என்னைப் பற்றி....

My photo
Salem, Tamil Nadu, India
சொல்கிறேன்..

09 January, 2013

இனி செல்போனில் அதிக நேரம் பேசுவீர்களா ?

"செல்போன் பயன்படுத்தினால் உடல் ஆரோக்கியத்திற்கு நிறைய பிரச்சனைகள் வருகின்றன" என்பது நாம் அறிந்தது. ஆனால் இது உண்மையா, அல்லது வெறும் சங்கதியா என்பதில் நமக்கு அய்யப்பாடு இருந்து வந்தது என்று சொன்னால் அதை மறுக்க முடியாது. தற்போது இது உண்மைதான் என்று உலக சுகாதார அமைப்பு தனது நெடுநாள் ஆய்வின் முடிவில் கூறியுள்ளது. 

"ரேடியோ பிரிகுவென்சி எலக்ட்ரோ மக்னடிக் பில்டு" [Radiofrequency electromagnetic field (EMF)]  - உங்களை செல்போனில் யாரேனும் அழைத்தவுடன் இந்த மின்காந்த பகுதி அந்த செல் போன் கருவியை சுற்றிலும் உருவாகி விடுகிறது. அது போல செல்போன் கோபுர இடத்திற்கு அருகே இந்த மின் காந்த பகுதி எப்போதும் சுழன்று கொண்டிருக்கிறது. அதாவது இதை மின்காந்த கதிரலை வீச்சு என்றும் சொல்லலாம். இந்தக் கதிர் வீச்சு மனிதர்களுக்கு மூளைப் புற்று நோய் மற்றும் மலட்டுத் தன்மை உள்ளிட்ட உடல் பிரச்சனைகள் பலவற்றை உருவாக்கலாம்  என்று உலகளவில் நடந்த மாநாட்டில் கூறப்பட்டது.

புது தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர்கள் இருவர் உட்பட மொத்தம் பத்து நாடுகளை சேர்ந்த 29 ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொண்ட உலக மாநாடு ஒன்றில் இந்தப் பிரச்னை குறித்து விவாதிக்கப்பட்டது.

விவாத முடிவில், செல்போனை முதல் சில நிமிடங்கள் பயன்படுத்தும் போது நமது உடலில் சில விளைவுகள் உடனடியாக நிகழ்கின்றன என்றும், செல்போன் கோபுரத்தின் அருகில் நிற்கும் போது இந்த காந்தக் கதிர் வீச்சுக்கு நமது உடல் முழுவதும் உட்படுகிறது என்றும் கருத்து தெரிவிக்கப்பட்டது. மேலும் இது கொடுத்த அறிக்கையில், இப்படிப்பட்ட கதிர்வீச்சின் காரணமாக நமது உடலில் ஏற்படும் அபாய விளைவுகள், நீண்ட நேரம் செல்போனை பயன்படுத்துவதால் அதிகரிக்கின்றன என்றும், இது நமது உடலின் இயல்பான போக்கில் மூக்கை நுழைக்கிறது என்றும், சேதமான DNA செல்களை நமது உடல் சரி செய்து கொள்வதை தடுக்கிறது என்றும், நமது உடலுக்கு இயற்கையாகவே உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கிறது என்றும் சுட்டிக்காட்டுகிறது.

செல்போன் கதிர் வீச்சின் காரணமாக ஆணின் விந்தணுக்கள் சேதமாகின்றன என்றும், இது செல்போனில் பேசுவதால் மட்டுமல்லாமல், செல்போனை இடுப்பில் அல்லது இடுப்பு கச்சையில் கட்டிக்கொண்டு இருக்கும் ஆண் மகனின் விந்தணுவை உடனடியாக குறி வைக்கின்றது என்றும், மேலும் கணினியை மடியில் வைத்துக் கொண்டு கம்பியில்லா இணையத்தில் (அதாவது Data Card) உலா வரும் ஆண் நண்பர்களை அதிகம் பதம் பார்க்கின்றது என்றும், இந்த அறிக்கையின் துணை ஆசிரியர் சிண்டி சகே குறிப்பிடுகிறார்.


இந்த ஆய்வில் கலந்து கொண்ட சுவிடன் ஓரிப்ரோ பல்கலைக்கழத்தை சேர்ந்த லேன்னர்ட் ஹர்டெல் என்ற  மற்றொரு ஆராய்ச்சியாளர் கூறுகையில், "செல்போன் பயன்படுத்தவதால், 'Glioma' (தீவிரமான மூளைக் கட்டி) என்ற நோய் ஏற்படுவதாகவும், 'Acoustic Neuroma' (காது மற்றும் மூளையை இணைக்கும் நரம்புகளில் மெல்ல வளரும் கட்டி) என்ற மற்றொரு நோய் மெல்ல உருவாவதாகவும்" கருத்துரைக்கிறார். மேலும், "தற்போது இருக்கும் போது சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் போதுமான அளவில் இல்லை என்றும்" இவர் குறை கூறுகிறார்.

நமது இந்திய நாட்டைப் பொருத்த வரை, செல் போன் கோபுர கதிர் வீச்சு பரவும் எல்லை முன்பு 9.2 w/m2 ஆக இருந்தது. இது இந்த தொடர் உடல் ஆரோக்கிய பிரச்சனை காரணமாக 0.92 w/m2 ஆக குறைக்கப்பட்டுள்ளது. செல்போனை பயன்படுத்தும் போது கதிர் வீச்சை நமது உடல் இழுத்துக் கொள்ளும் அளவின் வீதம் 2 யூனிட்டிலிருந்து 1.6 watt per kg ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை இந்திய தொலைதொடர்புத் துறையின் தொழில் நுட்ப ஆலோசகர் ஆர்.கே.பட்நகர் தெரிவித்துள்ளார். மேலும் செல்போனை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து நமது தொலைத்தொடர்புத் துறை பொது மக்களுக்கு விடுத்த அறிக்கையில், (1) நீண்ட நேரம் செல்போனில் பேசுவதை தவிர்க்க வேண்டும். (2) செல்போனை நேரடியாக காதில் வைத்துக் கொள்வதை தவிர்த்து, 'headset' பயன்படுத்த வேண்டும், என்று கூறியுள்ளது. 

இதய நோய் உள்ளவர்கள் குறிப்பாக இதயத்தில் பேஸ் மேக்கர் கருவி பொருத்தப்பட்டுள்ள நோயாளிகள் செல்போனை பயன்படுத்தும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும், என்று Dr Ashok Seth என்ற மருத்துவர் கூறுகின்றார்.

இனி செல்போனில் அதிக நேரம் பேசுவீர்களா ?
இடுப்புக்கு அருகே செல்போனை கட்டிக் கொள்வீர்களா?

14 comments:

Anonymous said...

arumaiyaana payanulla pathivu !
nandri !

Advocate P.R.Jayarajan said...

நெடுங்காலம் கழித்து எனது வலைப்பதிவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி பல...

Ramani said...

அனைவரும் அவசியம் தெரிந்து கொள்ளவேண்டிய
செய்தியினை பதிவாக்கித் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி
தொடர வாழ்த்துக்கள்

Easy (EZ) Editorial Calendar said...

அனைவரும் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம்......நல்ல பதிவு.....பகிர்வுக்கு மிக்க நன்றி.....

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

ரமேஷ் வெங்கடபதி said...

சார் ..ரொம்ப பயமுறுத்துகிறீர்களே !..செல்போன் கூட பரவாயில்லை ..! மூளை தான் சூடாகும் ! லேப்டாப் சூட்ல எல்லாமே பொரிஞ்சு போயிடும் போல !

Advocate P.R.Jayarajan said...

@ ரமேஷ் வெங்கடபதி said...

//சார் ..ரொம்ப பயமுறுத்துகிறீர்களே !..செல்போன் கூட பரவாயில்லை ..! மூளை தான் சூடாகும் ! லேப்டாப் சூட்ல எல்லாமே பொரிஞ்சு போயிடும் போல //

தங்கள் வருகை நல்வரவாகுக ரம்மி சார்...

அதெப்படி சார் கரெக்டா பாய்ண்டே பிடிக்கிறீங்க...? நீங்கதான் சார் சரியான ஆராய்ச்சியாளர் ....!

நன்றி சார்..

Advocate P.R.Jayarajan said...

@ Ramani said...

//அனைவரும் அவசியம் தெரிந்து கொள்ளவேண்டிய செய்தியினை பதிவாக்கித் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி தொடர வாழ்த்துக்கள்//

தங்கள் வருகைக்கும், கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி ரமணி சார்.

இராஜராஜேஸ்வரி said...

செல்போன் எச்சரிக்கையுடன் பயன்படுத்த அறிவுறுத்தும் சிறப்பான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

Advocate P.R.Jayarajan said...

@ இராஜராஜேஸ்வரி said...

//செல்போன் எச்சரிக்கையுடன் பயன்படுத்த அறிவுறுத்தும் சிறப்பான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.//

தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

Srini Vasan said...

கைத்தொலைபேசியில் பேசும் போது காதிற்கு மிக அருகில் இல்லாமல் பேசுவது நலம் .தொலை தொடர்ப்பு கிடைக்காத போதும் பேசாமல் இருத்தல் நலம் .நல்ல பகிர்வு !

Advocate P.R.Jayarajan said...

@ Srini Vasan said...
//கைத்தொலைபேசியில் பேசும் போது காதிற்கு மிக அருகில் இல்லாமல் பேசுவது நலம் .தொலை தொடர்ப்பு கிடைக்காத போதும் பேசாமல் இருத்தல் நலம் .நல்ல பகிர்வு !//

தங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

rajalakshmi paramasivam said...

செல்போன் அவசியமான ஒன்று தான் .மறுப்பதற்கில்லை.
ஆனால் இத்தனை விளைவுகளா? ஜாக்கிரதையாக உபயோகிக்க வேண்டும் என்பதை உங்கள் பதிவு அறிவுறுத்துகிறது.

உபயோகமான பதிவை பகிர்ந்ததுக்கு நன்றி.

இராஜராஜேஸ்வரி said...

இனிய பொங்கல் திரு நாள்
நல் வாழ்த்துக்கள்.

DiaryAtoZ.com said...

நிச்சயம் நீண்ட நேரம் செல்போனில் பேசுவதை குறைத்துக்கொள்ள வேண்டும். பகிர்விற்கு நன்றி

Related Posts Plugin for WordPress, Blogger...