என்னைப் பற்றி....

My photo
Salem, Tamil Nadu, India
சொல்கிறேன்..

29 April, 2013

மீண்டும் சிறப்பாக காதலிப்போம்...!

இந்த சப்ஜக்ட் பத்தி நான் சுத்தி வளைச்சு பேச விரும்பலே...! சுருக்கமா நச்சுன்னு நாலு வார்த்தை சாரி மூணு வார்த்தை சொல்ல விரும்புறேன்... !! ஐ லவ் யு ! இதுதாங்க அந்த மூணு வார்த்தை.

ஆனா இந்த மூணு வார்த்தையை நாம் எங்கே, எப்போது, எப்படி பயன்படுத்தினோம், இப்போது பயன்படுத்துகின்றோமா  என்று நினைத்து பார்த்தால் நமக்கே ரொம்ப ஆச்சரியமா இருக்கும்.

ரெண்டு வகையான கல்யாணம் நடக்குது.... ஒன்னு காதல் திருமணம். இன்னொன்னு அரேன்ஜிட் மேரேஜ் அதாகப்பட்டது பெற்றோர்கள் பார்த்து நடத்தி வைக்கும் திருமணம்.

காதலிக்கும் போது காதலியை வசீகரிக்க எனென்னமோ பசங்க செய்றாங்க... காதல் வொர்க் அவுட் ஆகிவிட்டது என்றால் டர்ன் திரும்பி விடுகிறது. அதாவது காதலி கூடுமானவரை தனது காதலனை மூட் அவுட் ஆகாம, அக்கம் பக்கம் திசை திரும்பி விடாம பாத்துகிறா .... அதாவது இந்தக் காதல், கல்யாணத்தில் சென்று முடிய வேண்டும்... அப்புறமா எல்லாத்தையும்  பாத்துக்கலாம் ... என்ற எண்ணம் காதலிக்கு வந்து விடுகின்றது. இதை ஒரு நியாயமான அச்ச உணர்வு என்று கூட சொல்லலாம். காதல் பருவத்துக்கும் கல்யாணத்துக்கும் இடையில் ஒன்று அல்லது இரண்டு வருஷம் கேப் கிடைக்கின்றது. சில சமயங்களில் இந்த கேப் அதிகமாகியும் செல்கின்றது.

இது ஒரு பக்கம் என்றால் பெற்றோர்கள் பார்த்து நடத்தி வைக்கும் திருமணம் நிறையவே மாறுபட்டது. ஜாதகப் பொருத்தம், பெண் பார்க்கும் படலம், நிச்சயதார்த்தம், பிறகு திருமணம் என்று நிறைய பிராசஸ் நடக்கின்றது. இப்போதெல்லாம் நிச்சயதார்த்தம் செய்து முடித்த பிறகு ரொம்ப கேப் விட்டு திருமண தேதியை நிர்ணயிக்கின்றார்கள். அதாவது இடைப்பட்ட காலங்களில் மாப்பிள்ளையும் பெண்ணும் செல் பேசியில் பேசிக்கொள்வது, சில சமயங்களில் வாண்டுகளை கூட்டிக் கொண்டு கோவிலுக்கு செல்வது (சாமி கும்பிட்டு விட்டு கொஞ்ச நேரம் கடலை சாப்பிட), இருவரும் சேர்ந்து பத்திரிக்கை டிசைன் பார்ப்பது இப்படி சின்ன சின்ன சுதந்திரங்கள், பெரிய அத்து மீறல்கள் ஏதும் இல்லாமல். அதாவது காதல் செய்கின்றார்களாம்.

இப்படி திருமணதிற்கு முந்திய கால கட்டங்களில் நிறைய ஐ லவ் யு பரிமாறிக் கொள்ளப்படுகின்ற. நூதனமான பரிசுப் பொருட்கள் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன. கட்டிக் கொள்ளப் போகின்ற காதலி கருப்பாக இருந்தாலும் உன் ரோஸ்  நிறத்துக்கு இந்த சுடிதார் ரொம்ப எடுப்பா இருக்கும் என்று யானைக் கலரில்  காதலன் டிரஸ் வாங்கித் தருவது... பைக்கில் கூட்டிச் செல்வது... தேவையில்லாமல் திடீரென நிறுத்தும் விசையை அழுத்துவது. அதாவது பிரேக் போடுவது. உணவகம் அழைத்து சென்று 'வேண்டாம்' என்று மறுத்தாலும் காதலிக்கு, "பாசந்தி வாங்கித் தருவது... முடிவில் 'பீச் மெல்பா' அல்லது 'கசட்டா' ஐஸ்கிரீம் வாங்கித்தருவது. இதற்கு இடையில் காதலி அல்லது கட்டிக் கொள்ளப் போகின்றவள், "எனக்கு வெஜ் பிரைடு  ரைஸ் வேண்டும்" என்று கேட்டால், உடனே காதலன், "அதை விட செஸ்வான் பிரைடு  ரைஸ் சாப்பிடலாமே ... ரொம்ப நல்லா இருக்கும்... தொட்டுக்க செட்டிநாடு கிரேவி சூப்பரா இருக்கும் " என்று வாங்கித் தந்து தனது அன்பை வெளிப்படுத்துவது.

பீச்சுக்கு போனால் காதலிக்கு அங்கு விற்கும் சுட்ட மீன் சாப்பிட ஆசை வந்து விடும். எண்ணையில் இட்டு கருவாடு கணக்கில் கருப்பாக வறுத்து தொங்க விடப்பட்டிருக்கும் அந்த மீனை ஒரு சின்ன குழந்தை போல காதலி கை காட்ட, மீனே சாப்பிடாத அந்தக் காதலன் நாத்தம் குடலை புரட்டினாலும், ஒரு மாதிரி தம் கட்டி அதை வாங்கித் தருவது. காதலி அந்த மீனை இரசித்து தின்பதை, கையால் மூக்கை பிடித்து தனது அவஸ்தையை வெளிக்காட்டிக் கொள்ளாமல்,  அருகில் அமர்ந்து புன் சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருப்பது. "ஏன் ... ஃபிரஷ் மீனை வாங்கி, வீட்டிலே நல்ல சுத்தம் செய்து சாப்பிடலாமே?" என்று கேட்டால், உடனே "உங்க வீட்டிலே மீன் சாப்பிட மாட்டாங்க இல்லே... அதனாலே எங்க வீட்டிலே மீன் வாங்கி செய்றதையே எங்க அம்மா நிறுத்திட்டாங்க இல்லே" என்று ஒரு கண்ணடித்து பதில் 'ஐ லவ் யு'-வை வெளிப்படுத்துவது.

அதுபோல் "பொழுதென்னைக்கும் என்னையே நினைச்சிகிட்டு இருக்காமே, வேலைக்கு சாப்பிடனும், நல்ல தூங்கணும், உடம்பே கெடுத்துக்க கூடாது, சமத்தா ஆபிஸ் போகணும்... சிகரட் குறைச்சுக்கனும்... கிணத்து வெள்ளத்தை ஆத்து வெள்ளம் அடிச்சிட்டு போய்டாது..." என்றெல்லாம் காதலனை குழந்தையாய் நினைத்து காதலி அறிவுரை சொல்வது. திடீரென "உங்ககிட்டே எனக்கு ரொம்ப பிடிச்சதே, உங்க முரட்டு கையிலே நெருக்கமா கொசகொசன்னு, கருகருன்னு  வளந்து இருக்கிற இந்த கருப்பு முடிதான்..." என்று வெட்கத்துடன் சொல்வது... இப்படி ஒன்னு இல்லே... ரெண்டு இல்லே... எண்ண  முடியாத அளவுக்கு 'ஐ லவ் யு' ஜிவ்ன்னு பறக்கும்.எல்லாம் சரிதானுங்க.... திருமணம் ஆனா பிறகு இந்தக் காதல் உண்டா...? ஐ லவ் யு உண்டா...? இந்தக் கேள்விக்கு பட்டென பதில் சொல்ல முடியுமா..? 


எனவே திருமணம் ஆனா பிறகும் முன்பு போலவே மீண்டும் காதலிப்போம் ... அதுவும் இன்னும் சிறப்பாக... எங்கேயாவது தவறு நடந்திருக்கிறது என்று தெரிந்து கொண்டால், அதை திருத்தி கொண்டு ஜம்மென்று காதலிக்க வேண்டும். 

ஆனா ஒரு விஷயம் .... திருமணம் ஆனா பிறகு அதே தம்பதிகள் மீண்டும் நல்லா காதலிக்கணும்.... மாத்தி வேற யாரையாவது காதலிக்கக் கூடாது... அப்புறும் சட்ட சிக்கல் ஆகி விடும் ! ஏதோ சொல்லனும்ன்னு தோணிச்சு சொல்லிட்டேன் !!

வணக்கம் !

Related Posts Plugin for WordPress, Blogger...