இலங்கை யாழ்ப்பாணத்தில் நடைபெறவிருக்கும் இந்த மாநாட்டில் திருவள்ளுவர் சிலை ஒன்று நிறுவப்படும் என்றும், முன்னதாக அச்சிலை தமிழ்நாட்டிலிருந்து கொழும்பு, கண்டி, வவுனியா வழியாக ஊர்வலமாக கொண்டு செல்லப்படும் என்றும் இதற்கான ஏற்பாடுகளை செய்துவரும் தஞ்சாவூரைச் சேர்ந்த செம்மொழிப் போராளி உடையார்கோயில் குணா தெரிவித்தார்.
இவர் தஞ்சாவூரில் தமிழ்த்தாய்க்கு ஐம்பொன்னாலான 130 கிலோ எடையுள்ள சிலை எடுத்தவர் என்பதும், அதுபோல் அந்தமான் தமிழர் சங்கத்திற்கு தமிழ்த் தாய் சிலை வழங்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமது வாழ்நாளில் உலகெங்கும் 25 திருவள்ளுவர் சிலைகளை நிறுவுவதை இலட்சியமாக கொண்ட உடையார்கோயில் குணா, யாழ்ப்பாணத்தில் நடைபெற உள்ள இரண்டாவது உலக திருக்குறள் மாநாட்டிற்கான முறைப்படியான அழைப்பிதழை இலங்கை சிறப்பு பகுதிகள் மேம்பாட்டு அமைச்சர் வே.இராதாகிருஷ்ணனிடம் அண்மையில் வழங்கி மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தார். இதன்போது உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் இலங்கைக்கான தலைவர் தே.செந்தில் வேலவர், மூத்த ஊடகவியலாளர் கே.பொன்னுத்துரை ஆகியோரும் உடன் இருந்தனர்.
7 comments:
Great. MR.Guna is an expert in conducting such conferences. By Thiruvalluvars grace, I hope to attend.
மகிழ்வான செய்தி
/Great. MR.Guna is an expert in conducting such conferences. By Thiruvalluvars grace, I hope to attend./
Yes sir... He has taken sincere efforts to do it in grand manner. Thanks for the comment.
/மகிழ்வான செய்தி/
நன்றிங்க அய்யா
சிறப்பான செய்தி...
நன்றி ஐயா...
மகிழ்ச்சி அளிக்கிறது மாநாடு வெற்றிபெற வாழ்த்துக்கள்
மகிழ்ச்சியான செய்தி மாநாடு வெற்றி பெற வாழ்த்துக்கள்
Post a Comment