என்னைப் பற்றி....

My photo
Salem, Tamil Nadu, India
சொல்கிறேன்..

18 April, 2013

ஏண்டி எப்போடி வந்து சப்பாத்தி சுட்டு தரப்போறே...?

ஏண்டி எப்போடி வந்து சப்பாத்தி சுட்டு தரப்போறே...?


ஏன் சார் இதெல்லாம் உங்களுக்கே நல்லா இருக்கா ? இப்படி எல்லாம் ஒரு தலைப்பா என்று நீங்கள் ஒரு மாதிரி கண்டிப்புடன் பார்ப்பதும், கேட்க நினைப்பதும் எனக்கு தெரிகிறது...!!

ஆனால் இதுலே எவ்வளவு பெரிய மகாத்மியம் இருக்கு என்பதை படிக்க படிக்கதான் நீங்க புரிந்து கொள்வீங்க....!!

சார்.... பெண்களுக்கு அழகு உடம்பில் இல்லை... மண்ணுக்கு போற உடம்பு .... கொஞ்ச நேர சந்தோசம்... இதிலே என்ன இருக்கு...?

ஆனா... அவங்க செய்யிற சமையல் இருக்கில்லே....!! அது நல்லா  இருந்தா அவளோட ஆம்பிளை அதாங்க கணவன் என்று சொல்றோமே அவன் காலம் பூராவும் மதி மயங்கி காலடியில் விழுந்து கிடப்பான். அதுலேதான் அவங்களோட அழகே இருக்கு....!! இது  நான் நம்பறது...! மத்தவங்களுக்கு எப்படியோ தெரியாது எனக்கு....!!

சரி போகட்டும்... புருஷன் நாலு காசு சம்பாதிக்க எவ்வளவோ கஷ்டப்படுறான்... என்னன்னோமோ வேலை செய்யறான்..! எத்தனையோ பேர் கிட்ட பேச்சு வாங்கறான்... பல சமயங்களில் அவமானப்படுகின்றான். சில சமயங்களில் வேதனைப்படுகின்றான். அத்தனையும் எதற்கு ? ஒரு சாண் வயிற்று உணவுக்கு.... அதுவும் சுடச்சுட... சுவையாக ....!!

அதை மனைவி செய்து தந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் ? புருஷன் கொடுத்த காசிலே மனைவி சுடச்சுட சப்பாத்தி செய்து தந்தாலும் சரி... இல்லே கூலா கம்மங்க்கூழை  வெங்காயமும், முளகாப்பொடி உப்பு போட்ட மாங்கா அல்லது காய்ஞ்ச முளகா சேர்த்து கொடுத்தாலும் சரி...  எப்படி இருக்கும்...?

காசு சம்பாதிக்கிறதிலே பட்ட கஷ்டமும், அவமானமும், வேதனையும் பறந்து போகும் இல்லே...? என்ன நான் சொல்றது... சரிதானே...?

பொஞ்சாதி சமைச்சு கொடுக்கிறதெ நல்லா வயிறு முட்ட சாப்பிட்டு "ஏவ்" ன்னு ஏப்பம் விட்டுட்டா .... உங்களுக்கு திருப்தி...! நீங்க சந்தோசமா சாப்பிடுறது கண்டு உங்கள் பொஞ்சாதிக்கும் திருப்தி...

ஆனா 'கர்ட்டசி'-ன்னு ஒன்னு இருக்கில்லே ...?  'நீ இன்னிக்கு சமைச்சது எவ்வளவு நல்லா இருக்கு..?' என்று ஒரு வார்த்தை சொல்லிப்பாருங்கள்....! உங்க பொஞ்சாதி மனசு ரொம்ப சந்தோசப்படும்....! போனசாக கூடுதல் சந்தோசங்கள் கிடைக்கும்... (விவரம் தெரிஞ்ச பெரியவங்க சொன்னது...)

எதற்கோ கோபித்துக் கொண்டு தாய் வீட்டில் இருக்கும் பொஞ்சாதிகளிடம் சொல்ல வேண்டிய வார்த்தை என்ன தெரியுமா...?

"ஏண்டி எப்போடி வந்து  சப்பாத்தி சுட்டு தரப்போறே...? மெதுமெதுன்னு நீ சுட்டு தர்ற சப்பாத்தி சாப்பிட்டு எவ்வளவு நாளாச்சு ? ஏண்டி என்னை இப்படி படுத்துறே...? சாரிடி..! எல்லா தப்பும் என் மேலேதான்... போதுமா...? இப்போ உனக்கு சந்தோசம்தானே..? ஆனா... என்ன இருந்தாலும் நீ இப்படி பண்ணி இருக்கக்கூடாது ...! (ஆம்பிளை படக்கென்னு விட்டு தர முடியதில்லே..?)"
இப்படி சொல்லிப்பாருங்களேன்.... கடல் போன்ற பிரச்சனைகளும் கடுகளவாகி மறைந்து விடும்...?

என்ன சார்..? நான் சொல்றது சரிதானே...?


11 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சுவையான பகிர்வு.... ரசித்தேன்... வாழ்த்துக்கள்...

Chellappa Yagyaswamy said...

சப்பாத்தியை விடுங்கள்; சரவண பவனில் சாப்பிட்டாலும் நீ செஞ்ச இட்லி மாதிரி இல்லே...ன்னு சொல்லுங்களேன், அப்புறம் பாருங்க என்ன நடக்குதின்னு! (இதுவும் பெரியவங்க சொன்னது தாங்க!)

இராஜராஜேஸ்வரி said...

படக்கென்னு விட்டு தரமுடியதில்லே..?)"

வாழ்க்கைத் தத்துவத்தை மிக எளிமையாக தந்த பகிர்வுகள்..பாராட்டுக்கள்..

Advocate P.R.Jayarajan said...

@திண்டுக்கல் தனபாலன் said...
//சுவையான பகிர்வு.... ரசித்தேன்... வாழ்த்துக்கள்...//

தங்கள் மறுமொழி எனது பதிவுக்கு மேலும் சுவை சேர்க்கின்றது. நன்றி...

Advocate P.R.Jayarajan said...

@Chellappa Yagyaswamy said...
//சப்பாத்தியை விடுங்கள்; சரவண பவனில் சாப்பிட்டாலும் நீ செஞ்ச இட்லி மாதிரி இல்லே...ன்னு சொல்லுங்களேன், அப்புறம் பாருங்க என்ன நடக்குதின்னு! (இதுவும் பெரியவங்க சொன்னது தாங்க!)//

பெரியவங்க சொல்றீங்க.... கேட்டுகிறது தான் முறை... மரியாதை...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி....

Advocate P.R.Jayarajan said...

@இராஜராஜேஸ்வரி said...
//படக்கென்னு விட்டு தரமுடியதில்லே..?)"

வாழ்க்கைத் தத்துவத்தை மிக எளிமையாக தந்த பகிர்வுகள்..பாராட்டுக்கள்..//

வருகைக்கும் முத்தாய்ப்பான வரியைப் பிடித்து கருத்தை பதிவு செய்தமைக்கும் நன்றி அம்மா...

கோவை நேரம் said...

வீட்டில நாம சமைக்கிற மாதிரி இருந்தா,.,..?

Advocate P.R.Jayarajan said...

@கோவை நேரம் said...
//வீட்டில நாம சமைக்கிற மாதிரி இருந்தா,.,..?//

இது கொஞ்சம் சிந்திக்க வேண்டிய வில்லங்கமான கேள்வி...
ஆனா இதுக்கு பேருதான் விதி என்பது.....!
கருத்துக்கு நன்றி சார்...

Advocate P.R.Jayarajan said...

அதாவது 'வெந்ததை தின்போம்... விதி வந்தால் சாவோம்' என்பது....

minnal nagaraj said...

கடல் போன்ற பிரச்சினை இருந்தாலும் மறைந்து விடுமா?அப்படியானால் குடும்ப கோர்ட்டுகள் காணாமல் போயிருக்கவேண்டுமே? கணவன்கள் விட்டுக்கொடுத்தால் அதை பெண்கள் தங்களுக்கு சாதகமாக எடுத்துக்கொண்டு மேலும் பெண்ணாதிக்கமாக தான் சொல்வதைத்தான் அனைவரும் கேட்க வேண்டும் என்று எதிர்பார்கிறார்களே சின்ன சின்ன சண்டைகளுக்கு ஓகே நல்ல பதிவு

Advocate P.R.Jayarajan said...

@ minnal nagaraj said...
//கடல் போன்ற பிரச்சினை இருந்தாலும் மறைந்து விடுமா?அப்படியானால் குடும்ப கோர்ட்டுகள் காணாமல் போயிருக்கவேண்டுமே? கணவன்கள் விட்டுக்கொடுத்தால் அதை பெண்கள் தங்களுக்கு சாதகமாக எடுத்துக்கொண்டு மேலும் பெண்ணாதிக்கமாக தான் சொல்வதைத்தான் அனைவரும் கேட்க வேண்டும் என்று எதிர்பார்கிறார்களே சின்ன சின்ன சண்டைகளுக்கு ஓகே நல்ல பதிவு//

நன்றி... சின்ன சண்டை பெரிதாகி விடக் கூடாது...!

Related Posts Plugin for WordPress, Blogger...