என்னைப் பற்றி....

My photo
Salem, Tamil Nadu, India
சொல்கிறேன்..

21 November, 2012

என்று பொருளல்ல....


நான் அமைதியாக இருக்கின்றேன்;
அதனால் எனக்கு சொல்வதற்கு ஒன்றுமில்லை என்று பொருளல்ல.

நான் மகிழ்ச்சியாக இருப்பது போல் தோற்றமளிக்கின்றேன்;
அதனால் எல்லாம் சரியாகச் சென்று கொண்டிருக்கிறது என்று பொருளல்ல.

நான் வாய்விட்டு சிரிக்கின்றேன்;
அதனால் என்  வாழ்க்கையில் பிரச்சனைகள் இல்லை என்று பொருளல்ல.

நான் உன்னை மன்னித்து விட்டேன்;
அதனால் நீ எது வேண்டுமானாலும் செய்யலாம் என்று பொருளல்ல.

நான் உன்னுடன் எல்லா நேரமும் இருக்க முடியவில்லை;
அதனால் உன்னை கவனிக்காமல் விட்டுவிட்டேன் என்று பொருளல்ல.

நான் ஒரு வெகுளி;
அதனால் நீ என்னை எளிதில் ஏமாற்றி விடலாம் என்று பொருளல்ல.

நான் கடுமையானவன்;
அதனால் எனக்காக நீ உன்னை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று நான் எதிர்பார்க்கின்றேன் என்று பொருளல்ல.

நான் உணர்ச்சிகளை வெளிக்காட்டவில்லை;
அதனால் எனக்கு உணர்வுகள் இல்லை என்று பொருளல்ல.

நான் உன்னை விரும்புகின்றேன் என்று சொல்லவில்லை;
அதனால் நான் உன்னை வெறுத்துவிட்டேன் என்று பொருளல்ல.

நான் நேர்மையானவன்;
அதனால் நான் வெளிப்படையானவன் என்று பொருளல்ல.

நான் உன்னை போன்றவன் அல்ல;
அதனால் நான் வித்தியாசமானவன் என்று பொருளல்ல.

நான் அனுமதித்து விட்டேன்;
அதனால் நீ அதை துஷ் பிரயோகம் செய்யலாம் என்று பொருளல்ல.

நான் என் பிரச்சனைகளை பேசவில்லை;
அதனால் அவை மறைந்து விட்டதாக பொருளல்ல.

நான் விட்டுக் கொடுத்திருக்கின்றேன்;
அதனால் அதை நீ ஒரு உரிமையாக எடுத்துக் கொள்ளலாம் என்று பொருளல்ல.

நான் தெரிந்தே தவறிவிட்டேன்;
அதனால் எனக்கு தவறை சரி செய்யத் தெரியவில்லை என்று பொருளல்ல.

நான் எதையும் சொல்லவில்லை;
அதனால் நான் பயப்படுகின்றேன் என்று பொருளல்ல.4 comments:

இராஜராஜேஸ்வரி said...

பொருள் நிறைந்த அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

Advocate P.R.Jayarajan said...

தங்கள் கருத்துரைக்கு நன்றி...
சுமார் 10 மாதங்கள் கழித்து இப்பதிவை இட்டுள்ளேன்....

இராஜராஜேஸ்வரி said...

நீண்ட மாதங்களுக்குப் பிறகான தங்கள் வருகைக்கும் எமது தளத்தில் அளித்த உற்சாகப்படுத்தும் கருத்துரைக்கும் இனிய நன்றிகள்...

Manickam V said...

sir super

Related Posts Plugin for WordPress, Blogger...