க முடியாது.

இன்று சிறப்பான, பயன் தரக்கூடிய வலைப்பதிவுகள் பல உள்ளன. அவை அடிக்கடி உலகம் முழுக்க உலவப்படுகின்றன.  அவற்றை பெரிய வணிக நிறுவனங்கள் இனம் கண்டு, அவற்றில்  தங்கள் விளம்பரங்களை பதிக்க முன் வர வேண்டும். சில வலைப்பதிவுகளில் இவ்வாறு காண முடிகிறது. ஆனால் இது பரவலாக்கப்பட வேண்டும். இதற்கு  வலைப்பதிவாளர்களுக்கு கணிசமாக ஒரு தொகை தரமுடியாது போனாலும், மாதாமாதம் ஒரு சிறு தொகையை  ஊக்கத் தொகையாக வழங்க அந்நிறுவனங்கள் முன் வர வேண்டும்.

இப்பதிவுலகம் நாளாவட்டத்தில் மிகப் பிரதானமான ஊடகக் களமாக உருவெடுக்கும் வாய்ப்பு உள்ளது. இந்த நேரத்தில் பதிவர்களுக்கு ஒரு சங்கம் அமைக்கப் பெற்றால் இன்னும் சிறப்பாக இருக்கும். பதிவர்கள் சந்திக்கலாம், அவர்களுக்கு நன்மையும், பலனும்  தரும் சங்கதிகளை கூடி விவாதிக்கலாம். 

முடிவில், வலைப்பதிவில் நாம் எழுதும் விடயங்கள் யாரோ ஒருவருக்கு மகிழ்ச்சியை தருகிறது, யாரோ ஒருவர் பயன் பெறுகிறார், யாரோ ஒருவரின் சிந்தனைக்கு விருந்தாகிறது என்ற அளவில் வலைப்பதிவர்கள் அனைவரும் மன மகிழ்ச்சி (ஆத்ம திருப்தி) கொள்கின்றனர். இதுதான் நேரத்தை ஒதுக்கி   எழுதும் பதிவர்களுக்கு கிடைக்கும் மறுபயன். எழுதியதற்கு மறுமொழியும், அதிக ஓட்டும் கிடைத்தால், இந்த மகிழ்ச்சி இரட்டிப்பு ஆகிறது. 

அவ்வாறே நானும் மன மகிழ்ச்சி அடைகின்றேன். நான் சிறிது காலம் சில பின்னடைவு காரணமாக மிக மன வருத்தத்தில் இருந்தேன். அந்த நேரத்தில் இந்த வலைப்பதிவில் அவ்வப்போது எழுதி வந்ததின் வாயிலாக, அந்த வருத்தத்தை திசை திருப்பிக் கொள்ள வழி கிடைத்தது. பதிவர்களுக்கு இப்படியும் ஒரு ஆறுதலை தருகிறது இந்தப் பதிவுலகம்.

திரட்டிகளுக்கு நன்றி !!

எனது பதிவு உள்ளிட்ட மற்ற எல்லா பதிவர்களின் பதிவுகளையும் திரட்டி அளித்து வரும் தமிழ்மணம், tamil10, indli, Thiratti, valaiyugam, thamilbest, valaipookal, ulavu, தமிழ்வெளி, Udanz, yellameytamil ஆகிய வலைதளங்களுக்கு நன்றி தெரிவிக்காது போனால் இக்கட்டுரை முழுமை பெறாது. அந்த வகையில் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.


நன்றி..

வணக்கம்.

55 comments:

DrPKandaswamyPhD said...

என்னே இந்த வலையுலகம்? ஒரு பதிவர் எவ்வளவு முயற்சி எடுத்து 100 பதிவுகள் போட்டிருக்கிறார். அவரை இதுவரை ஒருவரும் பாராட்டவோ, வாழ்த்தவோ இல்லையென்பது மிகவும் வெட்கக் கேடான விஷயம்.

பதிவர் அடவகேட் பி. ஆர். ஜெயராஜன் அவர்கள் இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்து இன்னும் பல நூறாயிரம் பதிவுகள் போட வாழ்த்துகிறேன்.

பீர் | Peer said...

100க்கு வாழ்த்துகள்.

உங்களுக்குத் தெரியாமலும் பலர் "சட்டப் பார்வை"யை ரீடரில் வாசித்தும், பகிர்ந்தும் வருகிறோம். :)

Advocate P.R.Jayarajan said...

//பதிவர் அடவகேட் பி. ஆர். ஜெயராஜன் அவர்கள் இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்து இன்னும் பல நூறாயிரம் பதிவுகள் போட வாழ்த்துகிறேன்.//

Munivar avarkalukku nanri...

Advocate P.R.Jayarajan said...

//உங்களுக்குத் தெரியாமலும் பலர் "சட்டப் பார்வை"யை ரீடரில் வாசித்தும், பகிர்ந்தும் வருகிறோம். ://

Happy..
and
Thanks.

Kousalya said...

முதலில் உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...நூறு பதிவு என்பது எண்ணிகையில் அதிகம் என்பதைவிட அதை ஒவ்வொன்றும் எழுத நீங்க கொடுத்த உழைப்பிற்கும் நேரத்திற்கும் எத்தனை வாழ்த்து சொன்னாலும் போதாது...

உங்கள் எழுத்துக்களில் இருந்து உங்கள் மனதை உணர்வை புரிந்து கொள்ள முடிகிறது, சக பதிவர்கள் மேல் வைத்திருக்கும் மதிப்பை எண்ணி மிக மகிழ்கிறேன்.

உங்கள் பதிவை வாசித்திருந்தும், பின்னூட்டம் போடாமல் சென்றிருப்பேன்...இனி தவறாது தொடருகிறேன்,நல்ல எழுத்துக்கள் என்னை இன்னும் பக்குவபடுத்தும் என்பதால்...!

இன்னும் பதிவுகள் பல பதிவுகள் நீங்க எழுத என் வாழ்த்துக்கள் + பாராட்டுகள்

sakthi said...

100வது பதிவிற்கு வாழ்த்துக்கள் சார்,தொடர்ந்து 1000 வது பதிவிற்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.உங்கள் " disc buldge " பதிவால் மிக்க பயன்பெற்றவன் நான் என்பதை நன்றியுடன் கூறிகொள்கிறேன் .நாம் எழுதும் எழுத்துக்கள் காசுக்காக என்பதை விட மற்றவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் பயன் பெறுகிறது என்பது தான் நம் எழுத்துகளின் மகிழ்ச்சி ,பெருமை அது போதும் .

என் வலை பதிவு சார்பாகவும் http://kovaisakthi.blogspot.com/ அனைத்துலக பதிவர்கள் சார்பாகவும் ,
வாழ்த்துகளும் ,வாழ்த்துகளும்,வாழ்த்துகளும்,வாழ்த்துகளும்,வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன் ,
கோவை சக்தி

♔ம.தி.சுதா♔ said...

மனதார வாழ்த்துகிறேன்.... சகோ..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
மழை காலச் சளித் தொல்லைக்கு வீட்டில் ஒரு சிக்கன மந்திரம் Nuisance cold solution

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ஒரு சில பதிவுகளுக்கு மட்டுமே வந்துபோகும் என்னை ஞாபகம் வைத்துகொண்டதற்க்கு மிக்க நன்றி...

என்னுடைய வாழ்த்துக்களை பதிவு செய்கிறேன்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இந்த வலைப்பூக்கள் நமக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம்.

தாங்கள் குறிப்பிட்ட மாதிரி புத்தகமாக அச்சிடும் போது ஒரு குறுகிய வட்டத்திற்க்குள்ளே அது அடங்கிவிடுகிறது.

வலையில் அவைகளை பதிவிடும்போது இந்த உலகையே வலம்வருகிறது..

என்னுடை இரண்டு கவிதை நூல்களுக்கு கிடைத்த வரவேற்பை விட பதிவுகளில் மூலம் கிடைக்கும் வரவேற்பு அபரிமிதமானது...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

விளம்பரதாரர்கள் நம்முடைய தமிழ் மொழியை கணக்கில் கொள்ளாமல் இருக்கலாம்...

அப்படி விளம்பரம் இல்லாத பட்சத்தில் இவ்வளவு விஸ்வரூபம் எடுக்கும் பதிவுலகம் வருமான நோக்கில் செயல்படும்போது இன்னும் பெரிய வளர்ச்சி பெரும்.


தற்போதைக்கு வருமானத்தை விட மக்களிடைளே நாம் கொண்டுள்ள அன்பும் அறிமுகம் இவைகள் மட்டுமே பொது நண்பரே...

பணத்தில் என்ன இருக்கிறது...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

பதிவர்களை இணைக்கும் பணியில் திரட்டிகளின் பணி மிகவும் உதவிகரமானது...

இந்த திரட்டிகளின் உதவியோடு நம்முடைய நட்பு வட்டம் விரிவடைந்துக் கொண்டே இருக்கிறது...

தொடர்ந்து அன்பில் இருப்போம்....

வெண் புரவி said...

வாழ்த்துக்கள்.. வக்கீல சார். இன்னும் நிறைய பதிவுகளைப் போட்டு எங்களை திணற அடிங்க. அதுக்கு எங்களோட முழு ஆதரவி என்றும் உண்டு.

Advocate P.R.Jayarajan said...

@ Kousalya

//அதை ஒவ்வொன்றும் எழுத நீங்க கொடுத்த உழைப்பிற்கும் நேரத்திற்கும் எத்தனை வாழ்த்து சொன்னாலும் போதாது..//

எனது உழைப்பையும், நேரத்தையும் மதித்து வாழ்த்துரைத்த உங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.

Advocate P.R.Jayarajan said...

@ Kousalya

//உங்கள் எழுத்துக்களில் இருந்து உங்கள் மனதை உணர்வை புரிந்து கொள்ள முடிகிறது, சக பதிவர்கள் மேல் வைத்திருக்கும் மதிப்பை எண்ணி மிக மகிழ்கிறேன்//

புரிந்துணர்வுக்கு நன்றி !

Advocate P.R.Jayarajan said...

@ Kousalya

//நல்ல எழுத்துக்கள் என்னை இன்னும் பக்குவபடுத்தும் என்பதால்...!//

நல்லெழுத்துகள் நிச்சயம் பக்குவப்படுத்தும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

எனது வலைப்பதிவில் சட்டத்துடன் மட்டும் நின்று விடாமல், பல தரப்பட்ட விடயங்களை சொல்லி வருகின்றேன். சட்டம் என்ற ஒன்று எல்லாம் உள்ளடக்கியது.

Advocate P.R.Jayarajan said...

@ Kousalya

//இன்னும் பதிவுகள் பல பதிவுகள் நீங்க எழுத என் வாழ்த்துக்கள் + பாராட்டுகள்//

மீண்டும் மிக்க நன்றி

Advocate P.R.Jayarajan said...

@ Kousalya

//இன்னும் பதிவுகள் பல பதிவுகள் நீங்க எழுத என் வாழ்த்துக்கள் + பாராட்டுகள்//

மீண்டும் மிக்க நன்றி

Advocate P.R.Jayarajan said...

@ sakthi

//100வது பதிவிற்கு வாழ்த்துக்கள் சார்,தொடர்ந்து 1000 வது பதிவிற்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்//

மிக்க நன்றி !

Advocate P.R.Jayarajan said...

@ கோவை சக்தி

//" disc buldge " பதிவால் மிக்க பயன்பெற்றவன் நான் என்பதை நன்றியுடன் கூறிகொள்கிறேன் .//


எனது அனுபவம் உங்களுக்கு பயன் தந்தது என்பதை அறிந்து மகிழ்ச்சி.

Advocate P.R.Jayarajan said...

@ கோவை சக்தி

//நாம் எழுதும் எழுத்துக்கள் காசுக்காக என்பதை விட மற்றவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் பயன் பெறுகிறது என்பது தான் நம் எழுத்துகளின் மகிழ்ச்சி ,பெருமை அது போதும் .//

உள்ளபடி அதுதான் நம்மை எழுத வைத்துக் கொண்டிருக்கிறது.

Advocate P.R.Jayarajan said...

@ kovaisakthi

//என் வலை பதிவு சார்பாகவும் http://kovaisakthi.blogspot.com/ அனைத்துலக பதிவர்கள் சார்பாகவும் ,
வாழ்த்துகளும்,வாழ்த்துகளும்,வாழ்த்துகளும்,வாழ்த்துகளும்,//

தொடர்ந்து வாழ்த்திக் கொண்டிருக்கும் திரு கோவை சக்தி அவர்களுக்கு மீண்டும் நன்றி..

Advocate P.R.Jayarajan said...

@ ♔ம.தி.சுதா♔
மனதார வாழ்த்துகிறேன்.... சகோ..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா

மிக்க நன்றி சகோதரர் திரு ம.தி.சுதா அவர்களே !

Advocate P.R.Jayarajan said...

@ கவிதை வீதி... // சௌந்தர் //

//ஒரு சில பதிவுகளுக்கு மட்டுமே வந்துபோகும் என்னை ஞாபகம் வைத்துகொண்டதற்க்கு மிக்க நன்றி...
என்னுடைய வாழ்த்துக்களை பதிவு செய்கிறேன்..//

தங்களுடைய வாழ்த்துப் பதிவிற்கு எனது நன்றிகளை அன்புடன் பதிவு செய்கின்றேன்..

Advocate P.R.Jayarajan said...

@ கவிதை வீதி... // சௌந்தர் //

//இந்த வலைப்பூக்கள் நமக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம்.
தாங்கள் குறிப்பிட்ட மாதிரி புத்தகமாக அச்சிடும் போது ஒரு குறுகிய வட்டத்திற்க்குள்ளே அது அடங்கிவிடுகிறது//

உண்மை.

நமது எழுத்துக்களை பதிவிட நாம் செலவு செய்ய வேண்டியதில்லை. அதே நேரத்தில் புத்தகமாக வெளியிட வேண்டி எந்தப் பதிப்பகத்தின் வாசலிலும் தவம் இருக்க வேண்டியதில்லை. புத்தக வடிவம் நமது எழுத்துகளை ஒரு குறுகிய வட்டத்திற்குள் வைக்கின்றன. ஆனால் பதிவுலகம் நமது எழுத்துகளை உலகம் முழுக்க கொண்டு செல்கிறது.

Advocate P.R.Jayarajan said...

@ கவிதை வீதி... // சௌந்தர் //
//விளம்பரதாரர்கள் நம்முடைய தமிழ் மொழியை கணக்கில் கொள்ளாமல் இருக்கலாம்...
அப்படி விளம்பரம் இல்லாத பட்சத்தில் இவ்வளவு விஸ்வரூபம் எடுக்கும் பதிவுலகம் வருமான நோக்கில் செயல்படும்போது இன்னும் பெரிய வளர்ச்சி பெரும்//

கண்டிப்பாக ...

Advocate P.R.Jayarajan said...

@ கவிதை வீதி... // சௌந்தர் //

//தற்போதைக்கு வருமானத்தை விட மக்களிடைளே நாம் கொண்டுள்ள அன்பும் அறிமுகம் இவைகள் மட்டுமே பொது நண்பரே...

பணத்தில் என்ன இருக்கிறது...//

பணத்தில் என்ன இருக்கிறது... ஆனால் "வலைப்பதிவில் இவர் நிறைய எழுதி இருக்கிறார்.., அதனால் இவருக்கு ஏதோ நிறைய வருமானம் வருகிறது போல" என்று யாரும் தப்பு கணக்கு போட்டு விடக் கூடாது அல்லவா? இங்கு மன மகிழ்ச்சி மட்டுமே இலாபம்.

Advocate P.R.Jayarajan said...

@ கவிதை வீதி... // சௌந்தர் //

//பதிவர்களை இணைக்கும் பணியில் திரட்டிகளின் பணி மிகவும் உதவிகரமானது...இந்த திரட்டிகளின் உதவியோடு நம்முடைய நட்பு வட்டம் விரிவடைந்துக் கொண்டே இருக்கிறது...//

திரட்டிகளின் பணி முக்கியமானது. அவர்கள் நமது பதிவுகளை இணைப்பதை மேலும் எளிமையாக்க வேண்டும். தமிழ்பெஸ்ட் என்ற திரட்டியின் ஓட்டளிப்பு பட்டை சில மாதங்கள் முன்பு வரை நன்றாக செயல் பட்டு வந்து கொண்டிருந்தது. ஆனால் தற்போது அது எனது வலைப்பதிவில் காட்சிக்கே வரவில்லை. இட்ன்லி என்ற திரட்டிக்கான ஓட்டளிப்பு பட்டையும் வேலை செய்ய வில்லை. அது போல ஓட்டளிப்பு பட்டை மீது சொடுக்கினாலே ஒட்டு விழ வேண்டும். எடுத்துக் காட்டுக்கு சொல்வதென்றால், உ டான்ஸ் என்ற திரட்டியின் ஓட்டளிப்பு பட்டை மீது சொடுக்கினாலே ஓட்டு விழுந்து விடுகிறது. இந்த வசதி இன்னபிற திரட்டிகளிலும் ஏற்படுத்த வேண்டும். மேலும் 'திரட்டி', 'வலையுகம்' போன்ற திரட்டிகளுக்கு ஓட்டளிப்பு பட்டை இல்லை. அதை ஏற்படுத்த அவர்கள் முயல வேண்டும். இவை யாவும் நமது பதிவிற்கு ஒரு அடையாளத்தை வாசகர்கள் மத்தியில் ஏற்படுத்துகின்றன. இன்னும் நிறைய திரட்டிகள் வரவேண்டும்.

Advocate P.R.Jayarajan said...

@ கவிதை வீதி... // சௌந்தர் //

//இந்த திரட்டிகளின் உதவியோடு நம்முடைய நட்பு வட்டம் விரிவடைந்துக் கொண்டே இருக்கிறது...தொடர்ந்து அன்பில் இருப்போம்....//

நிச்சயமாக..

Advocate P.R.Jayarajan said...

@ வெண் புரவி
//வாழ்த்துக்கள்.. வக்கீல சார். இன்னும் நிறைய பதிவுகளைப் போட்டு எங்களை திணற அடிங்க. அதுக்கு எங்களோட முழு ஆதரவி என்றும் உண்டு.//

நன்றி வெண்புரவி சார்.

தங்கள் ஆதரவுடன் தொடர்வேன்.

துபாய் ராஜா said...

அதிக விவரங்களோடு அருமையான பதிவு. செஞ்சுரிக்கு வாழ்த்துக்கள். அப்படியே அடிச்சு ஆடுங்க.

தக்குடு said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் சார்! மேலும் மேலும் நல்ல பயனுள்ள பதிவுகள் எழுத வாழ்த்துக்கள்!

Advocate P.R.Jayarajan said...

@ துபாய் ராஜா
//அதிக விவரங்களோடு அருமையான பதிவு. செஞ்சுரிக்கு வாழ்த்துக்கள். அப்படியே அடிச்சு ஆடுங்க//

தங்கள் உற்சாகமான வாழ்த்துகளுக்கு நன்றிகள்..

Advocate P.R.Jayarajan said...

@ தக்குடு
//மனமார்ந்த வாழ்த்துக்கள் சார்! மேலும் மேலும் நல்ல பயனுள்ள பதிவுகள் எழுத வாழ்த்துக்கள்!//

ரொம்ப தேங்க்ஸ் சார்..
உங்க பதிவுகளும் ரொம்ப நன்னா இருக்கு..
வாழ்த்துகள் ..

ரமேஷ் வெங்கடபதி said...

100க்கு வாழ்த்த போவதில்லை! 1000த்துக்குதான் வாழ்த்தப் போகிறேன்! விரைவில் எட்டிவிடுவீர்கள் தானே!

100க்கு பார்ட்டிதான் தேவை! வலைஞர்கள் உலகம் நீங்களே ஆரம்பித்து வையுங்களேன்!

goma said...

மேலும் பல நூறு காண வாழ்த்துகிறோம்

Advocate P.R.Jayarajan said...

@ ரமேஷ் வெங்கடபதி

//100க்கு வாழ்த்த போவதில்லை! 1000த்துக்குதான் வாழ்த்தப் போகிறேன்! விரைவில் எட்டிவிடுவீர்கள் தானே//

உங்கள் வாய் முகூர்த்தம் பலிக்கட்டும்..

Advocate P.R.Jayarajan said...

@ ரமேஷ் வெங்கடபதி

//வலைஞர்கள் உலகம் நீங்களே ஆரம்பித்து வையுங்களேன்//

உங்களை போன்ற அன்புள்ளங்களின் ஆதரவு இருந்தால் நிச்சயமாக செய்யலாம்.
எனினும் பதிவுலக முன்னோடிகளிடமிருந்து இது குறித்த கருத்துரை ஏதும் வரவில்லையே...?

Advocate P.R.Jayarajan said...

@ ரமேஷ் வெங்கடபதி

//100க்கு பார்ட்டிதான் தேவை//

சேலம் எப்போ வர்றீங்க சார்..?

Advocate P.R.Jayarajan said...

@ goma

//மேலும் பல நூறு காண வாழ்த்துகிறோம்//

மிக்க நன்றி..

சண்முகம் said...

வாழ்த்துக்கள்...

Advocate P.R.Jayarajan said...

நன்றி திரு. சண்முகம்...

வலிபோக்கன் said...

வாழ்க! வளர்க!வாழ்த்துக்கள்!

அப்பாவி தங்கமணி said...

Congrats on your 100th post...

Sumitha said...

மனதார வாழ்த்துகிறேன்..., இன்னும் பல நூறாயிரம் பதிவுகள் போட வாழ்த்துகிறேன்.

Advocate P.R.Jayarajan said...

@ வலிபோக்கன்

//வாழ்க! வளர்க!வாழ்த்துக்க//

nanri...

Advocate P.R.Jayarajan said...

@ அப்பாவி தங்கமணி

//Congrats on your 100th post...//

Thanks...

Anonymous said...

வாழ்த்துகள்

Advocate P.R.Jayarajan said...

@ மென்பொருள் பிரபு

/வாழ்த்துகள்/

Thanks...

தி.தமிழ் இளங்கோ said...

வணக்கம்! தங்களது 99-ஆவது பதிவிலேயே 100-ஆவது பதிவிற்கு வாழ்த்துக்கள் சொல்லி விட்டேன். மீண்டும் ஒருமுறை எனது வாழ்த்துக்கள் முதுகு தண்டுவட வீக்கம்(
Disc Bulge)வலி குறித்த கட்டுரை நல்ல வழிகாட்டி.

Advocate P.R.Jayarajan said...

@ தி.தமிழ் இளங்கோ
//வணக்கம்! தங்களது 99-ஆவது பதிவிலேயே 100-ஆவது பதிவிற்கு வாழ்த்துக்கள் சொல்லி விட்டேன். மீண்டும் ஒருமுறை எனது வாழ்த்துக்கள் முதுகு தண்டுவட வீக்கம்(Disc Bulge)வலி குறித்த கட்டுரை நல்ல வழிகாட்டி//

Nanri ayya..

ஆளுங்க (AALUNGA) said...

நூறாவது பதிவிற்கு வாழ்த்துகள் ஐயா..

நீங்கள் சொல்வது உண்மை தான்...

பிற இதழ்களில் எழுதியோ, புத்தகம் எழுதியோ வாசகர்களைக் குவிப்பதில்லை..

நம் பதிவைப் படித்து அனுபவிப்பவர்களே வாசகர்களாக தொடர்கிறனர்..
அத்துடன், பதிவுகளும் அழியா
நிலையைப் பெறுகிறன..

பணம் சம்பாதிக்க பல வழிகள் உண்டு.. ஆனால், முகமறியா
நண்பர்களின் மனம் சம்பாதிக்க உள்ள வழிகளில் இதுவும் ஒன்று தானே?

எனவே, மன மகிழ்ச்சியே (குறைந்தபட்சம் எனது) பதிவுகளுக்குக் கிடைக்கும் கூலி..
பார்வைகளும், மறுமொழிகளும் அவற்றின் ஊக்கம்

அமைதி அப்பா said...

நீங்கள் குறிப்பிட்டிருப்பது அனைத்தும் சரியே.

இந்தப் பதிவில் என்னை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி.

தங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

Advocate P.R.Jayarajan said...

@ அமைதி அப்பா

//நீங்கள் குறிப்பிட்டிருப்பது அனைத்தும் சரியே.//

கருத்தை அமோதித்ததற்கு நன்றி..

Advocate P.R.Jayarajan said...

@ அமைதி அப்பா

//இந்தப் பதிவில் என்னை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி.//

மகிழ்ச்சி..
மறுமொழியிட்டவர்களை மறப்பது நன்றல்ல..

Advocate P.R.Jayarajan said...

@ அமைதி அப்பா

//தங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்//

நன்றி

Related Posts Plugin for WordPress, Blogger...