என்னைப் பற்றி....

My photo
Salem, Tamil Nadu, India
சொல்கிறேன்..

05 November, 2011

எப்படி இருந்தாலும்.......

மக்கள் பலசமயங்களில் நியாயமில்லதவர்களாக, 
தவறானவர்களாக, சுயநலம் கொண்டவர்களாக உள்ளனர்.
எப்படி இருந்தாலும், அவர்களை மன்னித்து விடு.

நீங்கள் இரக்க குணம் படைத்தவராக இருப்பின்,
மக்கள் உங்களை தன்னலம் கொண்டவர் என்றும்,
உள்நோக்கம் கொண்டவர் என்றும் குறை கூறுவார்;
எப்படி இருந்தாலும், இரக்கத்துடனே இரு.

நீங்கள் வெற்றிகரமானவராக இருப்பின்,
நீங்கள் சில தவறான நண்பர்களையும்,
சில சரியான நண்பர்களையும் வெற்றி காண்பீர்கள்; 
எப்படி இருந்தாலும், வெற்றி பெறு.

நீங்கள் நேர்மையானவராக,
வெளிப்படையானவராக இருப்பின், 
மக்கள் உங்களை ஏமாற்றக் கூடும்; 
எப்படி இருந்தாலும், நேர்மையானவராக, 
வெளிப்படையானவராக இரு.

நீங்கள் பல ஆண்டுகளாக உருவாக்கியதை, 
ஒருவன் ஒரே இரவில் அழித்து விடலாம்; 
எப்படி இருந்தாலும், உருவாக்கிக் கொண்டிரு.

நீங்கள் பிரச்சனையற்றவராக,
மகிழ்ச்சியானவராக இருப்பதாக தெரிந்தால்,
அது மற்றவர்களை பொறாமைப்பட வைக்கும்;
எப்படி இருந்தாலும், மகிழ்ச்சியாக இரு.

இன்று நீங்கள் செய்யும் நல்லதை,
மக்கள் நாளை மறந்து விடுவர்; 
எப்படி இருந்தாலும், நல்லது செய். 
எப்படி இருந்தாலும், உன்னால் முடிந்த சிறந்தது 
எதுவோ அதை உலகிற்கு கொடு.

இறுதி பகுப்பாய்வு முடிவு என்பது
உங்களுக்கும் கடவுளுக்கும் இடையேதான்  உள்ளது;
அது எப்படி இருந்தாலும் உங்களுக்கும் 
அந்த மற்றவர்களுக்கும் இடையே இல்லை 
என்பதை அறியுங்கள். 

- அன்னை தெரசா.21 comments:

சண்முகம் said...

எப்படி இருந்தாலும் கமென்ட் போடுவோம்..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

மன்னிப்பது உலகில் எலலாவற்றிலும் சிறந்தது...

அருமையான படைப்பு... வாழ்த்துக்கள்..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அன்னை தேரேசாவின் குணங்கள் பிரமிக்க வேண்டிய விஷயங்கள்..இவரின் குணங்கள் இனிவரும் உலகில் எதிர்ப்பார்ப்பது மிகவும் படினம்...

Advocate P.R.Jayarajan said...

@கவிதை வீதி... // சௌந்தர் //

//மன்னிப்பது உலகில் எலலாவற்றிலும் சிறந்தது...அருமையான படைப்பு... வாழ்த்துக்கள்.//

Nanri..

Advocate P.R.Jayarajan said...

@ கவிதை வீதி... // சௌந்தர் //
//அன்னை தேரேசாவின் குணங்கள் பிரமிக்க வேண்டிய விஷயங்கள்..
இவரின் குணங்கள் இனிவரும் உலகில் எதிர்ப்பார்ப்பது மிகவும் படினம்..//

unmai...

Advocate P.R.Jayarajan said...

@ சண்முகம்
//எப்படி இருந்தாலும் கமென்ட் போடுவோம்.//

சண்முகம் கமென்ட் போடுவாரோ.. மாட்டாரோ...?!!
எப்படி இருந்தாலும் பதிவு போடுவோம்...

வலிபோக்கன் said...

இதை நீதி தேவன் தேவிகள் படித்து நடிப்பீர்களாக?

Advocate P.R.Jayarajan said...

@ வலிபோக்கன்
//இதை நீதி தேவன் தேவிகள் படித்து நடிப்பீர்களாக?//

நடிப்பீர்களாகவா ? அல்லது நடப்பீர்களாகவா ?

Advocate P.R.Jayarajan said...

@ வலிபோக்கன்
//இதை நீதி தேவன் தேவிகள் படித்து நடிப்பீர்களாக?/

பின்னூட்டதிற்கு நன்றி ..

ஆளுங்க (AALUNGA) said...

நல்லனவற்றையே செய்ய சொல்லும் கருத்து செறிவு மிகுந்த வரிகள்

Advocate P.R.Jayarajan said...

@ ஆளுங்க (AALUNGA)
//நல்லனவற்றையே செய்ய சொல்லும் கருத்து செறிவு மிகுந்த வரிக//

nanri...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

நீங்கள் பல ஆண்டுகளாக உருவாக்கியதை,
ஒருவன் ஒரே இரவில் அழித்து விடலாம்;
எப்படி இருந்தாலும், உருவாக்கிக் கொண்டிரு.// நிதர்சன உண்மை..

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

ஒரு தரமான பதிவு வாழ்த்துக்கள்..

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

முதன் முதலாக உங்கள் தளம் வருகிறேன்.. நன்றாக பயனுள்ளதாக இருக்கிறது..

நன்றி..

Advocate P.R.Jayarajan said...

@ !* வேடந்தாங்கல் - கருன் *!

//முதன் முதலாக உங்கள் தளம் வருகிறேன்.. நன்றாக பயனுள்ளதாக இருக்கிறது..//

தங்கள் வரவு நல்வரவாகுக...!
நன்றி..

Advocate P.R.Jayarajan said...

@ !* வேடந்தாங்கல் - கருன் *!
ஒரு தரமான பதிவு வாழ்த்துக்கள்.

பின்னூட்டதிற்கு நன்றி..

Advocate P.R.Jayarajan said...

@ !* வேடந்தாங்கல் - கருன் *!

//நீங்கள் பல ஆண்டுகளாக உருவாக்கியதை,
ஒருவன் ஒரே இரவில் அழித்து விடலாம்;
எப்படி இருந்தாலும், உருவாக்கிக் கொண்டிரு.//

எவ்வளவு அபாயகரமான அதே நேரத்தில் ஆழமான வரிகள் பார்த்தீர்களா ?

ஒருவன் பல காலமாக நிறைய கனவுகளுடன் உருவாக்கியதை மற்றொருவன் ஒரே இரவில் அழித்து விட்டால் அவன் என்ன ஆவான்?
இந்த வலியை நான் அடைந்து இருக்கின்றேன்..! இருப்பினும் உருவாக்கிக் கொண்டிருக்கின்றேன்..

Advocate P.R.Jayarajan said...

http://jayarajanpr.blogspot.com/

இந்த வலைப்பதிவையும் வாசிக்க அழைக்கின்றேன்..

Muruganandan M.K. said...

நேர்மை, மன்னித்தல், இரக்க உணர்வு, என அன்னை திரேசாவின் அறிவுரைகளைப் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி

Advocate P.R.Jayarajan said...

Thanks for comments sir..

ரமேஷ் வெங்கடபதி said...

மொத்தத்தில் இயல்பாய் இரு! செய்வதை தொடர்ந்து செய்! என்பதே இதன் கருத்து!

உற்சாகப் பதிவுகளைத் தொடரவும்!

Related Posts Plugin for WordPress, Blogger...