என்னைப் பற்றி....

My photo
Salem, Tamil Nadu, India
சொல்கிறேன்..

18 November, 2011

'கணவன் - மனைவி' தத்துவங்கள் !
13 November, 2011

பயம் ஒரு மாயை !

நீங்கள் இருட்டைக் கண்டு பயப்படுகிறவர் இல்லை !
அந்த இருட்டில் என்ன இருக்குமோ என்று பயப்படுகிறீர்கள்.

நீங்கள் உயரத்தைக் கண்டு பயப்படுகிறவர் இல்லை !
உயரத்தில் இருந்து கீழே விழுந்து விட்டால் என்னாகும் என்று பயப்படுகிறீர்கள்.

நீங்கள் நம்பிக்கை வைக்க பயப்படுகிறவர் இல்லை !
நினைத்தபடி நடக்குமா என்று பயப்படுகிறீர்கள்.

நீங்கள் உங்களை சுற்றி இருப்பவர்களைக் கண்டு பயப்படுகிறவர் இல்லை !
அவர்கள் உங்களை வெறுத்து விடுவார்களோ என்று பயப்படுகிறீர்கள்.

நீங்கள் காதலிக்க பயப்படுகிறவர் இல்லை !
உங்களை காதலிக்காமல் போனால் என்ன செய்வது என்று பயப்படுகிறீர்கள்.

நீங்கள் மீண்டும் முயற்சி செய்ய பயப்படுகிறவர் இல்லை !
அதுவும் தோல்வியில் முடிந்து விட்டால் என்ன செய்வது என்று பயப்படுகிறீர்கள்.

நீங்கள் மகிழ்ச்சியாக வாழ பயப்படுகிறவர் இல்லை!
அது மற்றவர்களின் பார்வைக்கு ஆளாகுமே என்று பயப்படுகிறீர்கள்.

நீங்கள் தொழில் செய்ய பயப்படுகிறவர் இல்லை !
அது இழப்பு ஏதும் ஏற்படுத்திவிடுமா என்று பயப்படுகிறீர்கள்.

நீங்கள் பணம் சேர்க்க பயப்படுகிறவர் இல்லை !
சேர்த்த பணம் நிற்குமா என்று பயப்படுகிறீர்கள்.

நீங்கள் வயிறு புடைக்க சாப்பிட பயப்படுகிறவர் இல்லை !
சாப்பிடுவது சேராமல் போய் விடுமா என்று பயப்படுகிறீர்கள்.

நீங்கள் செலவு செய்ய பயப்படுகிறவர் இல்லை !
மீண்டும் செலவு செய்ய பணம் வருமா என்று பயப்படுகிறீர்கள்.

நீங்கள் பிரயாணம் செய்ய பயப்படுகிறவர் இல்லை !
ஏதேனும் விபத்து நடந்தால் என்னவாகும் என்று பயப்படுகிறீர்கள்.

Related Posts Plugin for WordPress, Blogger...