என்னைப் பற்றி....

My photo
Salem, Tamil Nadu, India
சொல்கிறேன்..

24 February, 2013

ஆசிட் வீச்சுக்கும் முட்டை வீச்சுக்கும் என்ன சம்பந்தம் ?


ஆசிட் வீச்சு ஒரு கொடுங் குற்றம். காயம் அல்லது மரணம் எதுவாக இருந்தாலும் மிகக் கொடுமையாக இருக்கும். அண்மையில் இத்தகு குற்றச் செயல் அதிகரித்து வருவது நாம் ஊடகங்களின் வாயிலாக அறிந்த ஒன்று. இது வருந்தத் தக்கது மற்றும் வேதனைக்குரியது.

ஆகவே ஆசிட் வீச்சு நாம் அறிந்த ஒன்று என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

அது சரி... ஆசிட் வீச்சுக்கும் முட்டை வீச்சுக்கும் என்ன சம்பந்தம் ?


முட்டை வீச்சும் நாம் அறிந்த, ரசித்து சாப்பிடுகின்ற ஒன்று. பரோட்டா கடைகளில் இது பிரசித்தம். பொன் நிறமாக சுட்ட முட்டை வீச்சு சாப்பிட மிக நன்றாக இருக்கும். கூட தொட்டுக்க கோழி கறி சால்னா அல்லது சூடான மட்டன் குருமா இருந்தால் சொல்லவே வேண்டியதில்லை !

ஆனால் இப்போது சொல்லப் போகும் முட்டை வீச்சு சற்று வில்லங்கமானது. இதுவும் ஆபத்தை  விளைவிப்பது. சமூக விரோதிகளின் மற்றொரு சுலபமான ஆயுதம்.

இரவில் கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களில் சென்று கொண்டிருக்கும் போது, அவற்றை நிறுத்தி வழிப்பறியில் ஈடுபட நினைக்கும் கொள்ளையர்கள் தற்போது இந்த முட்டை வீச்சு நுணுக்கத்தை கையாளுகின்றனர் என்று  சர்வதேச குற்றவியல் விழிப்புணர்வு தகவல் ஒன்று கூறுகிறது. அதாவது, கார் கண்ணடி மீது முட்டையை சரமாரியாக வீசுவது. முட்டை உடைந்து அதன் வெள்ளைக்கரு, மஞ்சள் கரு கார் கண்ணாடி மீது பாவும்.


அச்சமயத்தில் பின்வரும் சில அனிச்சை செயல்களை நிச்சயம் தவிர்க்க வேண்டும்:

1. காரை நிறுத்தக் கூடாது. தொடர்ந்து அந்த இடத்தில இருந்து ஓட்டிச் சென்று விட வேண்டும். காரை நிறுத்தி சோதனை செய்ய நினைத்தால் வழிப்பறி உள்ளிட்ட குற்றங்களுக்கு ஆளாவது நிச்சயம். 

2. அடுத்து செய்யக்கூடாத ஒரு முக்கிய செயல் என்னவென்றால், கார் முகப்பு கண்ணாடி மீது பரவிய முட்டை கருக்களை நீக்க, காரை ஓட்டிக் கொண்டே கார் பனெட் மீது பொருத்தப்பட்டிருக்கும் நீர் தெளிப்பான் வாயிலாக நீர் பீச்சக் கூடாது. முட்டைக் கரு மீது நீர் பட்டவுடன் ஒட்டிக் கொள்ளும் தன்மை இன்னும் அதிகரித்து விடும். பசபசப்பு இன்னும் கூடி விடும். இது முகப்பு கண்ணாடி வாயிலாக பாதையை பார்க்கும் திறனில் 92 விழுக்காட்டை குறைத்து  விடும். 

3. அது போல், கார் வைப்பர்  மூலம் அக்கருக்களை துடைக்க முற்படக் கூடாது. கண்ணாடியில் ஓரிடத்தில் விழுந்த முட்டைக் கருவை நாமே கண்ணாடி  முழுக்க தடவி நமது பார்வையை மறைத்துக் கொள்வதற்கு ஒப்பாகும். 

பாதை தெரியாது போனால் காரை நிச்சயம் நிறுத்த வேண்டி வரும். இதுதானே அச்சமூக விரோதிகளின் எண்ணம். அதற்கு நமது மேற்படி அனிச்சை செயல்கள் துணை போய் விடக்கூடாது ! நாமே குற்றச் செயல்களுக்கு பலியாகி விடக் கூடாது.

எனவே எச்சரிக்கை !

13 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லதொரு எச்சரிக்கை பகிர்வு... நன்றி..

ஸ்ரவாணி said...

ஐயையோ , இப்படி எல்லாம் கூட நடக்கிறதா ?
என்னமா வழி கண்டுபிடிக்கிறாங்க ?

சேக்கனா M. நிஜாம் said...

நல்லதொரு ஒப்பீடு !

அனைத்தும் பயனுள்ள தகவல்

தொடர வாழ்த்துகள்...

இராஜராஜேஸ்வரி said...

வில்லங்கமாக இருக்கிறது ..

எச்சரிக்கை ! பயனுள்ளது ..நன்றி ..பகிர்வுக்கு ..

Gnanam Sekar said...

நல்ல தகவல் . நன்றி

Advocate P.R.Jayarajan said...

@ திண்டுக்கல் தனபாலன்
//நல்லதொரு எச்சரிக்கை பகிர்வு... நன்றி..//

ஒரு இடத்திலே வாசிச்சேன்... அதே சொல்லனும்னு மனசுக்கு தோணிச்சு... சொல்லிட்டேன்...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

Advocate P.R.Jayarajan said...

@ ஸ்ரவாணி
//ஐயையோ , இப்படி எல்லாம் கூட நடக்கிறதா ? என்னமா வழி கண்டுபிடிக்கிறாங்க //

ஆமாம் சகோதரி... இது கொஞ்சம் வில்லங்கமான உண்மைதான் .... வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

Advocate P.R.Jayarajan said...

@ சேக்கனா M. நிஜாம்
//நல்லதொரு ஒப்பீடு ! //

ஒப்பிட்டு சொல்லும் போது எது ஒன்றும் மனதில் பதிகிறது என்பதில் எனக்கு நிறைய நம்பிக்கை உள்ளது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சேக்கனா !

Advocate P.R.Jayarajan said...

@இராஜராஜேஸ்வரி
//வில்லங்கமாக இருக்கிறது ..//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அம்மா...

Advocate P.R.Jayarajan said...

@Gnanam Sekar
//நல்ல தகவல்//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி !

புரட்சி தமிழன் said...

இதர்காக ஒரு நான் ஸ்டிக் கண்ணாடி தயாரிக்கனும்போல இருக்கே.

ரமேஷ் வெங்கடபதி said...

சமுதாயம் வஞ்சகமும், கொடியவர்களும் உலவும் வனமாகிவிட்டது..அதிக விழிப்புணர்வு தேவை ! தொடரட்டும் உமது சமூக சேவை !

Advocate P.R.Jayarajan said...

@ ரமேஷ் வெங்கடபதி
//சமுதாயம் வஞ்சகமும், கொடியவர்களும் உலவும் வனமாகிவிட்டது..//

ஏமாந்த நேரத்தில் எதை சுருட்டலாம் என்று காத்திருக்கிறது... வருகைக்கும் கருத்துக்கும் நன்றி....

Related Posts Plugin for WordPress, Blogger...