என்னைப் பற்றி....

My photo
Salem, Tamil Nadu, India
சொல்கிறேன்..

21 December, 2012

தூண்டுதலுக்கு பலியாகி விடாதே..!!

மீண்டும் என்னால் காப்பாற்ற முடியாது.
"தூண்டுதல்" என்பது  நமது வாழ்வின் ஒரு முக்கிய சக்தி. 

இதை இரண்டு விதங்களில் கூறலாம். 

  • ஒன்று நம்மை பிறர் தூண்டுவது. 
  • மற்றொன்று நமது மனமே நம்மை தூண்டுவது. 

நல்லவர்கள் தூண்டினால் அதனால் நலம் விளையும். தீயவர்கள் தூண்டினால் தீதே ஏற்படும். பிரதிபலன் பாராமல் தூண்டுபவர்கள் நல்லவர்கள். நமது முன்னேற்றத்தில் அக்கறை கொண்டவர்கள். அவர்கள் தூண்டுதல் நம்மை
முன்னேற்றி விடும். அதற்கு கடவுளும் துணை நிற்பார். உலகும் துணை நிற்கும். 

ஆனால் தீயவர்களின் தூண்டுதல்.. ? அப்படியல்ல !! தங்களுக்கென ஆதாயம் இல்லாமல் தூண்ட மாட்டார்கள்.அதனால் பலன் கிடைத்தாலும் அது நிலைத்து நிற்காது. எல்லாமே நமக்கு சாதகமாக நடப்பதாக ஒரு மாயை  அல்லது ஒரு பிரமை ஏற்படும். ஆனால் முடிவோ வேறு விதமாக இருக்கும். அப்போது.. அத்தீயவர்கள் "என்ன செய்வது..? இப்படி ஆகும் என்று நினைக்க வில்லை" என்று கழண்டு  கொள்வார்கள். கடவுள் காப்பாற்ற மாட்டார். துணை நிற்க மாட்டார். 

இது ஒரு விதம் என்றால் நமது மனம் நம்மை தூண்டுவது சற்று வேறுபட்டது. நல்ல மனம் என்றுமே ஜெய்க்கும்.காரணம் நல்ல மனம் நல்ல செயல்களையே செய்யும். தீது தெரியாது. நல்ல எண்ணங்களுக்கு என்றும் ஏற்றம் உண்டு.

அதனாலதான் மனம் போல் வாழ்வு, எண்ணம் போல வாழ்வு  என்றெல்லாம் வழங்கப்படுகிறது.

கடவுள் ஒரு சந்தர்ப்பம் கொடுக்கிறார். அதாகப்பட்டது  மனதால் நல்ல எண்ணம் இருந்தும் பிறர் பேச்சைக் கேட்டு தவறான வழியில் செல்பவருக்கு தன்னை திருத்திக் கொள்ள ஒரு வாய்ப்பை இயற்கை தரத் தவறுவதில்லை.  அதாவது கடவுள் தர மறுப்பதில்லை. தாம் செய்தது தவறு என்று உணர்ந்து கொண்ட பிறகு மீண்டும் அத்தவறை செய்பவரை கடவுள் காப்பாற்ற முன் வருவதில்லை. தண்டிக்க செய்கிறார்.

இன்னா செய்தாரை ஒறுத்தால் அவர்
நாண நன்னயம் செய்துவிடல்.

நன்னயம் பெற்ற பிறகும், இன்னா செய்தால் நிச்சயம் ஒறுக்கப்பட வேண்டும். கிடைத்த பலன் பறி போகும் அல்லது நிலைத்து நிற்காது. தீயவர்களின் தூண்டுதலுக்கு பலியாக வேண்டாம். தீய எண்ணங்களின் தூண்டுதலுக்கு பலியாக வேண்டாம். 

அங்கு கடவுள் சொல்வது,

"மீண்டும் என்னால் காப்பாற்ற முடியாது"

9 comments:

இராஜராஜேஸ்வரி said...

பிரதிபலன் பாராமல் தூண்டுபவர்கள் நல்லவர்கள். நமது முன்னேற்றத்தில் அக்கறை கொண்டவர்கள். அவர்கள் தூண்டுதல் நம்மை
முன்னேற்றி விடும். அதற்கு கடவுளும் துணை நிற்பார். உலகும் துணை நிற்கும்.

சிறப்பான சிந்தனைகள்..

ரமேஷ் வெங்கடபதி said...

தங்களது மீள்வருகை மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது..!

நல்ல சிந்தனைகளையும்..அறிவுரைகளையும் பகிர்ந்து அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்!

வாழ்த்துக்கள்!

Advocate P.R.Jayarajan said...

தங்கள் கருத்துரைக்கு நன்றி...
எழுத்துலகிற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்கிற அவாவிற்கு ஏற்பட்ட தடைகளை தாண்டி வர முயற்சி செய்கின்றேன்.

Advocate P.R.Jayarajan said...

@ இராஜராஜேஸ்வரி said...

//பிரதிபலன் பாராமல் தூண்டுபவர்கள் நல்லவர்கள்//

நல்லவர்கள் யார் என்பதை அடையலாம் கண்டு கொள்ளவும் சில நல்லவர்கள் வேண்டி உள்ளது அம்மா.

Advocate P.R.Jayarajan said...

@ இராஜராஜேஸ்வரி said...

//அவர்கள் தூண்டுதல் நம்மை
முன்னேற்றி விடும். அதற்கு கடவுளும் துணை நிற்பார். உலகும் துணை நிற்கும்.//

நல்லவர்கள் தூண்டுதல் கடவுளின் தூண்டுதல் என்று நம்புகின்றேன்

Advocate P.R.Jayarajan said...

@ ரமேஷ் வெங்கடபதி said...

//தங்களது மீள்வருகை மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது..!//

தங்கள் வரவேற்பிற்கு நன்றி திரு வெங்கடபதி அவர்களே..

நிச்சயம் மீண்டும் வருவேன்.

Advocate P.R.Jayarajan said...

@ ரமேஷ் வெங்கடபதி said...

//நல்ல சிந்தனைகளையும்.. அறிவுரைகளையும் பகிர்ந்து அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்!//

நிச்சயம் செய்வேன்.. தங்கள் வாழ்த்துகள் பலிக்கும்.

தமிழ் காமெடி உலகம் said...

உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி.....

நன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com/

Advocate P.R.Jayarajan said...

https://mail.google.com/mail/u/0/?ui=2&ik=c1f558e358&view=att&th=13be2007bc0d4580&attid=0.1&disp=inline&realattid=f_hb9fnvzx0&safe=1&zw

Related Posts Plugin for WordPress, Blogger...