என்னைப் பற்றி....

My photo
Salem, Tamil Nadu, India
சொல்கிறேன்..

19 January, 2013

பதிவை பிரசுரம் செய்த "ஜூட்டிசன்ஸ் ஆட் பேஜ்" பத்திரிக்கைக்கு நன்றி !

"ஜூட்டிசன்ஸ் ஆட் பேஜ்" - இது சௌராஷ்டிரா மொழி பேசும் எங்கள் இன மக்களுக்காக மட்டுமின்றி எல்லோருக்கும் பயன் தரும் வகையில் பல விடயங்களை தாங்கி சென்னையிலிருந்து மாதமிருமுறை வெளிவரும் பத்திரிகை. 

இதன் நிறுவனர் மற்றும் ஆசிரியர் திரு.எஸ்.ராம ஈஸ்வர்லால் ஆவார். பாரம்பரியமிக்க சௌராஷ்டிரா குடும்பத்தில் இருந்து வந்த இவர், இப்பத்திரிக்கையை பல்லாண்டு காலமாக நடத்தி வருகிறார். சௌராஷ்டிரா மக்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினருடன் நெருங்கிய தொடர்பு கொண்ட இவர், சௌராஷ்டிரா சமூகம் மற்றும் சௌராஷ்டிரா மொழி வளர்ச்சிக்கு தனது பத்திரிகை வாயிலாக அரும் பணியாற்றி வருகின்றார்.


இந்த பத்திரிக்கையில் சௌராஷ்டிரா சமூக செய்திகள், பயன் மிகு கட்டுரைகள், "நீதிமன்றம்" என்ற தலைப்பில் வழக்குரைஞர் திரு பி.ஆர்.ரமேஷ் பாபு அவர்கள் தரும் சட்ட ஆலோசனைகள், வாழ்த்து சேதிகள், திருமண பொருத்தம் தொடர்பான விவரங்கள் ஆகியன வெளி வருகின்றன. வாசகர்கள் பலரை கொண்ட இந்தப் பத்திரிக்கையின் மூன்றாண்டு சந்தா ரூ.200/- மட்டுமே. ஆண்டு சந்தா ரூ.72/-. இது மின் மடல் மூலம் 'பிடிஎப்' கோப்பு வடிவில் உலகெங்கும் அனுப்பி வைக்கப்படுகின்றது. மின்மடல் முகவரி  juttysuns@gmail.com

எனது இந்த வலைப் பதிவு தளத்தில் வெளி வரும் கட்டுரைகளை தனது "ஜூட்டிசன்ஸ் ஆட் பேஜ்" பத்திரிகையில் அவ்வப்போது வெளியிட்டு பெருமை சேர்த்து வரும் இவர், சென்ற 2012-ஆம் ஆண்டை நினைவு  கூர்ந்தும்  மற்றும் இந்த 2013-ஆம் ஆண்டை வரவேற்றும் நான் இந்த வலைப்பதிவு தளத்தில் கடந்த மாத முடிவில் எழுதிய "நினைத்து நினைத்து பார்த்தால்" என்ற கட்டுரையை சிறப்புக் கட்டுரையாக தனது பத்திரிக்கையில் வெளியிட்டு மதிப்பு சேர்த்துள்ளார்.

கட்டுரையை வெளியிட்ட "ஜூட்டிசன்ஸ் ஆட் பேஜ்" -க்கும், அதன் நிறுவனர் மற்றும் ஆசிரியர் திரு.எஸ்.ராம ஈஸ்வர்லால் அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.


கட்டுரை பிரசுரமான பத்திரிகையின் முக்கிய பக்கம் பத்திரிக்கையின் முதற் பக்கம் 


பத்திரிக்கையின் 3-ஆம் பக்கம்


பத்திரிக்கையின் 5-ஆம் பக்கம்பத்திரிக்கையின் 7-ஆம் பக்கம்


ஒரு வலைப்பதிவரின் கட்டுரைக்கு மதிப்பு கொடுத்து பத்திரிக்கை ஒன்று பிரசுரம் செய்தது சக வலைப்பதிவருக்கும் பெருமைதானே..?

என்றும் அன்புடன், 

பி.ஆர்.ஜெ.

11 comments:

சேக்கனா M. நிஜாம் said...

நல்ல முயற்சி !

பத்திரிக்கை அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

பத்திரிக்கையின் வளர்ச்சிக்கு நண்பர்களின் பங்கு மிக அவசியம்.

வெற்றிகரமாக நடத்திட குழுவினருக்கு என் வாழ்த்துகள்...

Advocate P.R.Jayarajan said...

வாழ்த்துரைக்கும், கருத்துரைக்கும் நன்றி திரு.சேக்கனா M. நிஜாம்

Anonymous said...

குறுபான்மை சமூகத்தினை வெளிக் கொணரும் இப்பத்திரிக்கை முயற்சிக்கு வாழ்த்துக்கள், வலைப்பதிவுகள் அச்சில் ஏறுவதை என்றென்றும் வரவேற்கின்றேன், வாழ்த்துக்கள் உங்களுக்கும் .

இராஜராஜேஸ்வரி said...

பதிவை பிரசுரம் செய்த "ஜூட்டிசன்ஸ் ஆட் பேஜ்" பத்திரிக்கைக்கு நன்றி !

ஒரு வலைப்பதிவரின் கட்டுரைக்கு மதிப்பு கொடுத்து பத்திரிக்கை ஒன்று பிரசுரம் செய்தது சக வலைப்பதிவருக்கும் பெருமைதானே..?

அருமையான தங்களின் கட்டுரை பிரசுரமானதற்கு பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..

Advocate P.R.Jayarajan said...

மிக்க நன்றி திரு இக்பால் செல்வன்...

ரமேஷ் வெங்கடபதி said...

நம் எழுத்துக்களுக்கு அங்கீகாரம் கிடைத்து அவை பிற ஊடகத்தில் ..மீள் படைப்பாகும் போது..அடையும் மகிழ்ச்சிக்கு அளவில்லை !

வாழ்த்துக்கள் சார் !

Advocate P.R.Jayarajan said...

@ இராஜராஜேஸ்வரி said...

//அருமையான தங்களின் கட்டுரை பிரசுரமானதற்கு பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..//

தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி...

Advocate P.R.Jayarajan said...

@ ரமேஷ் வெங்கடபதி said...

//நம் எழுத்துக்களுக்கு அங்கீகாரம் கிடைத்து அவை பிற ஊடகத்தில் ..மீள் படைப்பாகும் போது..அடையும் மகிழ்ச்சிக்கு அளவில்லை !//

உண்மையான உணர்வு..
வாழ்த்துகளுக்கு நன்றி ரம்மி சார்...

திண்டுக்கல் தனபாலன் said...

வாழ்த்துக்கள்... தாங்கள் நமது சௌராஷ்டிரா சமூகம் என்று இந்த பகிர்வு மூலம் தான் அறிந்தேன்... தாங்கள் அடையும் மகிழ்ச்சியை நானும் சந்தோசமாக உணர்கின்றேன்... நன்றி...

"ஜூட்டிசன்ஸ் ஆட் பேஜ்" - நிறுவனர் மற்றும் ஆசிரியர் திரு.எஸ்.ராம ஈஸ்வர்லால் அவர்களுக்கு வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்...

Advocate P.R.Jayarajan said...

@ திண்டுக்கல் தனபாலன் said...

//வாழ்த்துக்கள்... தாங்கள் நமது சௌராஷ்டிரா சமூகம் என்று இந்த பகிர்வு மூலம் தான் அறிந்தேன்... தாங்கள் அடையும் மகிழ்ச்சியை நானும் சந்தோசமாக உணர்கின்றேன்... நன்றி...//

ஜுக்கு சொந்தோஷ் தா....

Advocate P.R.Jayarajan said...

@ திண்டுக்கல் தனபாலன் said...

//"ஜூட்டிசன்ஸ் ஆட் பேஜ்" - நிறுவனர் மற்றும் ஆசிரியர் திரு.எஸ்.ராம ஈஸ்வர்லால் அவர்களுக்கு வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்...//

துமி விஸ்வாஸ் கெராஷ் மினி தென்கலேக்குதோ சன்குஷ் தா...

Related Posts Plugin for WordPress, Blogger...