என்னைப் பற்றி....

My photo
Salem, Tamil Nadu, India
சொல்கிறேன்..

25 February, 2013

பணம் இருக்கும் போதும், இல்லாத போதும்....?பணம் இல்லாத போது, அவன் வீட்டில் உண்கின்றான்;
பணம் இருக்கும் போது, அவன் உயர்தர உணவகத்தில் உண்கின்றான்.

பணம் இல்லாத போது, அவன் வேலைக்கு மிதிவண்டியில் செல்கின்றான்;
பணம் இருக்கும் போது, அவன் உடற்பயிற்சிக்காக மிதிவண்டி ஒட்டுகின்றான்.

பணம் இல்லாத போது, அவன் காலாற நடந்து சென்று உண்கின்றான்;
பணம் இருக்கும் போது, அவன் உண்டது செரிக்க நடக்கின்றான்.

பணம் இல்லாத போது, அவன் தருமம் செய்கின்றன்;
பணம் இருக்கும் போது, அவன் நன்கொடை கேட்கின்றான்.

பணம் இல்லாத போது, அவன் பணக்காரனாக நடந்து கொள்கின்றான்;
பணம் இருக்கும் போது, அவன் ஏழையாக காட்டிக் கொள்கின்றான்.

பணம் இல்லாத போது, அவன் பங்கு வணிகம் ஒரு மோசடி என்கின்றான்;
பணம் இருக்கும் போது, அவன் அது நாட்டின் பொருளாதாரம் என்கின்றான்.

பணம் இல்லாத போது, பணத்தாசை ஒரு பேய் என்கின்றான்;
பணம் இருக்கும் போது, மேலும் பணத்திற்காக பேயாய் அலைகின்றான்.

பணம் இல்லாத போது, உயர் பதவிகள் தனிமையை தருபவை என்கின்றான்;
பணம் இருக்கும் போது, அப்பதவிகளை பெற போராடுகின்றான்.

பணம் இல்லாத போது, சூதாட்டமும் குடியும் கொடுமை என்கின்றான்;
பணம் இருக்கும் போது, அது உயர் சமூகத்தின் அடையாளம் என்கின்றான்.

பணம் இல்லாத போது, அவன் நிம்மதியாக இருக்கின்றேன் என்கின்றான்;
பணம் இருக்கும் போது, அவன் நிம்மதியை தேடுவதாக கூறுகின்றான். 

14 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

உண்மை... உண்மை... பணம் செய்யும் மாயை...

கவியாழி கண்ணதாசன் said...

நீங்கள் சொல்வது சரியே.பணம் என்னும் பேய்எல்லோரையுமே படுத்திடும்

ரமேஷ் வெங்கடபதி said...

பணமே ஜெயம்..பணமில்லாதவன் பிணம் ! பணம் மட்டுமே முக்காலம்!

Advocate P.R.Jayarajan said...

@ திண்டுக்கல் தனபாலன் said...
//உண்மை... உண்மை... பணம் செய்யும் மாயை...//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

Advocate P.R.Jayarajan said...

@ கவியாழி கண்ணதாசன்
//நீங்கள் சொல்வது சரியே.பணம் என்னும் பேய் எல்லோரையுமே படுத்திடும்//

எப்படியும் பேச வைக்கக் கூடியது பணம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

Advocate P.R.Jayarajan said...

@ ரமேஷ் வெங்கடபதி said...
//பணமே ஜெயம்..பணமில்லாதவன் பிணம் ! பணம் மட்டுமே முக்காலம்!//

என்ன தலைவரே.... இன்னொரு உண்மையை பட்டுன்னு சொல்லிட்டீங்க...?

Tamil Kalanchiyam said...

தங்களின் இந்த பதிப்பு மிக மிக அருமை. இந்த பதிப்பை இன்னும் பல நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள, http://www.tamilkalanchiyam.com என்கிற இணையதளத்திலும் பகிரும் மாறு வேண்டிகொள்கிறோம். வாழ்க தமிழ்... வளர்க தமிழ்.

Gnanam Sekar said...

சரியாக கூறினீர்கள்

Raya durai said...

பணம் படுத்தும் பாடு.. மிக அருமையான பகிர்வு

Easy (EZ) Editorial Calendar said...

பணம் மட்டுமே மனிதனை ஆட்டிவைக்கிறது.....

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

இராஜராஜேஸ்வரி said...

பணம் இல்லாத போது, பணத்தாசை ஒரு பேய் என்கின்றான்;
பணம் இருக்கும் போது, மேலும் பணத்திற்காக பேயாய் அலைகின்றான்.

பணம் பந்தியிலே ..!
புத்தியில் பதியுமாறு
பணத்தைப்பற்றி
பாங்காய் உரைத்த மொழிகள் அனைத்தும் அருமை ..!

இராஜராஜேஸ்வரி said...

ஈட்டி எட்டியவரை பாயும் ..
பணம் பாதாளம் வரை பாயும் ..

Ranjani Narayanan said...

பணத்தைப் பற்றிப் பேசிக் கொண்டே போகலாம். பேசலாம் அவ்வளவுதான்!

சேக்கனா M. நிஜாம் said...

சரியாகச் சொன்னீர்கள் !கவனமாக கையாள வேண்டும்.

Related Posts Plugin for WordPress, Blogger...