என்னைப் பற்றி....

My photo
Salem, Tamil Nadu, India
சொல்கிறேன்..

17 January, 2012

பூஜை அறை எப்படி இருக்க வேண்டும் ?

மனதிற்கு நிம்மதியை தருவது ஆண்டவன் சன்னிதி. அதுபோலவே ஒரு வீட்டில் உள்ள பூஜை அறையும். அது எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சில முக்கிய குறிப்புகள் வருமாறு. 


 • ஒரு வீட்டில் பூஜை அறை வட கிழக்கில் அல்லது வடக்கில் அல்லது கிழக்கில் அமைக்கப்பட வேண்டும். பெரிய வீடாக இருந்தால் வீட்டின் மையப் பகுதியில் பூஜை அறை அமைக்கலாம். 
 • ஒரு பெரிய வீட்டில் இரண்டு தளங்கள் இருந்து எல்லோரும் அந்த வீட்டில் ஒரு குடும்பமாக வசித்தால் அவற்றில் தரை தளத்தில் பூஜை அறை இருக்க வேண்டும்.
 • பூஜை அறையில் கடவுளின் படம்  அல்லது  உருவம் கிழக்கு திசை பார்த்து இருக்க வேண்டும். அதாவது நாம் வணக்கும் போது கடவுளின் படங்கள் கிழக்கு பார்த்து இருக்க வேண்டும். மேற்கு நோக்கியும் இருக்கலாம்.
 • பூஜை அறையின் வழிபடும் பகுதியில் வட கிழக்கு மூலையில் ஒரு பித்தளை சொம்பில் அல்லது டம்ப்ளரில் நீர் பிடித்து  வைக்க  வேண்டும். இந்த நீரை தினமும் மாற்ற வேண்டும்.
 • தென் - கிழக்கு மூலையில் குத்து விளக்கை வைத்து விளக்கேற்ற வேண்டும்.
 • முக்கியமாக கவனிக்க வேண்டியது, பூஜை அறையில் இறந்து போன முன்னோர்களின் புகைப்படங்களை வைக்கக் கூடாது.
 • பூஜை அறையை குப்பைகள் இன்றி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
 • பூஜை அறை சுவர்களின் வண்ணம் வெள்ளை அல்லது இள மஞ்சள் அல்லது நீல நிறத்தில் இருக்க வேண்டும்.
 • பூஜை அறையை வழிபடுவதற்கு, தியானம் செய்வதற்கு மட்டும் பயன்படுத்த வேண்டும். 
 • சில வீடுகளில் இடப் பற்றாக்குறை காரணமாக படுக்கை அறை அல்லது சமையல் அறை சுவர்களில் உள்ள அலமாரிகளை பூஜை அறையாக பயன்படுத்துவதுண்டு. அப்படி இருந்தால் வழிபடும் நேரம் தவிர அந்த அலமாரியை மூடி வைக்க வேண்டும். அதாவது கதவு இருந்தால் அதை அடைத்து வைக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் துணித் திரை கொண்டு மூடி வைக்க வேண்டும். சிலசமயங்களில் கதவு உள்ள மரப் பெட்டிகளில் கடவுள் படங்களை வைத்து வழிபடுவதும் உண்டு. இதை சமையல் அறையின் வடகிழக்கு மூலையில் வைக்கலாம்.
 • கழிப்பறையின் சுவர்களில் உள்ள அலமாரிகளில் மேற்கண்டவாறு பூஜை அறை அமைக்கக் கூடாது. அதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
 • பூஜை அறைக்கு இரண்டு கதவுகள் இருக்க வேண்டும்.  அவை வெளிப்புறமாக திறக்கும்படி இருக்க வேண்டும்.
 • ஒரு பூஜை அறை மாடிப்படிகளின் கீழ் அமைந்து இருக்கக் கூடாது. 
 • பூஜை அறையில் மந்திர உச்சாடனங்களை தினமும் ஒன்றிரண்டு தடவை ஒலிபரப்பாகும்படி செய்ய வேண்டும் அல்லது நாமும் வாய் விட்டு உச்சாடனம் செய்யலாம். இது வீட்டில் நேர்மறை எண்ணங்களை கொண்டு வரும்.
 • அனைத்தையும் விட பூஜை அறையில் மனதை ஒருமுகப்படுத்தி, தீர்க்கமாக நமது பிரார்த்தனையை கடவுளிடம் முன் வைக்க வேண்டும். அது ஒரு நிமிடம் நீடித்தாலும் கூட போதுமானது. 
நன்றி : architectureideas.info. 

21 comments:

goma said...

அருமையான விளக்கம்

ரமேஷ் வெங்கடபதி said...

ஆராய்ந்து அனுபவித்து எழுதப்பட்ட பதிவு! நன்று!

Advocate P.R.Jayarajan said...

@ goma said...
//அருமையான விளக்கம்//

Thanks..

Advocate P.R.Jayarajan said...

@ ரமேஷ் வெங்கடபதி
//ஆராய்ந்து அனுபவித்து எழுதப்பட்ட பதிவு! நன்று!//

Thanks...

sakthi said...

அருமை சார் ,
பயனுள்ள ஆன்மிக விளக்கங்கள் ,நன்றி
நட்புடன் ,
கோவை சக்தி

கோவை நேரம் said...

வாஸ்து கூட பார்பீங்களா.....

Advocate P.R.Jayarajan said...

@ sakthi
//அருமை சார்//

Thanks..

Advocate P.R.Jayarajan said...

@ கோவை நேரம்
//வாஸ்து கூட பார்பீங்களா.....//

ஒரு பயனுள்ள விஷயத்தை பகிர்ந்துகொண்டேன்.. கருத்துரைக்கு நன்றி.

Advocate P.R.Jayarajan said...

@ கோவை நேரம்
//வாஸ்து கூட பார்பீங்களா...../

எங்க வீட்டு பூஜை அறை வாஸ்துபடி இருக்கா என்ற ஆராய்ச்சியின் விளைவு இந்தப் பதிவு...

இராஜராஜேஸ்வரி said...

மிகப்பயனுள்ள பகிர்வுகள்.. நன்றி..

Advocate P.R.Jayarajan said...

@ இராஜராஜேஸ்வரி
//மிகப்பயனுள்ள பகிர்வுகள்..//

நன்றி.

ஸ்ரவாணி said...

ஓர் அருமையான ஆன்மீகப் பதிவு சார்.
அதே போல் தெற்குத் திசை பார்த்தவாறு
எந்த சுவாமி படமும் இருக்கக் கூடாது என்பர்.

துளசி கோபால் said...

எனக்கொரு சந்தேகம் இருக்கு.

பூமியின் தென் கோளத்துக்கும் இதே வாஸ்துதானா?

Advocate P.R.Jayarajan said...

@ ஸ்ரவாணி

//அதே போல் தெற்குத் திசை பார்த்தவாறு எந்த சுவாமி படமும் இருக்கக் கூடாது என்பர்.//

கருத்துக்கு நன்றி சகோதரி..
குருபகவான் படம் வீட்டில் எந்த திசை நோக்கி இருந்தால் உத்தமம்?

Advocate P.R.Jayarajan said...

@ துளசி கோபால்

//பூமியின் தென் கோளத்துக்கும் இதே வாஸ்துதானா?//

இது ஒரு நல்ல கேள்வி.

துளசி கோபால் said...

ஆஹா...... என் கேள்விக்கென்ன பதில்???????

Lakshmi said...

புதிய விளக்கங்கள்.. ஆர்வம் உள்ளவர்களுக்கு பயன் படும்.

Advocate P.R.Jayarajan said...

@ Lakshmi
//புதிய விளக்கங்கள்.. ஆர்வம் உள்ளவர்களுக்கு பயன் படும்.//

Welcome Madam.
Thanks for comments..

Easy (EZ) Editorial Calendar said...

அருமையான விளக்கம்....

நன்றி,
மலர்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

வலைப்பூ தலையங்க அட்டவணை
info@ezedcal.com
http//www.ezedcal.com

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
என் முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
நன்றி.

Advocate P.R.Jayarajan said...

Thanks sir...

Related Posts Plugin for WordPress, Blogger...