என்னைப் பற்றி....

My photo
Salem, Tamil Nadu, India
சொல்கிறேன்..

22 December, 2011

சீனாவில் ஒரு வினோத ஜந்து - படங்கள்

சீனாவில் ஒரு கிராமத்தில் திடீரென ஒரு வினோத ஜந்து (அல்லது விலங்கு) அங்கிருக்கும் வீடுகளில் நுழைந்து மக்களை பயமுறுத்தியது. மிரட்டும் பெரிய கண்கள், சிறிய உருவம், தலையில் முடி இல்லை என அது விசித்திரமாக  உள்ளது. அதன் முகத்தை பார்த்தால் மட்டும், அது குரங்கு இனத்தை சார்ந்ததாக தெரிகிறது. அதை பழத்தாசை காட்டி ஒருவர் லாவகமாக பிடித்து விட்டார். தற்போது அது குரங்கு இனத்தின் ஒரு வகையா என்பதை விலங்கியல் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

அந்த வினோத 'ஏலியனின்' படங்களை பார்த்தால் உங்களுக்கு விவரம் புரியும்.18 comments:

துளசி கோபால் said...

இது தேவாங்கு வகையைச் சேர்ந்ததாக இருக்குமோ!!!!!

Ramani said...

அரிய தகவல்
பதிவாக்கித் தந்தமைக்கு வாழ்த்துக்கள்
த.ம 2

ரமேஷ் வெங்கடபதி said...

இதுதான் சார் தேவாங்கு! பயந்த சுபாவம் கொண்டது! குரங்குஇனம்!

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

உண்மையில் வினோதம் தான்.

தி.தமிழ் இளங்கோ said...

வணக்கம்!
புதிய செய்தியை படத்துடன் தந்தமைக்கு நன்றி! அந்த உயிரினம் நோய்வாய்ப் பட்ட நம்மூர் தேவாங்கு போன்று உள்ளது.

Advocate P.R.Jayarajan said...

@ துளசி கோபால்

//இது தேவாங்கு வகையைச் சேர்ந்ததாக இருக்குமோ!!!!!//

வாங்க துளசிம்மா...

தேவாங்கு மாதிரி தெரியுது... ஆனா தேவாங்கு இல்லை.. தேவாங்கு காது மடல் சிறியதாக இருக்கும்.. மூக்கு பகுதி கூர்மையாக இருக்கும்.. ஆர்வம் காட்டியதுக்கு நன்றி..

Advocate P.R.Jayarajan said...

@ Ramani

//அரிய தகவல் பதிவாக்கித் தந்தமைக்கு வாழ்த்துக்கள் த.ம 2//

வாங்க ரமணி சார்..
கருத்துக்கு நன்றி சார்..

Advocate P.R.Jayarajan said...

@ ரமேஷ் வெங்கடபதி

//இதுதான் சார் தேவாங்கு! பயந்த சுபாவம் கொண்டது! குரங்குஇனம்!//

நானும் அப்படிதான் முதலில் நினைச்சேன் ரம்மி சார்.. ஆனா கொஞ்சம் ஆராய்ச்சி பண்ண போது நிறைய வித்தியாசம் தெரியுது.. இருந்தாலும் அந்த இனத்தின் மரபணுக்கள் இதில் நிச்சயமாக இருக்கக் கூடும்.. கருத்துக்கு நன்றி சார்..

Advocate P.R.Jayarajan said...

@ நண்டு @நொரண்டு -ஈரோடு

//உண்மையில் வினோதம் தான்.//

வாங்க சார்...
உங்க தொடர்கதையோட அடுத்த பார்ட் இன்னும் வரலையே...?
கருத்துக்கு நன்றி சார்..

Advocate P.R.Jayarajan said...

@ தி.தமிழ் இளங்கோ

//வணக்கம்! புதிய செய்தியை படத்துடன் தந்தமைக்கு நன்றி! அந்த உயிரினம் நோய்வாய்ப் பட்ட நம்மூர் தேவாங்கு போன்று உள்ளது.//

வாங்க அய்யா..
கருத்துரைக்கு நன்றி அய்யா.

Advocate P.R.Jayarajan said...

http://www.wildlife.lk/data_files/the_primates/photos/Loris_lydekkerianus_grandis.jpg

இது தேவாங்கு..

வேங்கட ஸ்ரீனிவாசன் said...

நல்ல தகவல்.
படங்களுக்கும் சேர்த்து நன்றிகள்.

Advocate P.R.Jayarajan said...

@ வேங்கட ஸ்ரீனிவாசன்

//நல்ல தகவல். படங்களுக்கும் சேர்த்து நன்றிகள்.//

வாங்க சார்...
உங்கள் மறுமொழிக்கு நன்றி சார்..

ரஹீம் கஸாலி said...

சார்...இது தேவாங்கு + குரங்கின் கலப்பினமாக இருக்குமோ?

Advocate P.R.Jayarajan said...

@ ரஹீம் கஸாலி
//சார்...இது தேவாங்கு + குரங்கின் கலப்பினமாக இருக்குமோ//

கிராஸ் என்பதை கண்டுபிடித்து விட்டீர்களே..!

துரைடேனியல் said...

Sir!
Super thagaval. Padangalum arumai.

Tamilmanam 5.

ஆளுங்க (AALUNGA) said...

வணக்கம்..

கூடுதல் செய்தி: அது ஒரு நோய்வாய்ப்பட்ட வாலில்லா குரங்கு (தேவாங்கு வகை) தான் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்து விட்டனர்.

Advocate P.R.Jayarajan said...

@ ஆளுங்க (AALUNGA)

//கூடுதல் செய்தி: அது ஒரு நோய்வாய்ப்பட்ட வாலில்லா குரங்கு (தேவாங்கு வகை) தான் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்து விட்டனர்.//

ஆய்ந்தறிந்து சொல்லியதற்கு நன்றி..

Related Posts Plugin for WordPress, Blogger...